search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சங்ககிரியில் சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அவதி
    X

    சங்ககிரி பி.டி.ஓ. அலுவலகம் எதிரே உள்ள பிரதான சாலையில் நடைபாதையில் சரக்கு ஆட்டோக்கள், கார், கனரக லாரிகள் நிறுத்தி உள்ளதால் சாலையின் நடுவே செல்லும் மாணவிகள்.

    சங்ககிரியில் சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அவதி

    • சங்ககிரியில் லாரி தொழில் பிரதான தொழிலாக உள்ளதால் வாகனங்கள் நெரிசல் எப்போதும் மிகுதியாக இருக்கும்.
    • போலீஸ் நிலையம்எதிரே உள்ள சாலையானது 30 மீட்டர் அகலத்தில் போடப்பட்டுள்ளது. மேலும் 1 மீட்டர் நீளத்தில் பாதசாரிகள் நடக்க பாதை அமைக்கப்பட்டது.

    சங்ககிரி:

    சேலம் மாவட்டம் சங்ககிரியில் லாரி தொழில் பிரதான தொழிலாக உள்ளதால் வாகனங்கள் நெரிசல் எப்போதும் மிகுதியாக இருக்கும். இதனால் சில ஆண்டுக்கு முன் நகர் பகுதியில் பல சாலைகள் இருவழி சாலையாக மாற்றப்பட்டன. ஆனாலும் போக்குவரத்து நெரிசல் குறையவில்லை.

    இந்த நிலையில் கடந்த 3 மாதமாக தாலுகா, பி.டி.ஓ. அலுவலகம் மற்றும் போலீஸ் நிலையம் எதிரே உள்ள பிரதான சாலையில் பாதசாரிகளுக்கு இடையூறாக சரக்கு ஆட்டோக்கள், கார், கனரக வாகனங்களை நடைபாதையில் வாகன ஓட்டிகள் நிறுத்தி விட்டு செல்கின்றனர்.

    இதனால் பாதசாரிகள் வெள்ளை கோட்டை தாண்டி சாலையின் நடுவே நடந்து செல்லும் நிலை உள்ளது. 2 வாகனங்கள் ஒன்றாக வரும்பொழுது விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. இதையடுத்து மாவட்ட அதிகாரிகள் தலையிட்டு வாகன ஆக்கிரமிப்பை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    இதுகுறித்து சங்ககிரி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறும்போது, பி.டி.ஓ அலுவலகம், போலீஸ் நிலையம்எதிரே உள்ள சாலையானது 30 மீட்டர் அகலத்தில் போடப்பட்டுள்ளது. மேலும் 1 மீட்டர் நீளத்தில் பாதசாரிகள் நடக்க பாதை அமைக்கப்பட்டது. அதில் வாகனங்களை நிறுத்தி ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் வெள்ளைக்கோட்டை தாண்டி சாலை நடுவே செல்லும் சூழல் ஏற்படுகிறது. அதனால் விபத்துக்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது. இதை கட்டுப்படுத்த போலீஸ் துறையினர் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    சங்கிரியை சேர்ந்த ராஜசேகர் என்பவர் கூறுகையில் இந்த சாலையில் காலை நேரத்தில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் ஏராளமானோர் நின்று செல்கின்றனர். சாலையை சரக்கு வாகனங்கள் காலை முதலே ஆக்கிரமித்துக் கொள்வதால் அந்த வழியாக நடந்து செல்வோர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே போலீசார் இந்த சாலையில் வாகனங்களை நிறுத்த விடாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    Next Story
    ×