search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மக்கள் கூட்டம்"

    • ஈரோடு ஜவுளி சந்தைகளிலும் இன்று வழக்கத்தை விட கூட்டம் அதிகமாகவே இருந்தது.
    • இதனால் முன்னெச்சரிக்கை நடவடி க்கையாக போலீசார் சார்பில் பாதுகாப்பு போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    தீபாவளி பண்டிகை வரும் 24-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. தீபாவளிக்கு இன்னும் 15 நாட்களை இருப்பதால் தீபாவளியை கொண்டாட மக்கள் தயாராகி வருகி றார்கள். புத்தாடை அணிந்து, பட்டாசுகள் வெடித்து உற்சாகமாக மக்கள் தீபாவளியை வரவேற்பார்கள்.

    இந்நிலையில் தீபாவளி க்கு துணிமணிகள் வாங்க ஈரோடு கடை வீதிகளில் இன்று வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    குறிப்பாக மணிக்கூண்டு முதல் பன்னீர்செல்வம் பார்க் வரை சாலையின் இருபுறமும் ஏராளமான ஜவுளிக்கடைகள் உள்ளன. இதேப்போல ஈஸ்வரன் கோவில் வீதி, ஆர்.கே.வி. ரோடு வீதிகளில் ஏரா ளமான ஜவுளிக்கடைகள் நகை கடைகள் உள்ளன.

    தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் மக்கள் கடந்த சில நாட்களாக துணிமணிகளை வாங்கி வருகின்றனர். அதிலும் குறிப்பாக இன்று ஞாயிற்று க்கிழமை என்பதால் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாகவே இருந்தது. ஜவுளிக் கடைகளில் மக்கள் போட்டி கொண்டு துணி களை வாங்கி சென்றனர்.

    ஈரோடு ஜவுளி சந்தைகளிலும் இன்று வழக்கத்தை விட கூட்டம் அதிகமாகவே இருந்தது. மற்ற இடங்களை காட்டிலும் இங்கு ஜவுளி விலை குறைவாக இருப்பதால் கூட்டம் அதிகமாகவே இருந்தது.

    இதனால் ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் முதல் மணிக்கூண்டு வரை கூட்ட நெரிசலால் வாகன போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக பெண்கள் கூட்டம் அதிக மாகவே காணப்பட்டது. இன்னும் ஒரு வாரத்தில் பட்டாசு விற்பனையும் சூடு வைக்க தொடங்கும் என்பதால் இந்த பகுதிகளில் கூட்டம் மேலும் அதிகரித்து காணப்படும்.

    இதனால் முன்னெச்சரிக்கை நடவடி க்கையாக போலீசார் சார்பில் பாதுகாப்பு போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    காலாண்டு தேர்வு முடிந்து நாளை 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பதால் ஈரோடு பஸ் நிலையம், ெரயில் நிலையங்களில் வழக்கத்தை விட இன்று பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. குறிப்பாக ஈரோடு வழியாக செல்லும் அனைத்து ெரயில்களிலும் கூட்டம் நிறைந்து காணப்பட்டது. சொந்த ஊருக்கு சென்ற அனைவரும் மீண்டும் ஈரோடு நோக்கி திரும்பி வருகின்றனர்.

    • சரஸ்வதி பூஜையை முன்னிட்டு கூடினர்
    • போட்டி போட்டு பூக்கள் வாங்கி செல்கிறார்கள்.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் தோவா ளையில் புகழ் பெற்ற பூச் சந்தை உள்ளது. ஆரல் வாய்மொழி, ராதாபுரம், குமாரபுரம், புதியம புத்தூர், மாடநாடார் குடி யிருப்பு ஆகிய பகுதிகளிலிருந்து பிச்சிப்பூ, சேலத்திலிருந்து ஆரளி, மஞ்சள் ,கிரோந்தி, தென்காசி, புளியங்குடி, அம்பாசமுத்திரம், திருக்கண்ணங்குடி ஆகிய பகுதிகளில் இருந்து துளசியும், பச்சை, கொடை ரோடு, சங்கரன்கோவில், மானா மதுரை, திண்டுக்கல், ராஜபாளையம் ஆகிய பகுதி களிலிருந்து மல்லிகைப்பூ வும், தோவாளை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து அரளி, சம்பங்கி, தாமரைய, கோழி பூ ஆகிய பூக்கள் சந்தைக்கு விற்பனைக்கு வருவது வழக்கம்.

    இந்த பூக்கள் விற்பனையாகி குமரி மாவட்டம் மட்டுமல்லாமல் பிற மாவட்டங்களுக்கும், கேரளாவுக்கும் செல்கிறது. ஆயுத பூஜை மற்றும் தசரா விழாவை முன்னிட்டு வியாபாரிகளும், பொது மக்களும், பக்தர்களும் போட்டி போட்டு பூக்கள் வாங்கி செல்கிறார்கள். பிச்சிப்பூ ரூ.750, மல்லிகைப்பூ ரூ.800, அரளி ரூ.320, சம்மங்கி ரூ,150, கொழுந்து ரூ.130, கிரேந்தி ரூ.110, மஞ்சள் குறைந்து ரூ.90 மற்ற பூக்களின் விலை உயர்ந்து காணப்படுகிறது. இது குறித்து பூ வியாபாரி ஒருவர் கூறும் போது, சரஸ்வதி பூஜை மற்றும் தசரா திருவி ழாவை முன்னிட்டு பூக்களின் விலை மேலும் அதிக ரிக்கும் என தெரிவித்தார்.

    ×