என் மலர்
உள்ளூர் செய்திகள்

சுகாதார பணிகள் இனை இயக்குநர் மருத்துவர் சாந்தி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
பாலக்கோட்டில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்த மகப்பேறு மருத்துவமனை
- காதார பணிகள் இனை இயக்குநர் மருத்துவர் சாந்தி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
- மருத்துவர்கள், செவிலியர்கள், பணியா ளர்கள் நியமிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
பாலக்கோடு,
தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காவல் நிலையம் அருகில் 2 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான நவீன வசதிகளுடன் கூடிய குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்காக மகப்பேறு மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டு கடந்தாண்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தனர். இந்த நிலையில் மருத்துவமனைக்கு போதிய மருத்துவர்கள், செவிலியர், பணியாளர்கள் நியமிக்கப்படாததால், மருத்துவ மனை செயல்பாட்டுக்கு வராமல் இருந்து.
இந்நிலையில் தமிழக அரசு பொது மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக தருமபுரி மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குநர் மருத்துவர் சாந்தி தீவிர முயற்சியால் மருத்துவர்கள், செவிலியர்கள், பணியா ளர்கள் நியமிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
இதனை சுகாதார பணிகள் இனை இயக்குநர் மருத்துவர் சாந்தி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பாலக்கோடு அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர் பாலசுப்ரமணியம், மருந்தாளுநர்கள் முத்துசாமி, முருகேசன் மற்றும் செவிலியர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.






