search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "road encroachment"

    • சங்ககிரியில் லாரி தொழில் பிரதான தொழிலாக உள்ளதால் வாகனங்கள் நெரிசல் எப்போதும் மிகுதியாக இருக்கும்.
    • போலீஸ் நிலையம்எதிரே உள்ள சாலையானது 30 மீட்டர் அகலத்தில் போடப்பட்டுள்ளது. மேலும் 1 மீட்டர் நீளத்தில் பாதசாரிகள் நடக்க பாதை அமைக்கப்பட்டது.

    சங்ககிரி:

    சேலம் மாவட்டம் சங்ககிரியில் லாரி தொழில் பிரதான தொழிலாக உள்ளதால் வாகனங்கள் நெரிசல் எப்போதும் மிகுதியாக இருக்கும். இதனால் சில ஆண்டுக்கு முன் நகர் பகுதியில் பல சாலைகள் இருவழி சாலையாக மாற்றப்பட்டன. ஆனாலும் போக்குவரத்து நெரிசல் குறையவில்லை.

    இந்த நிலையில் கடந்த 3 மாதமாக தாலுகா, பி.டி.ஓ. அலுவலகம் மற்றும் போலீஸ் நிலையம் எதிரே உள்ள பிரதான சாலையில் பாதசாரிகளுக்கு இடையூறாக சரக்கு ஆட்டோக்கள், கார், கனரக வாகனங்களை நடைபாதையில் வாகன ஓட்டிகள் நிறுத்தி விட்டு செல்கின்றனர்.

    இதனால் பாதசாரிகள் வெள்ளை கோட்டை தாண்டி சாலையின் நடுவே நடந்து செல்லும் நிலை உள்ளது. 2 வாகனங்கள் ஒன்றாக வரும்பொழுது விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. இதையடுத்து மாவட்ட அதிகாரிகள் தலையிட்டு வாகன ஆக்கிரமிப்பை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    இதுகுறித்து சங்ககிரி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறும்போது, பி.டி.ஓ அலுவலகம், போலீஸ் நிலையம்எதிரே உள்ள சாலையானது 30 மீட்டர் அகலத்தில் போடப்பட்டுள்ளது. மேலும் 1 மீட்டர் நீளத்தில் பாதசாரிகள் நடக்க பாதை அமைக்கப்பட்டது. அதில் வாகனங்களை நிறுத்தி ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் வெள்ளைக்கோட்டை தாண்டி சாலை நடுவே செல்லும் சூழல் ஏற்படுகிறது. அதனால் விபத்துக்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது. இதை கட்டுப்படுத்த போலீஸ் துறையினர் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    சங்கிரியை சேர்ந்த ராஜசேகர் என்பவர் கூறுகையில் இந்த சாலையில் காலை நேரத்தில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் ஏராளமானோர் நின்று செல்கின்றனர். சாலையை சரக்கு வாகனங்கள் காலை முதலே ஆக்கிரமித்துக் கொள்வதால் அந்த வழியாக நடந்து செல்வோர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே போலீசார் இந்த சாலையில் வாகனங்களை நிறுத்த விடாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    • வீடுகளை அகற்ற வேண்டும் என மாநகராட்சிக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
    • 2 பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு செய்த வீடுகளை இடிக்க தொடங்கினர்.

    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரி ப்புலியூர் குப்பன் குளம் பகுதியில் மாநகராட்சி சாலையை ஆக்கிரமித்து 7 வீடுகள் கட்டப்பட்டு இருந்ததாக நீதிமன்றத்தில் வழக்கு இருந்து வந்த நிலையில் ஆக்கிரமிப்பில் இருந்த வீடுகளை அகற்ற வேண்டும் என மாநகராட்சிக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று காலை மாநகராட்சி ஆணை யாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நகரமைப்பு அலுவலர் முரளி, நகரமைப்பு ஆய்வாளர் அருள் செல்வன் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். இதற்கு முன்னதாக அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க ஏராளமான போலீசார் அந்த பகுதியில் குவிக்கப்பட்டு இருந்தனர். இதனை தொடர்ந்து 2 பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு செய்த வீடுகளை இடிக்க தொடங்கினர். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு முன்னதாக 7 வீடுகளில் இருந்த அனைத்து பொருட்களையும் அதன் உரிமையாளர்கள் பாதுகாப்பாக எடுத்துச் சென்று இருந்தனர்.

    இந்த நிலையில் அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட வீடுகளை எடுக்கிறோம் என திட்டவட்டமாக தெரிவித்து தங்கள் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வந்தனர். இதனை தொடர்ந்து காலை முதல் வீடுகளை பொக்லைன் எந்திரம் மூலம் இடிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வந்தது. ஏராளமான பொதுமக்கள் மற்றும் வீட்டின் உரிமையாளர்கள் திரண்டு இருந்ததால் பரபரப்பாக காணப்பட்டது.

    • ரெயில் நிலையம் செல்லும் சாலையில் மாலை, இரவு நேரங்களில் கடும் போக்குவரத்து நெருக்கடி இருக்கும்.
    • மீண்டும் தள்ளுவண்டி கடைகள் அமைக்க முயற்சி நடைபெற்று வருகிறது.

    நெல்லை:

    நெல்லை சந்திப்பு ரெயில் நிலையமானது தென்மாவட்டங்களில் அதிக பயணிகள் சேவையை கொண்ட ரெயில் நிலைய மாகும். இங்கு ரெயிலில் பயணிப்பதற்காக நாள் தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்களில் பயணிகள் தங்களது உறவினர்களுடன் வந்து இறங்குவார்கள்.

    போக்குவரத்து நெருக்கடி

    இதனால் சந்திப்பு பஸ் நிலைய சாலை, அங்கிருந்து ரெயில் நிலையம் செல்லும் சாலை உள்ளிட்டவை எப்போதும் பரபரப்பாக காணப்படும். குறிப்பாக ரெயில் நிலையம் செல்லும் சாலையில் மாலை மற்றும் இரவு நேரங்களில் கடும் போக்குவரத்து நெருக்கடி இருக்கும்.

    இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து போலீசார் கூடுதலாக நிறுத்தப்பட்டு வாகனங்கள் சீராக சென்று திரும்ப வழிவகை செய்வார்கள்.

    இட்லி கடைகள்

    கடந்த ஓராண்டுக்கு முன்பு வரை இங்கு கடுமை யான போக்குவரத்து நெரு க்கடி இருந்ததால் பயணிகள் குறித்த நேரத்தில் ரெயிலை பிடிக்க முடியாத நிலை இருந்ததாக புகார்கள் எழுந்தது. இதற்கு காரணமாக சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்கள், திடீரென முளைக்கும் இட்லி கடைகள் உள்ளி ட்டவை கூறப்பட்டன.

    இதையடுத்து மாநகராட்சி நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் சாலையை ஆக்கிரமித்து போடப் பட்டு இருந்த தள்ளு வண்டி கடைகள் முழுவது மாக அப்புறப்ப டுத்தப்பட்டது. தொடர்ந்து வாகனங்கள் சீராக சென்று வந்தன. தற்போது மீண்டும் தள்ளு வண்டி கடைகள் போட முயற்சி நடைபெற்று வருகிறது.

    பயணிகள் புகார்

    மேலும் இரவு நேரங்களில் ரெயில்நிலைய சாலையின் 2 பகுதியிலும் இருக்கும் கடைகள் முன்பு பொதுமக்கள் நடந்து செல்லும் நடைபாதையில் சிலர் சேர், அடுப்புகளை வைத்து இட்லி கடை போடுகின்றனர். இதனால் மீண்டும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட தொடங்கி உள்ளதாகவும், இதனால் வாக னங்கள் செல்ல முடி யாமல் நெருக்கடி ஏற்பட்டு குறித்த நேரத்தில் ரெயி ல்களை பிடிப்பதில் சிக்கல் ஏற்படுவதாகவும் பயணிகள் புகார் கூறுகின்றனர்.

    எனவே மாநகர போக்குவரத்து போலீசார் உடனடி நடவடிக்கை எடுத்து தற்காலிக உணவ கங்களை அப்புறப்படுத்தி இரவு நேர போக்குவரத்து நெருக்கடியை சரிசெய்ய வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • விரைவில் ஆக்கிரமிப்பு அகற்ற ஏற்பாடு
    • வீடுகள், கடை உரிமையாளர்களுக்கு முறையாக நோட்டீஸ் வழங்கப்படும் என அதிகாரி தகவல்

    ஒடுகத்தூர்:

    ஒடுகத்தூர் பேரூராட்சியில் சாலை ஆக்கிரமிப்பு பகுதிகள் அளவிடும் பணிகள் நேற்று முதல் தொடங்கியது.

    ஒடுகத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 4வது மற்றும் 5வது வார்டுகளான பஜார் தெரு, பஸ் ரோடு பகுதியில் சாலைகளை ஆக்கிரமிப்பு செய்து கடைகள், வீடுகள் கட்டிள்ளனர்.

    இதனால், பஸ் போக்குவரத்து மட்டுமின்றி வாகனங்கள் செல்ல கூட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    மேலும், இரண்டு தெருக்களிலும் 25 அடிக்கும் மேல் இருந்த சாலை தற்போது ஆக்கிரமிப்பு செய்த பின் 15 அடி கூட இல்லாமல் உள்ளது. இதனால், காலை, மாலை நேரங்களில் வாகன நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் மட்டுமின்றி பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகிவருகின்றனர்.

    எனவே, சாலை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் முறையாக அளவிடு செய்து சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று ஏற்கனவே நடந்து முடிந்த கவுன்சிலர் மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதற்கான கடிதத்தை வருவாய்த்துறையினரிடம் வழங்கப்பட்டது.

    இதுகுறித்த, மனுக்களை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து, கலெக்டரின் உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்பு பகுதிகளை முறையாக அளவிடு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    அதன்படி, தாசில்தார் ரமேஷ் ஆலோசனையின் பேரில் ஆர்ஐ நந்தகுமார், பேரூராட்சி செயல் அலுவலர் உமாராணி, பேரூராட்சி மன்ற தலைவர் சத்தியாவதி பாஸ்கரன், சர்வேயர் திலீப்குமார் (பள்ளிகொண்டா பிர்கா), சர்வேயர் கிரிதரன் (ஒடுகத்தூர் பிர்கா) மற்றும் 8 கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர், பேரூராட்சி பணியாளர்கள் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று இரண்டு தெருக்களிலும் ஆக்கிரமிப்பு பகுதிகளை அளவிடும் செய்யும் பணிகளை தொடங்கினர்.

    இப்பணிகள், முடிந்த பிறகு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள வீடுகள், கடை உரிமையாளர்களுக்கு முறையாக நோட்டீஸ் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

    • சோழவந்தான் அருகே சாலை ஆக்கிரமிப்பு குறித்து 2-ம் கட்ட சர்வே பணி தொடங்கப்பட்டது.
    • சாலை ஆக்கிரமிப்பு குறித்து 2-ம் கட்ட அளவீடு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே வைகை ஆற்றுக்கு மேற்கு பகுதியில் செல்லும் மேலக்கால் பேரணை சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற முள்ளிப்பள்ளம் கிராமத்தை சேர்ந்த மார்நாட்டான் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கை அடுத்து இது தொடர்பாக முள்ளிப்பள்ளம் கிராமத்தில் வருவாய்துறையினர் முதல் கட்ட சர்வே பணி முடித்து அறிக்கையை கோர்ட்டில் சமர்பித்தனர். இதைத்தொடர்ந்து வாடிப்பட்டி தாசில்தார் வீரபத்திரன் ஆலோசனையின் பேரில் வருவாய் ஆய்வாளர் சதீஷ் முன்னிலையில் பிர்கா சர்வேயர் சந்திரா, கிராம நிர்வாக அலுவலர் முபாரக் ஆகியோர் சித்தாயிபுரம் கோவில், குருவித்துறை, அய்யப்பநாயக்கன்பட்டி, மன்னாடிமங்கலம் பகுதிகளில் உள்ள சாலை ஆக்கிரமிப்பு குறித்து 2-ம் கட்ட அளவீடு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

    • மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
    • ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சாலை மேம்படுத்தப்பட உள்ளது

    வேலூர்:

    வேலூர் கோட்டை சுற்றுச்சாலையில் பெரியார் பூங்காவை ஒட்டி நடை மேடை அமைக்கப்பட்டுள்ளது. இதில் சிலர் ஆக்கிரமித்து கடைகள் வைத்துள்ளனர்.

    தற்போது கோட்டை சுற்றுச்சாலை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட உள்ளது. இந்த சாலை முழுவதும் கூடுதல் மின் வசதி மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.

    இதற்காக கோட்டை சுற்றுச்சாலையில் ஆக்கிரப்புகளை அகற்ற மாநகராட்சி அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளது. பெரியார் பூங்காயொட்டி இருந்த 3 கடைகளை இன்று மாநகராட்சி அதிகாரிகள் அப்புறப்படுத்தினர்.

    எந்த காரணத்தை கொண்டும் கோட்டை சுற்றுச்சாலையை ஆக்கிரமித்து கடைகள் அமைக்க கூடாது. மீறி வைக்கப்படும் கடைகளின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • கடலூர் அருகே சாலையை ஆக்கிரமித்து கட்டப்படும் வீடுகளால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
    • அவசர காலங்களில் 108 ஆம்பு லன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் செல்வதற்கு பெரும் சிரமமாக உள்ளது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் கோண்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பழனியாண்டவர் நகர்உள்ளது. இந்த நகரில் அரசு அதி காரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் போன்ற முக்கிய பிரமுகர்கள் சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த பழனி ஆண்டவர் பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சாலை வசதி சரிவர இல்லாமல் குண்டும் குழியுமாக பொது மக்களின் அத்தியாவசிய தேவைக்கு பயன்படுத்த முடியாத அள வில் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் மோட்டார் சைக்கில் மற்றும் வாகனங்களில் செல்வோர் பெரும் பாதிப்படைகின்றனர். மேலும் இந்த பஞ்சரான சாலையினால் அவசர காலங்களில் 108 ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் செல்வதற்கு பெரும் சிரமமாக உள்ளது.

    இந்த பகுதியில் கழிவு நீர் கால்வாய்கள் சரிவர பராமரிக்கவில்லை இத னால் மழைக்காலங்களில் மழை நீர் கழிவுநீர் கால்வாயில் தேங்கி சாலையில் பெருக் கெடுத்து ஓடும் அவல நிலை ஏற்படுகிறது. மேலும் இந்த கழிவுநீரில் தேங்கும் மழை நீரால் கொசுக்கள் உற்பத்தியாகி அப்பகுதியில் உள்ளவர் களுக்கு நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. நீண்ட நாட்கள் கால்வாயில் தேங்கும் மழை நீரால் பொதுமக்கள் அந்த பகுதியை கடக்கும்போது துர்நாற்றம் வீசி அங்குள்ளவர்களுக்கு உடல் நல குறைவு ஏற்படுகிறது. மேலும் ஒரு சிலர் இந்த பகுதியில் சாலையை ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளனர். இந்த சாலையை ஆக்கிரமித்து கட்டப்படும் வீடுகளினால் சாலை மிகவும் குறுகலாக உள்ளது. அதனால் அந்த வழியாக மோட்டார் சைக்கிள் மற்றும் வாகனங்களில் செல்வோர் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். எனவே உரிய அதிகாரிகள் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

    • அரசு வழங்கிய இலவச வீட்டு மனை நிலத்தில் குடியிருந்து வருகின்றனர்.
    • இடத்தை அளவீடு செய்து ஆக்கிரமிப்பு இருந்தால் அகற்றப்படும்.

    பல்லடம்:-

    பல்லடம் அருகேயுள்ளஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி சேகாம்பாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் சிலர் பல்லடம் தாசில்தாரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    பல்லடம் அருகே உள்ள ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி சேகாம்பாளையத்தில், அரசு வழங்கிய இலவச வீட்டு மனை நிலத்தில் குடியிருந்து வருகிறோம். இந்த நிலையில், அதே பகுதியில் வசிக்கும் ஒருவர் பொதுவான காங்கிரீட் ரோட்டை உடைத்து, ரோட்டை ஆக்கிரமித்து அஸ்திவாரம் அமைத்துள்ளார்.

    இதனை தட்டி கேட்டபோது அப்படித்தான் செய்வோம் என்று அலட்சியமாக பதில் கூறுகின்றனர். எனவே வருவாய்த்துறையினர் நிலத்தை அளவீடு செய்து, பொது ரோட்டை மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. புகார் குறித்து விசாரணை செய்த அதிகாரிகள் அந்த இடத்தை அளவீடு செய்து ஆக்கிரமிப்பு இருந்தால் அகற்றப்படும் என தெரிவித்தனர்.

    ×