search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேக்கரி கடைகளில்"

    • பேக்கரி மற்றும் ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
    • 2 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

    பவானி:

    ஈரோடு மாவட்ட நிர்வாகம், உணவு பாதுகாப்பு துறை ஆணையர் ஆகியோர் உத்திரவின் கீழ் மாவட்ட நியமன அலுவலர் அறிவுறுத்துதலின் படி பவானி நகரம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் பேக்கரி மற்றும் ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு துறை பவானி நகர அலுவலர் சதீஷ்குமார், வட்டார அலுவலர் லட்சுமி ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    15-க்கும் மேற்பட்ட கடைகளில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் முறை யான லேபிள் விபரம் இல்லாத பிரட் வகைகள் சுமார் 3.5 கிலோ கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது.

    முட்டை பப்ஸ் வகைகளின் தரம் ஆய்வு செய்யப்பட்டது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டி கவர்கள் 1.2 கிலோ கைப்பற்றப்பட்டது.

    இனிப்பு மற்றும் கார வகைகள் தயாரிக்க செயற்கை நிறம் பயன்படுத்தக்கூடாது எனவும், உரிமம் பெறாத கடைகள் உடனடியாக உரிமம் பெற அறிவுறுத்தப் பட்டு 2 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

    சுகாதாரமற்ற முறையில் இயங்கிய ஒரு கடைக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது.

    மேலும் உணவு பாதுகாப்பு தரம் குறைவு பற்றிய புகாருக்கு 94440 42322 என்ற எண்ணுக்கு பொதுமக்கள் புகார் அளிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    ×