search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகப்பேறு மருத்துவமனை"

    • காதார பணிகள் இனை இயக்குநர் மருத்துவர் சாந்தி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
    • மருத்துவர்கள், செவிலியர்கள், பணியா ளர்கள் நியமிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

    பாலக்கோடு,

    தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காவல் நிலையம் அருகில் 2 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான நவீன வசதிகளுடன் கூடிய குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்காக மகப்பேறு மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டு கடந்தாண்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தனர். இந்த நிலையில் மருத்துவமனைக்கு போதிய மருத்துவர்கள், செவிலியர், பணியாளர்கள் நியமிக்கப்படாததால், மருத்துவ மனை செயல்பாட்டுக்கு வராமல் இருந்து.

    இந்நிலையில் தமிழக அரசு பொது மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக தருமபுரி மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குநர் மருத்துவர் சாந்தி தீவிர முயற்சியால் மருத்துவர்கள், செவிலியர்கள், பணியா ளர்கள் நியமிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

    இதனை சுகாதார பணிகள் இனை இயக்குநர் மருத்துவர் சாந்தி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பாலக்கோடு அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர் பாலசுப்ரமணியம், மருந்தாளுநர்கள் முத்துசாமி, முருகேசன் மற்றும் செவிலியர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் மாவட்ட சுகாதார பேரவை கூட்டம் நடைபெற்றது.
    • மகப்பேறு மருத்துவமனையை நவீன வசதிகளுடன் விரிவுப்படுத்த வேண்டும்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் மாவட்ட சுகாதார பேரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ப.காயத்ரி கிருஷ்ணன் தலைமை வகித்தார்.

    இக்கூட்டத்தில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன், மாவட்ட ஊராட்சித்தலைவர் கோ.பாலசுப்ரமணியன், தமிழ்நாடு சுகாதார மறுசீரமைப்பு திட்ட துணை இயக்குநர் சங்கீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இக்கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்ததாவது, திருவாரூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலைய ங்களுக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள், புதிய மருத்துவமனை கட்டடமாக தகவமைப்பு செய்து தர கோரியும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திருவாரூர் மாவட்டத்தில், வரப்பெற்ற 204 கோரிக்கைகளில், 48 கோரிக்கைகள் வட்டார அளவிலும், 143 கோரிக்கைகள் மாவட்ட அளவிலுள்ள நிதியின் மூலமாக தீர்வு காணும் வகையிலும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.

    இக்கோரிக்கைகளில் 13 கோரிக்கைகள் மட்டும் மாநில நிதி மூலம் மட்டுமே தீர்வு காணும் வகையில் அமைந்துள்ளது. 13 கோரிக்கைகளுக்கு உரிய ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

    கூட்டத்தில் பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. பேசியதாவது:

    திருவாரூர் பழைய அரசு மருத்துவமனை கட்டிடம் செயல்பாடின்றி உள்ளது. அதனை அகற்றிவிட்டு 100 படுக்கைகள் கொண்ட புதிய மகப்பேறு மருத்துவமனை அமைக்க வேண்டும். விஜயபுரம் மகப்பேறு மருத்துவமனையை நவீன வசதிகளுடன் விரிவுப்படுத்த வேண்டும்.

    மேலும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கழிவுநீரை என்பது சுத்திகரிப்பு செய்து வெளியேற்ற வேண்டும். இதன்மூலம் திருவாரூர் பொதுமக்களின் மருத்துவ தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில், சுகாதார பணிகள் துணை இயக்குநர் ஹேமசந்த் காந்தி, அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் ஜோசப்ராஜ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

    ×