search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகளிர் டெஸ்ட்"

    • ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சில் 261 ரன்களில் ஆல் அவுட்டானது.
    • தொடர்ந்து 2-வது இன்னிங்ஸ் ஆடிய இந்தியா 75 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

    மும்பை:

    ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 1 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடியது. இதில் முதலாவதாக டெஸ்ட் போட்டி நடைபெற்றது.

    டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 219 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. தஹிலா மெக்ரத் அரை சதம் அடித்தார்.

    இந்தியா சார்பில் பூஜா வஸ்த்ராகர் 4 விக்கெட்டும், ஸ்நே ரானா 3 விக்கெட்டும், தீப்தி ஷர்மா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.


    தொடர்ந்து ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் 406 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 4 வீராங்கனைகள் அரை சதம் கடந்தனர்.

    ஆஸ்திரேலியா சார்பில் கார்ட்னர் 4 விக்கெட்டும், கிம் கார்த், சதர்லெண்ட் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 187 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்ஸ் ஆடிய ஆஸ்திரேலியா 261 ரன்களில் ஆல் அவுட்டானது. தஹிலா மெக்ராத் 73 ரன்கள் எடுத்தார்.

    இந்தியா சார்பில் ஸ்நே ரானா 4 விக்கெட்டும், ஹர்மன்பிரீத் கவுர், கெய்க்வாட் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    75 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடிய இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. டெஸ்ட் தொடரையும் கைப்பற்றியது.

    ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்தியா பெற்ற முதல் வெற்றி இது என்பது குறிப்பிடத்தக்கது.

    ×