search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெரிய கண்மாய்"

    • 13 ஊருணிகளுக்கு வைகை தண்ணீரை கொண்டு சேர்க்க திட்டம் நடந்து வருகிறது.
    • இந்த தண்ணீர் வைகை ஆற்றில் ஓடி வந்து ராமநாதபுரம் பெரிய கண்மாயை வந்தடைந்து உள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் பெரிய கண்மாயில் இருந்து நகரில் உள்ள ஊருணிகளுக்கு நிலத்தடி நீர் ஆதாரத்தை பெருக்க வைகை தண்ணீர் திறந்து விடப்பட்டது. உபரிநீர் வைகை அணை நிரம்பி உபரி நீர் திறந்துவிடப்பட்ட நிலையில் தற்போதைய நிலையில் 618 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட ராமநாதபுரம் பெரிய கண்மாயில் 328 மில்லியன் கனஅடி தண்ணீர் சேர்ந்து உள்ளது.

    இந்த தண்ணீர் வைகை ஆற்றில் ஓடி வந்து ராமநாதபுரம் பெரிய கண்மாயை வந்தடைந்து உள்ளது. வடகிழக்கு பருவமழை பெய்ய உள்ளதால் நகரின் நிலத்தடி நீர் ஆதாரத்தை உயர்த்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து உள்ளது. இதற்காக பெரிய கண்மாயில் தேக்கப்பட்டுள்ள வைகை தண்ணீரை நகரின் தேவைக்காக ஊருணிகளில் நிரப்பும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

    நேற்று காலை ராமநாதபுரம் பெரிய கண்மாயின் 6-வது மடை அமைந்துள்ள காவனூர் முதுனாள் பகுதியில் இருந்து ஊருணிகளுக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. ராமநாதபுரம் கோட்டாட்சியர் சேக்மன்சூர், நகரசபை தலைவர் கார்மேகம் ஆகியோர் தண்ணீரை திறந்து விட்டனர்.

    இதில் தாசில்தார் முருகேசன், நகராட்சி துணைத்தலைவர் பிரவீன்தங்கம் மற்றும் கவுன்சிலர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர். விநாடிக்கு 20 கனஅடி திறந்து விடப்பட்டுள்ள இந்த தண்ணீர் நொச்சிவயல், மானாங்குண்டு ஊருணிகளுக்கு செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதன் தொடர்ச்சியாக பெரிய கண்மாயின் 5-வது மடை பகுதியில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட உள்ளது. இந்த தண்ணீர் முகவை ஊருணி, நீலகண்டி ஊருணி, சிதம்பரம் பிள்ளை ஊருணி, லட்சுமிபுரம் ஊருணிகளுக்கு கொண்டு செல்லப்பட உள்ளது. இது தவிர, பம்பிங் முறையில் மோட்டார் வைத்து சாயக்கார ஊருணி, செம்மண்குண்டு ஊருணி, கிடாவெட்டி ஊருணிகளுக்கும் தண்ணீரை கொண்டு செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    இவ்வாறு நகரில் உள்ள ஏறத்தாழ 13 ஊருணிகளுக்கு வைகை தண்ணீரை கொண்டு சேர்த்து நிலத்தடி நீர் ஆதாரத்தை பெருக்க திட்டமிட்டு உள்ளதாக ராமநாதபுரம் நகரசபைத் தலைவர் கார்மேகம் தெரிவித்தார்.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரிய கண்மாயை சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
    • 350 மீட்டருக்கு தடுப்பு சுவர்கள் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் பெரிய கண்மாய் காருகுடியில் தொடங்கி லாந்தை வரை 12 கி.மீ., நீளம், 200 ஏக்கர் பரப்பளவு கொண்டது. 8.24 சதுர மைல் நீர் பிடிப்பு பகுதியில் 618 மில்லியன் கன அடி தண்ணீர் தேக்க முடியும்.

    இதனை நம்பி ஆண்டுதோறும் பல ஆயிரம் ஏக்கரில் நன்செய், புன்செய் சாகுபடி நடக்கிறது. பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் கண்மாய் துார்ந்து போய் மண் மேடாகி விட்டது. இதனால் நீர் தேக்க பகுதி குறைந்து விட்டது. கண்மாய் துார்வாரப்படாமலும், வரத்து கால்வாய்கள் சீரமைக்கப்படாததால் ராமநாதபுரம் பெரியகண்மாய் பாசனத்திற்கு வரும் வைகை தண்ணீர் போதிய அளவு தேக்க முடியாமல் ஆண்டுதோறும் வீணாக கடலில் கலக்கிறது. தலை மதகுப்பகுதி புதர் மண்டி பாழாகி உள்ளது.

    இந்த நிலையில் ரூ.9 கோடியே 93 லட்சம் செலவில் காருகுடியில் உள்ள பெரிய கண்மாய் மதகுகள் முதலூர், குளத்தூர் வரை ஆற்றுபடுகையில் வரத்துவாய்க்கால் மதகுகள் செப்பனிட்டு, ஆற்றுபடுகை ஆழப்படுத்தி உள்ளனர்.

    350 மீட்டருக்கு தடுப்பு சுவர்கள் அமைக்கும்பணி, புதிதாக 2 ஷட்டர்கள் பொருத்தும் பணியும் தீவிரமாக நடக்கிறது. பருவமழை காலத்திற்குள் சீரமைக்கும் பணிகளை முடிக்க உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×