search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுரை மண்டல அதிகாரி"

    ஒன் இந்தியா-ஒன் பாஸ்போர்ட் திட்டத்தின் கீழ் பாஸ்போர்ட் வழங்கும் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதன்படி இந்தியாவில் எந்தப்பகுதியில் இருந்தாலும் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கலாம்.
    மதுரை:

    மதுரை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி அருண் பிரசாத் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    இந்தியாவில் “ஒன் இந்தியா-ஒன் பாஸ்போர்ட்” திட்டத்தின் கீழ் பாஸ்போர்ட் வழங்கும் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதன்படி இந்தியாவில் எந்தப்பகுதியில் இருந்தாலும் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கலாம்.

    அவர்கள் சம்பந்தப்பட்ட அலுவலகத்தில்தான் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை.

    உதாரணமாக மதுரையைச் சேர்ந்தவர் பெங்களூரில் பணிபுரிந்தால் அவர் அங்கிருந்தவாறு பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கலாம். போலீஸ் விசாரணை மட்டும் மதுரையில் நடைபெறும். இந்த விசாரணை முடிந்தபிறகு சம்பந்தப்பட்டவரின் பெங்களூர் முகவரிக்கே பாஸ்போர்ட் அனுப்பி வைக்கப்படும். அதே போன்று பாஸ்போர்ட் விசாரணையும் எளிமைப்படுத்தப்பட்டு உள்ளது.

    கிரிமினல் குற்றவாளிகள் மற்றும் வழக்கு நிலுவையில் உள்ளவர்களை தவிர மற்றவர்களுக்கு பாஸ்போர்ட் விசாரணை அவசியம் இல்லை.

    செல்போனில் “எம்.பாஸ்போர்ட் சேவா” என்ற ஆப்பை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதன் வாயிலாக பாஸ்போர்ட் விசாரணைக்கு ஆஜராக வேண்டிய நேரம், தேதி ஆகியவற்றை விண்ணப்பதாரர்களே முடிவு செய்து கொள்ள முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Passport
    ×