search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொதுமக்களுக்கு தடை"

    • மக்கள் இங்கு வந்து குளித்து விட்டு செல்வது வழக்கம்.
    • மக்கள் அனுமதி கிடையாது என மரக்காணம் கடலோர காவல் படையினர் அறிவித்துள்ளார்கள் .

    விழுப்புரம்: 

    மரக்காணம் அருகே தீர்த்தவாரி கடற்கரை உள்ளது. இப்பகுதி மக்கள் இங்கு வந்து குளித்து விட்டு செல்வது வழக்கம். மாண்டஸ் புயல் கரையை கடந்தாலும் அதன் தாக்கத்தால் கடலி்ல் சீற்றம் குறையவில்லை. இதனால் மீனவர்களே மீன் பிடிக்க கடலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் மரக்காணம் தீர்த்தவாரி கடலில் குளிப்பதற்கும், பார்வையிடவும் நேற்று சுற்றுவட்டார கிராம மக்கள் ஆட்டோ, மோட்டார் சைக்கிளில் வந்தனர்.

    கடலின் சீற்றம் அதிகமாக இருப்பதால் கடலோர காவல் படையினர் தடை விதித்திருந்தனர். தடையை மீறி அங்கு பொதுமக்கள் வருவதை கண்ட கடலோர காவல் படையினர் இ.சி.ஆர்.-ல் பேரிகார்டுகள் வைத்து பொதுமக்களை ஏற்றி வந்த ஆட்டோ, கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிளையும் திருப்பி அனுப்பினர். மேலும், ஏற்கனவே தீர்த்தவாரி கடல் பகுதிக்கு சென்றவர்களை தடுத்து நிறுத்தி கடல் சீற்றத்தால் அலைகள் ஆர்பரித்து வருகின்றன. இதனால் கடற்கரை ஆழமாக இருப்பதால் குளிக்கவோ, வேடிக்கை பார்க்கவே அனுமதி கிடையாது என்று அறிவுரை கூறி திருப்பி அனுப்பினர். மேலும், இந்த வாரம் முழுவதும் தீர்த்தவாரி கடல் பகுதிக்கு பொது மக்கள் அனுமதி கிடையாது என மரக்காணம் கடலோர காவல் படையினர் அறிவித்துள்ளார்கள் 

    • பெரியாறு அணையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழையால் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
    • முல்லைபெரியாற்றின் கரையில் குளிக்கவோ, துணிகள் துவைக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ வேண்டாம் என பொதுப்பணித்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

    கூடலூர்:

    தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக பெரியாறு அணையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழையால் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    இதனால் அணையி லிருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவும் உயர்த்தப்பட்டுள்ளது. நேற்று 1414 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 1904 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணை யின் நீர்மட்டம் 127.70 அடியாக உள்ளது.

    அணையிலிருந்து 1655 கனஅடி வெளியேற்றப்படு கிறது. நீர் இருப்பு 4201 மி.கனஅடியாக உள்ளது. முல்லை பெரியாறு அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் வைகை அணை நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. பெரியாறு அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் இரைச்சல் பாலம் வழியாக கூடலூர், கம்பம், உத்தம பாளையம், மார்க்கைய ன்கோட்டை, உப்பு க்கோட்டை, வீரபாண்டி, அரண்மனைப்புதூர் வழியாக வைகை அணைக்கு செல்கிறது.

    இதனால் முல்லை பெரியாற்றின் கரையோரம் உள்ள மக்கள் எச்சரிக்கை யாக இருக்கும்படி பொது ப்பணித் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். ஆற்றில் குளிக்கவோ, துணிகள் துவைக்கவோ, கால்நடைகளை குளிப்பா ட்ட வோ வே ண்டாம் என தெரிவித்துள்ளனர்.

    முல்லை பெரியாறு அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் லோயர்கேம்ப் மின்உற்பத்தி நிலையத்தில் 4 ஜென ரேட்டர்களும் இயக்கப்பட்டு 151 மெகாவாட் மின்உற்பத்தி நடைபெறுகிறது.

    வைகை அணையின் நீர்மட்டம் 53.67 அடியாக உள்ளது. வரத்து 1538 கனஅடி, திறப்பு 869 கனஅடி, இருப்பு 2511 மி,கனஅடி, மஞ்சள்ஆறு அணையின் நீர்மட்டம் 49.20 அடி, சோத்துப்பாறை நீர்மட்டம் 79.70 அடி,

    பெரியாறு 25.8, தேக்கடி 13.6, கூடலூர் 10.7, உத்தம பாளையம் 4.6, சோத்து ப்பாறை 2, பெரியகுளம் 1 மி.மீ. மழையளவு பதிவாகியுள்ளது.

    ×