search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொங்கல் திருநாள்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காவலர் நிலை-2, காவலர் நிலை-1, தலைமைக் காவலர் என்ற நிலையில் உள்ளவர்களுக்கு பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
    • சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறையில் 60 பேர்களுக்கு பதக்கம் வழங்கவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறைகளில் பணியாற்றும் பணியாளர்கள் தமது பணியில் வெளிப்படுத்தும் நிகரற்ற செயல்பாட்டினை அங்கீகரித்து ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளன்று தமிழக முதலமைச்சரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு, வழங்கப்பட்டு வருகின்றன.

    இந்த ஆண்டு, காவல் துறையில் (ஆண்/பெண்) காவலர் நிலை-2, காவலர் நிலை-1, தலைமைக் காவலர், ஹவில்தார் மற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர் நிலைகளில் 3 ஆயிரம் பணியாளர்களுக்கு "முதலமைச்சரின் காவல் பதக்கங்கள்" வழங்க முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்கள்.

    மேலும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் முன்னணி தீயணைப்போர் (சிறப்பு நிலைய அலுவலர்). எந்திர கம்மியர் ஒட்டி (சிறப்பு நிலைய அலுவலர் (போக்குவரத்து) மற்றும் தீயணைப்போர் (தரம் உயர்த்தப்பட்ட முன்னணி தீயணைப்போர்) ஆகிய நிலைகளில் 118 அலுவலர்களுக்கும்.

    சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறையில் முதல் நிலை வார்டர்கள் (ஆண்) மற்றும் இரண்டாம் நிலை வார்டர்கள் (ஆண்/பெண்) நிலைகளில் 60 பேர்களுக்கும் "முதலமைச்சரின் சிறப்பு பணிப்பதக்கங்கள்" வழங்க முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.

    மேற்படி பதக்கங்கள் பெறுபவர்களுக்கு நிலை வேறுபாடின்றி மாதாந்திர பதக்கப்படி ரூ.400, பிப்ரவரி மாதம் 1ம் தேதி முதல் வழங்கப்படும்.

    மேலும், காவல் வானொலி பிரிவு, மோப்ப நாய் படைப் பிரிவு மற்றும் காவல் புகைப்படக் கலைஞர்கள் பிரிவுகளில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் என ஒவ்வொரு பிரிவிலும் 2 நபர்கள் என ஆக மொத்தம் 6 அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு "முதலமைச்சரின் காவல் தொழில்நுட்ப சிறப்புப் பணிப்பதக்கம்" வழங்க முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.

    இப்பதக்கங்கள் பெறும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு அவரவர்களின் நிலைகளுக்குத் தக்கவாறு ரொக்க தொகை வழங்கப்படும்.

    இவர்கள் அனைவருக்கும் பின்னர் நடைபெறும் சிறப்பு விழாவில் பதக்கம் மற்றும் முதலமைச்சரின் கையொப்பத்துடன் கூடிய பதக்கச்சுருள் வழங்கப்படும் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தூத்துக்குடி மாவட்டத்தில் மானாவாரி விவசாயம் பிரதானமாக நடைபெற்று வருகிறது.
    • தைப்பொங்கலுக்கு பாரம்பரிய உணவுடன் பனங்கிழங்கு இடம்பெறுகிறது.

    எட்டயபுரம்:

    தமிழர் திருநாளாம் தைப்பொங்கலுக்கு சில நாட்களே உள்ள நிலையில் பொதுமக்கள் விவசாயிகள் என அனைவரும் கொண்டாடுவதற்கு தயாராகி வருகின்றனர்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் மானாவாரி விவசாயம் பிரதானமாக நடைபெற்று வருகிறது. பயிறுவகைகள், சிறுதானியங்கள், பணப் பயிர்கள், எண்னை வித்துக்கள் என பயிரிட்டு உள்ளனர்.

    அவை தற்போது கதிர் பிடித்து அறுவடைக்கு தயாராகி வருகிறது. தமிழர் திருநாள் தைப்பொங்கல் மற்றும் அதன் மறுநாள் மாட்டுப்பொங்கலன்று நிலத்தில் பாடுபட்ட கால் நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    உடன்குடி, திருச்செந்தூர், கோவில்பட்டி அருகே காமநாயக்கன்பட்டி, வெங்கடாசலபுரம், கருப்பூர், அயன்வடமலாபுரம், வேடப்பட்டி, குளத்தூர், பெரிய சாமிபுரம், பனையடிப்பட்டி ஆகிய கிராமங்களில் லட்சக்க ணக்கான பனைமரங்கள் உள்ளன. இதனை நம்பி ஆயிரக்கணக்கான குடும்பங்கள் உள்ளன. இதன் பதநீர் காலம் மாசி மாதம் முதல் ஆடிமாதம் வரையாகும்.

    நுங்கு அதன்பின் பழமாகிறது. உதிர்ந்த பனம்பழ பனை விதைகளை நிலத்திற்கடியில் தோண்டி புதைத்து மண்ணால் மூடிவிடுவார்கள். மழைக்காலத்தில் முளைத்து கிழங்காக உருவெடுக்கும். தைப்பொங்கலுக்கு பாரம்பரிய உணவுடன் பனங்கிழங்கு இடம்பெறுகிறது. தற்போது பொங்கலுக்கு விற்பனை செய்ய பனங்கிழங்கு தயாராகி வருகிறது.

    கடந்த வருடம் 25 கிழங்கு ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது. போதிய மழை இல்லாததால் 1½ அடி வளரவேண்டிய பனங்கிழங்கு தற்போது அடிப்பாகம் மட்டும் விரிவடைந்து அதிகம் வளராமல் உள்ளது. இருப்பினும் நல்ல சுவையாக இருப்பதால் பொதுமக்கள் அதிகம் வாங்கி செல்கின்றனர். இங்கிருந்து அனைத்து நகரங்களுக்கும் கொண்டு செல்லப்படுகிறது.

    தைப்பொங்கலுக்கு ரேசன்கடைகளில் பச்சரிசி, வெல்லம், கரும்புடன் பனங்கிழங்கு வரக்கூடிய காலங்களில் வழங்க வேண்டும் என கரிசல் பூமி விவசாயிகள் சங்கம் தலைவர் வரதராஜன் கோரிக்கை விடுத்துள்ளார். 

    ×