search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாலிபர் சிறையில் அடைப்பு"

    • 8 மூட்டைகளில் 400 கிலோ ரேஷன்அரிசி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
    • ஆட்டோவை பறிமுதல் செய்து முனியப்பனை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

    தருமபுரி,

    குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு காவல்துறை இயக்குநர் வன்னியப்பெருமாள் உத்திரவுப்படி ரேசன் அரிசி கடத்தலை தடுக்கும் பொருட்டு கோவை மண்டல காவல் கண்காணிப்பாளர் பாலாஜி மேற்பார்வையில் தருமபுரி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல் உதவி ஆய்வாளர் மோகன் தலைமையில் போலீசார் வாகனச்சோதனை நடத்தி னர்.

    இதில் செம்மன அள்ளி பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகத்திற்கு இடமாக வந்த ஆட்டோவை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 8 மூட்டைகளில் 400 கிலோ ரேஷன்அரிசி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

    ஆட்டோவை ஓட்டி வந்த கோட்டை வைரவள்ளியை சேர்ந்த கணேசன் மகன் முனியப்பனை கைது செய்து போலீசார் விசாரித்ததில் அவர் மேலும் பதுக்கி வைத்திருந்த 620 கிலோ ரேசன் அரிசியையும் கைப்பற்றினர்.

    கைப்பற்றப்பட்ட 1020 கிலோ ரேசன் அரிசியை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.

    கடத்த லுக்கு பயன்படு த்தப்பட்ட ஆட்டோவை பறிமுதல் செய்து முனியப்பனை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

    • 8-ம் வகுப்பு வரை படித்து விட்டு, மேற்கொண்டு படிக்காமல் வீட்டில் இருந்து வந்தார்.
    • கர்ப்பமானதால் அடிக்கடி வாந்தி, மயக்கம், உடல் சோர்வு ஏற்பட்டது.

    மாரண்டஅள்ளி,

    தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அடுத்த சிக்கதோரண பெட்டம் கிராமத்தை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் 8-ம் வகுப்பு வரை படித்து விட்டு, மேற்கொண்டு படிக்காமல் வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில் இச்சிறு மியும் மகேந்திரமங்கலம் குழிக்காடு கிராமத்தைச் சேர்ந்த தேவராஜ் (வயது 27) என்ற வாலிபரும் காதலித்து வந்தனர்.

    இந்நிலையில் சிறுமி கடந்த ஜூன் மாதம் 1-ம் தேதி வீட்டை விட்டு வெளி யேறி பிக்கனஅள்ளியில் உள்ள பெருமாள் கோவிலில் வாலிபருடன் திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்தார்.

    இந்நிலையில் சிறுமி கர்ப்பமானதால் அடிக்கடி வாந்தி, மயக்கம், உடல் சோர்வு ஏற்பட்டது. இதனால் சிறுமியை தருமபுரி அரசு மருத்து கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அவரை மருத்துவர்கள் பரிசோதித்த போது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இது குறித்து மருத்துவர்கள் மாரண்ட அள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் மாரண்ட அள்ளி இன்ஸ் பெக்டர் சுப்ர மணியம் போக்சோ வழக்கு பதிவு செய்து வாலிபரை கைது செய்து தருமபுரி சிறையில் அடைத்தார்.

    • நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் தோட்டத்தில் வேலை செய்து கொண்டு இருந்தார்.
    • மேலும் பீரோவில் வைத்திருந்த ரூ.50 ஆயிரம் திருட்டு போனது தெரியவந்தது.

    மாரண்டஅள்ளி, 

    தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி இ.பி. காலனியை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 70). விவசாயி.இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் தோட்டத்தில் வேலை செய்து கொண்டு இருந்தார்.

    பின்னர் வேலை முடிந்த பின்னர் அவர் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த துணிமணி உள்ளிட்ட பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் வைத்திருந்த ரூ.50 ஆயிரம் திருட்டு போனது தெரியவந்தது.

    இதுகுறித்து மாரியப்பன் மாரண்டஅள்ளி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது காந்திநகரை சேர்ந்த அஜித் (எ) குமரன் (27) என்பவர் மாரியப்பன் வீட்டில் பணத்தை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். கைதான அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தருமபுரி கிளை சிறையில் அடைத்தனர்.

    • நாயை கொன்று படத்தை முகநூலில் பதிவிட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    • இதனையடுத்து தினேஷ் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தபட்டு கோபி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.

    சென்னிமலை:

    சென்னிமலை அருகே செருப்பின் மீது நாய் அசிங்கம் செய்ததால் நாயை கொன்று அதன் படத்தை முகநூலில் பதிவிட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    முகநூல் பக்கத்தில் கடந்த 9-ந் தேதி இறந்து கிடந்த நாயின் புகைப்படம் ஒன்றை ஒருவர் பதிவிட்டு அதில் "தான் வாங்கி வெச்ச புது செருப்புல அடிக்கடி அசிங்கம் செய்து வந்ததால் போட்டு தள்ளிட்டேன்" என பதிவிட்டு இருந்தார்.

    இதனை பார்த்த ஈரோடு பழையபாளையம், சுத்தானந்தன் நகரில் வசிக்கும் விலங்குகள் நல அமைப்பை சேர்ந்த பிரேம்குமார் என்பவர், நாயை கொன்று முகநூலில் பதிவிட்ட நபர் மீது விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னிமலை போலீசில் புகார் செய்தார்.

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தபோது, நாயை கொன்று முகநூலில் பதிவிட்ட நபர் தேனி மாவட்டம், பெரியகுளம், மங்களம் பகுதியை சேர்ந்த தினேஷ் (வயது 25) என்றும்,

    இவர் தற்போது ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே ஈங்கூரில் தங்கியிருந்து கட்டுமான பணிகளுக்கு சென்ட்ரிங் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.

    இதனையடுத்து தலைமறைவாக இருந்த தினேசை கைது செய்ய போலீசார் தேடி வந்த நிலையில் சென்னிமலை அருகே ஈங்கூர் நால்ரோடு பகுதியில் தினேஷ் இருப்பது போலீசாருக்கு தெரிய வந்தது.

    பின்னர் உடனடியாக விரைந்து சென்று அவரை கைது செய்தனர். இதனையடுத்து தினேஷ் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தபட்டு கோபி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.

    • ஆத்திரத்தின உச்சிக்கு சென்ற நந்தகோபால், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து இளங்கோ வயிற்றில் குத்தினார்.
    • இந்நிலையில் தப்பி ஓடிய இளங்கோவை நேற்று இரவு ஈரோடு அரசு மருத்துவமனை போலீசார் கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சாமிநாத புரத்தை சேர்ந்தவர் நந்தகோபால் (29). இவரது மனைவி ராஜேஸ்வரி (29). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த திருமண மாகாத இளங்கோ (23) என்ற வாலிபருடன் ராஜேஸ்வரிக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியதாக கூறப்படுகிறது. அடிக்கடி இளங்கோ, ராஜேஸ்வரி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர்.

    இது பற்றி நந்தகோபாலுக்கு தெரிய வந்தது. மனைவியை நந்த கோபால் கண்டித்துள்ளார். ஆனாலும் அவர் இளங்கோவுடன் பழகுவதை கைவிடவில்லை என கூறப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று முன்தினம் சாவடிப் பாளையம் பகுதியில் உள்ள மறைவான இடத்தில் ராஜேஸ்வரியும், இளங்கோவும் சந்தித்து பேசி கொண்டிருந்தனர். அப்போது பின் தொடர்ந்து வந்த நந்தகோபால் அவர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.

    இதில் அவர் களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திர மடைந்த நந்தகோபால் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து இளங்கோ வையும், ராஜேஸ்வரியையும் குத்தினார்.

    இதில் ராஜேஸ்வரி முகத்திலும், இளங்கோவின் கையிலும் காயம் ஏற்பட்டது. பின்னர் நந்தகோபால் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

    இதனையடுத்து காயமடைந்த 2 பேரும் ஈரோடு அரசு ஆஸ்பத்தி ரியில் சிகிச்சை பெறுவதற்காக அனுமதிக்கப்பட்டனர். ராஜேஸ்வரி பெண்கள் உள்நோயாளி பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் நேற்று அதிகாலையில் நந்தகோபால் மனைவி ராஜேஸ்வரி தேடி ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். ராஜேஸ்வரியை சிகிச்சை பெற்று வரும் பெண்கள் சிகிச்சை உள்நோயாளிகள் வார்டுக்கு நந்தகோபால் சென்றார்.

    அங்கு ராஜேஸ்வரியை சந்திக்க இளங்கோவும் வந்திருந்ததால் ஆத்திரத்தின உச்சிக்கு சென்ற நந்தகோபால், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து இளங்கோ வயிற்றில் குத்தினார்.

    இதைப்பார்த்த மற்ற நோயாளிகள் பதறி அடித்து கொண்டு ஓடினர். நந்த கோபாலும் ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே தப்பி ஓடி விட்டார். கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த இளங்கோவை டாக்டர்கள் மீட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இந்நிலையில் தப்பி ஓடிய இளங்கோவை நேற்று இரவு ஈரோடு அரசு மருத்துவமனை போலீசார் கைது செய்தனர். பின்னர் இளங்கோ நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    ×