search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொதுமக்கள் மனு"

    • அரசு வழங்கிய இலவச வீட்டு மனை நிலத்தில் குடியிருந்து வருகின்றனர்.
    • இடத்தை அளவீடு செய்து ஆக்கிரமிப்பு இருந்தால் அகற்றப்படும்.

    பல்லடம்:-

    பல்லடம் அருகேயுள்ளஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி சேகாம்பாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் சிலர் பல்லடம் தாசில்தாரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    பல்லடம் அருகே உள்ள ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி சேகாம்பாளையத்தில், அரசு வழங்கிய இலவச வீட்டு மனை நிலத்தில் குடியிருந்து வருகிறோம். இந்த நிலையில், அதே பகுதியில் வசிக்கும் ஒருவர் பொதுவான காங்கிரீட் ரோட்டை உடைத்து, ரோட்டை ஆக்கிரமித்து அஸ்திவாரம் அமைத்துள்ளார்.

    இதனை தட்டி கேட்டபோது அப்படித்தான் செய்வோம் என்று அலட்சியமாக பதில் கூறுகின்றனர். எனவே வருவாய்த்துறையினர் நிலத்தை அளவீடு செய்து, பொது ரோட்டை மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. புகார் குறித்து விசாரணை செய்த அதிகாரிகள் அந்த இடத்தை அளவீடு செய்து ஆக்கிரமிப்பு இருந்தால் அகற்றப்படும் என தெரிவித்தனர்.

    • 237 மனுக்கள் பெறப்பட்டது.
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது . மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன் தலைமை தாங்கி பொதுமக்கள் , மாற்றுத் திறனாளிடம் இருந்து மனுக்களை பெற்றார் .

    கூட்டத்தில் பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித் தொகை , கூட்டுறவு கடன் உதவி , தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பாக வீடுகள் வேண்டி , கிராம பொது பிரச்சினைகள், குடிநீர் வசதி, வேலைவாய்ப்பு வேண்டி பொதுமக்கள் மனு கொடுத்தனர் .

    மொத்தம் 237 மனுக்கள் பெறப்பட்டது . அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலரிடம் வழங்கி உரிய விசாரணை மேற்கொண்டு உடனடியாக நடவ டிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது .

    கூட்டத்தில் துணை கலெக்டர்கள் சேகர் , தாரகேஸ்வரி, இளவரசி உள்பட பலர் கலந்து கொண்டனர் .

    ×