search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேஸ்புக்"

    பயனாளர்களின் விபரங்களை தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் பகிர்ந்து கொண்ட விவகாரம் தொடர்பாக பேஸ்புக் நிறுவனம் விளக்கமளிக்க மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
    புதுடெல்லி:

    கேம்ப்ரிட்ஜ் அனலிடிகா விவகாரத்தில் தகவல்களை வெளியிட்ட விவகாரத்தில் ஏற்கனவே பல சர்ச்சைகளை சந்தித்துள்ள பேஸ்புக், இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் பயனாளர்களில் தகவல்களை பகிர்ந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. 

    இந்நிலையில், இது தொடர்பாக ஜூன் 20-ம் தேதிக்குள் விளக்கமளிக்க வேண்டும் என மத்திய அரசு பேஸ்புக் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
    திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் மனைவிக்கு கருக்கலைப்பு செய்ய மறுத்த டாக்டரின் போட்டோவை பேஸ்புக்கில் ஆபாசமாக பதிவிட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அடுத்த நல்லவன்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 30). இவரது மனைவி ஜோதி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், ஜோதி 3-வது முறையாக கர்ப்பமடைந்துள்ளார்.

    அந்த கர்ப்பத்தை கலைக்க விஜயகுமார் மனைவியை அழைத்துக் கொண்டு திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். புறநோயாளிகள் பிரிவில் இருந்த பெண் டாக்டர் பவானியை சந்தித்தனர்.

    டாக்டரிடம், எங்களுக்கு ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ளனர். 3வது குழந்தை வேண்டாம். கருவை கலைத்து விடுங்கள் என்றனர். டாக்டர் பவானி கருக்கலைப்பு சட்ட விரோதம். கருக்கலைப்பு செய்ய முடியாது என்று திட்டவட்டமாக கூறினார்.

    இதனால் ஆத்திரமடைந்த விஜயகுமார், டாக்டர் பவானியிடம் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டார். எங்கு சென்று கருக்கலைப்பு செய்தாலும், உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று டாக்டர் பவானி எச்சரித்தார்.

    இதனால் ஆத்திரத்தில் இருந்த விஜயகுமார், தனது செல்போனில் டாக்டர் பவானியை போட்டோ பிடித்து அதை பேஸ்புக் பக்கத்தில் ஆபாசமாக எழுதி பதிவிட்டார். மேலும் டாக்டர் பவானி குறித்து தொடர்ந்து அவதூறு பரப்பினார்.

    இதையறிந்த டாக்டர் பவானி, திருவண்ணாமலை கிழக்கு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜய குமாரை கைது செய்தனர்.
    ×