என் மலர்
உள்ளூர் செய்திகள்

பேரூராட்சி கூட்டத்தில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.
தாமரைக்குளம் பேரூராட்சி கூட்டம்
- தாமரைக்குளம் பேரூராட்சி அலுவலக கூட்டரங்கில் கூட்டம் பேரூராட்சி தலைவர் தலைமையில் நடைபெற்றது.
- கூட்டத்தில் 30 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
பெரியகுளம்:
பெரியகுளம் அருகே தாமரைக்குளம் பேரூராட்சி அலுவலக கூட்டரங்கில் கூட்டம் பேரூராட்சி தலைவர் பால்பாண்டி தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தாமரைக்குளம் பேரூராட்சிக்குட்பட்ட 15-வார்டு பகுதிகளில் உள்ள பொதுக் கழிப்பறைகளை முறையாக பராமரிப்பு செய்தல், பெரியகுளம் நகராட்சியுடன் தாமரைக்குளம் பேரூராட்சியை இணைக்க நகராட்சி சார்பில் தபால் வந்துள்ளது என தீர்மானத்தில் ஏற்றினர்.
இதனை ஏற்று கொள்ள முடியாது என மறுப்பு செய்து ஒருமனதாக நிராகரித்தனர். சாலைகள் சேதம் அடைந்துள்ள பகுதிகளில் புதிதாக சாலை வசதிகள் அமைத்தல் உட்பட 30 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்தில் பேரூராட்சி துணைத்தலைவர் மலர்க்கொடி சேதுராமன், பணி நியமன குழு தலைவர் பாலாமணி பழனி முருகன், செயல்அலுவலர் ஆளவந்தான், வார்டு கவுன்சிலர்கள் மைதிலி, ஜாஹீர் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.






