search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேரூராட்சி கூட்டம்"

    • கவுன்சிலர்கள் மீது தாக்குதல்
    • கண்காணிப்பு காமிரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை

    கன்னியாகுமரி:

    திங்கள் நகர் பேரூராட்சி யில் கவுன்சிலர்கள் சாதாரண கூட்டம் நடந்தது. இதற்கு பேரூராட்சி தலைவர் சுமன் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் எட்வின் ஜோஸ் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை உள்ள வரவு செலவு மற்றும் தீர்மானங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் வாக்குவாதம் ஏற்பட்டு கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். தர்ணாவிலும் ஈடுபட்டனர்.

    அவர்களுடன் மற்ற கவுன்சிலர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அப்போது பா.ஜ.க. கவுன்சிலர் ஜெயசேகரன், காங்கிரஸ் கட்சியின் கவுன்சிலர் பீட்டர்தாஸ் ஆகியோர் தாக்கப்பட்டனர்.

    இதையடுத்து ஜெயசேகரன் தக்கலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை க்காக அனுமதிக்க பட்டார். இதுபோல காங்கிரஸ் கவுன்சிலர் ஜேக்கப் குளச்சல் மருத்துவமனையில் சிகிச்சை க்காக சேர்க்கப்பட்டார்.

    இதற்கிடையே பா.ஜ.க. நிர்வாகிகள் பேரூராட்சி அலுவலகம் முன்பு கூடினர்.தகவல் அறிந்து போலீசாரும் அங்கு வந்தனர். அவர்கள் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.

    இதற்கிடையே கவுன்சிலர்கள் தாக்கப்பட்டது தொடர்பாக இரணியல் போலீஸ் சப்-இன்ஸ பெக்டர் பாலசுந்தரம் வழக்குப்பதிவு செய்து சம்பவம் நடந்த இடத்தில் பதிவான வீடியோ காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தியாகி சுப்ரமணிய சிவா சிலை அமைக்க வேண்டும் பேரூராட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
    • பேரூராட்சி சங்கரன் பூங்காவில் சுதந்திர போராட்ட தியாகி சுப்பிரமணிய சிவா சிலை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்

    வத்தலக்குண்டு:

    வத்தலக்குண்டு பேரூராட்சி கூட்டம் பேரூராட்சி தலைவர் சிதம்பரம் தலைமையில் நடைபெற்றது. செயல் அலுவலர் தன்ராஜ் முன்னிலை வகித்தார். தலைமை எழுத்தர் செல்லப்பாண்டி தீர்மான அறிக்கை வாசித்தார்.

    கூட்டத்தில் பேரூராட்சி கவுன்சிலர் ரவிச்சந்திரன், வத்தலக்குண்டு பேரூராட்சி சங்கரன் பூங்காவில் சுதந்திர போராட்ட தியாகி சுப்பிரமணிய சிவா சிலை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதற்கு செயல் அலுவலர் தன்ராஜ் சிலை வைப்பதற்கு பல அடிப்படை விதிமுறைகள் உள்ளன.

    மாவட்ட நிர்வாகத்திடம் கலந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். கூட்டத்தில் சுகாதாரம் தொடர்பாக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    பேரூராட்சி கவுன்சிலர்கள் சின்னத்துரை, சிவா, மணிவண்ணன், தமிழரசி, சுமதி, அழகுராணி, பிரியா, ரமிஜா பேகம், சைதத்நிஷா, சியாமளா ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் சுகாதார ஆய்வாளர் சரவண பாண்டியன் நன்றி கூறினார்.

    • நிலக்கோட்டை பேரூராட்சி கூட்டம் மன்ற தலைவர் தலைமையில் நடைபெற்றது.
    • ரூ.34 லட்சம் மதிப்பில் பணிகள் செய்ய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை பேரூராட்சி கூட்டம் மன்ற தலைவர் சுபாஷினி பிரியா கதிரேசன் தலைமையில் நடைபெற்றது.

    துணைத் தலைவர் முருகேசன், செயலாளர் சுந்தரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நிலக்கோட்டை - திண்டுக்கல் சாலையில் நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரி அருகே ரூ.1 கோடியே 55 லட்சம் மதிப்பில் மின்மயானம் அமைக்கவும், கோட்டை, நேருநகர், துரைச்சாமிபுரம், மணியாரம்பட்டி மற்றும் 1 முதல் 15 வார்டுகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் என ரூ.34 லட்சம் மதிப்பில் பணிகள் செய்யவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் தி.மு.க. கவுன்சிலர் ஜோசப், நிலக்கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தமிழக அரசு அறிவுறுத்தலின்படி சீமை கருவேலமரங்களை முற்றிலுமாக அகற்ற தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அது ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. இக்கூட்டத்தில் சுகாதார ஆய்வாளர் சடகோபி மற்றும் ஒன்றிய பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தாமரைக்குளம் பேரூராட்சி அலுவலக கூட்டரங்கில் கூட்டம் பேரூராட்சி தலைவர் தலைமையில் நடைபெற்றது.
    • கூட்டத்தில் 30 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    பெரியகுளம்:

    பெரியகுளம் அருகே தாமரைக்குளம் பேரூராட்சி அலுவலக கூட்டரங்கில் கூட்டம் பேரூராட்சி தலைவர் பால்பாண்டி தலைமையில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் தாமரைக்குளம் பேரூராட்சிக்குட்பட்ட 15-வார்டு பகுதிகளில் உள்ள பொதுக் கழிப்பறைகளை முறையாக பராமரிப்பு செய்தல், பெரியகுளம் நகராட்சியுடன் தாமரைக்குளம் பேரூராட்சியை இணைக்க நகராட்சி சார்பில் தபால் வந்துள்ளது என தீர்மானத்தில் ஏற்றினர்.

    இதனை ஏற்று கொள்ள முடியாது என மறுப்பு செய்து ஒருமனதாக நிராகரித்தனர். சாலைகள் சேதம் அடைந்துள்ள பகுதிகளில் புதிதாக சாலை வசதிகள் அமைத்தல் உட்பட 30 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இக்கூட்டத்தில் பேரூராட்சி துணைத்தலைவர் மலர்க்கொடி சேதுராமன், பணி நியமன குழு தலைவர் பாலாமணி பழனி முருகன், செயல்அலுவலர் ஆளவந்தான், வார்டு கவுன்சிலர்கள் மைதிலி, ஜாஹீர் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • நிலக்கோட்டை பேரூராட்சி வார்டு கவுன்சிலர் களுக்கான கூட்டம் நடைபெற்றது.
    • தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரஸ் என அனைத்து கட்சிகளை சேர்ந்த 13 வார்டு கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

    நிலக்கோட்டை:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பேரூராட்சி வார்டு கவுன்சிலர் களுக்கான கூட்டம் தலைவர் சுபாஷினி பிரியா கதிரேசன் தலைமையிலும், துணைத் தலைவர் முருகேசன் மற்றும் செயல் அலுவலர் சுந்தரி ஆகியோர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது.

    கூட்டத்தில் பங்கேற்க வந்த கவுன்சிலர்கள் அனைவரும் தங்களுக்கு துணைத் தலைவர் மரியாதை கொடுக்கப்படுவதில்லை என்றும், ஒருமையில் பேசுவதாகவும் கூறி வெளிநடப்பு செய்தனர்.

    தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரஸ் என அனைத்து கட்சிகளை சேர்ந்த 13 வார்டு கவுன்சிலர்கள் வெளியேறியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து அவர்கள் தெரிவிக்கையில், பேரூராட்சி மன்றத் கூட்டத்தில் கவுன்சிலர்களை முறையாக அழைப்பதில்லை. மரியாதையின்றி பேசுகின்றனர்.

    அரசு பொறுப்பில் இருந்துகொண்டு இதுபோல் பேசுவது ஜனநாயகத்திற்கு விரோதமானது. பேரூராட்சி மன்றம் மக்கள் சார்ந்த நலப் பணிகளை செய்ய முடியாமல் முடங்கிக் கிடக்கிறது. எனவே நாங்கள் இதனை கண்டித்து வெளிநடப்பு செய்வதாகதெரிவித்தனர்.

    இதனைத் தொடர்ந்து கூட்டம் எதுவும் நடைபெறாமல் அப்படியே நிறுத்தப்பட்டது. இக்கூட்டத்தில் துப்புரவு ஆய்வாளர் சட கோபி மற்றும் அலுவலக பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×