search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போதைப்பொருள் தடுப்பு"

    • போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது
    • சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.

    திருச்சி:

    முசிறி அய்யம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் போதை பொருள் தடுப்பு மற்றும் குழந்தை உரிமை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியர் சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்றது. முசிறி டிஎஸ்பி யாஸ்மின், குழந்தை நல குழு உறுப்பினர் பிரபு ஆகியோர், போதைப்பொருள் மாணவர்கள் (குழந்தைகள்) பயன்படுத்துவதால் உடல் அளவில், மனதளவில் ஏற்படும் பாதிப்புகள், எதிர்காலத்தில் சந்திக்கும் உடல் சார்ந்த பிரச்சனைகள் குறித்தும், குழந்தை திருமண தடுப்புச் சட்டம் 2006 ன் படி குழந்தை திருமணத்துக்கு உதவி செய்தாலோ, உடந்தையாக இருந்தாலோ, திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலோ சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.

    பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பு சட்டம் 2012ன் படி பாலியல் தொல்லை, பாலியல் துன்புறுத்தல் பாலியல் தொந்தரவு செய்தாலோ மற்றும் பாலியல் வன்முறை குழந்தைக்கு நடந்தது தெரிந்தும், குழந்தைக்கு உதவி செய்யாமல் இருந்தாலோ, இச்சட்டத்தின் படி தண்டனைக்குரிய குற்றமாகும். குழந்தைகளை வேலைக்கு அனுப்புவதும் ,வேலை செய்ய அனுமதிப்பதும் குழந்தை தொழிலாளர் முறை அகற்றுவதற்கான சட்டத்தின் படி தண்டனைக்குரிய குற்றமாகும் . மேலும் கல்வியின் அவசியம், குழந்தைகளின் தன்னம்பிக்கை, உயர்கல்விக்கு செல்வதற்கான வழிமுறைகள் சார்ந்த வாழ்க்கைக் கல்வி குறித்தும், குழந்தைகளுக்கான இலவச கட்டணமில்லா தொலைபேசி எண் 1098 செயல்பாடு, பணிகள் குறித்தும் விழிப்புணர்வு வழங்கினார்கள்.

    முன்னதாக முசிறி அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் காவேரி, முசிறி காவல் நிலைய குழந்தை நல காவல் அலுவலர் பிரியா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற குழந்தைகளுக்கு குழந்தைகள் மீதான வன்முறை குறித்த துண்டு பிரசுரங்கள்,நோட்டிஸ் விநியோகம் செய்தனர்.

    • பல்வேறு பகுதிகளில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
    • போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரமும் வெளியிடப்பட்டது

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட சமூக நலத்துறையின் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளுக்கிடையே மாவட்ட அளவில் போதை பொருள் தடுப்பு குறித்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் கலெக்டர் அரவிந்த் பங்கேற்று போட்டிகளில் வென்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது:-

    உலகபோதை தடுப்பு விழிப்புணர்வு தினத்தையொட்டி குமரி மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மாவட்ட அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ- மாணவிகளுக்கிடையே நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுனர்களுக்கிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போதைப்பொருள் தடுப்பு குறித்த வாசகங்கள் அடங்கிய வாகன ஒட்டுவில்லையினை வெளியிட்டு வாகனங்களில் ஒட்டுவதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ள துறை அலுவலர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரமும் வெளியிடப்பட்டது.

    அதோடு மாவட்ட சமூக நலத்துறை மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் பங்களிப்புடன் ஏற்பாடு செய்யப்பட்ட போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசார வாகனமும் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் போதை பொருள் பழக்கத்திற்கு ஆளாகாமல் இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வீராசாமி, மாவட்ட சமூக நலன் மற்றும் உரிமைத்துறை அலுவலர் சரோஜினி, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜாண் ஜெகத் பிரைட், அதங்கோட்டாசான் முத்தமிழ் கழக மறுவாழ்வு மைய இயக்குனர் அருள்ஜோதி, நியூ பாரத் டிரஸ்ட் இயக்கு நனர் அருண்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×