என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "alignment work"

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரிய கண்மாயை சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
    • 350 மீட்டருக்கு தடுப்பு சுவர்கள் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் பெரிய கண்மாய் காருகுடியில் தொடங்கி லாந்தை வரை 12 கி.மீ., நீளம், 200 ஏக்கர் பரப்பளவு கொண்டது. 8.24 சதுர மைல் நீர் பிடிப்பு பகுதியில் 618 மில்லியன் கன அடி தண்ணீர் தேக்க முடியும்.

    இதனை நம்பி ஆண்டுதோறும் பல ஆயிரம் ஏக்கரில் நன்செய், புன்செய் சாகுபடி நடக்கிறது. பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் கண்மாய் துார்ந்து போய் மண் மேடாகி விட்டது. இதனால் நீர் தேக்க பகுதி குறைந்து விட்டது. கண்மாய் துார்வாரப்படாமலும், வரத்து கால்வாய்கள் சீரமைக்கப்படாததால் ராமநாதபுரம் பெரியகண்மாய் பாசனத்திற்கு வரும் வைகை தண்ணீர் போதிய அளவு தேக்க முடியாமல் ஆண்டுதோறும் வீணாக கடலில் கலக்கிறது. தலை மதகுப்பகுதி புதர் மண்டி பாழாகி உள்ளது.

    இந்த நிலையில் ரூ.9 கோடியே 93 லட்சம் செலவில் காருகுடியில் உள்ள பெரிய கண்மாய் மதகுகள் முதலூர், குளத்தூர் வரை ஆற்றுபடுகையில் வரத்துவாய்க்கால் மதகுகள் செப்பனிட்டு, ஆற்றுபடுகை ஆழப்படுத்தி உள்ளனர்.

    350 மீட்டருக்கு தடுப்பு சுவர்கள் அமைக்கும்பணி, புதிதாக 2 ஷட்டர்கள் பொருத்தும் பணியும் தீவிரமாக நடக்கிறது. பருவமழை காலத்திற்குள் சீரமைக்கும் பணிகளை முடிக்க உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×