search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண்கள் போராட்டம்"

    • வீடுகளை அகற்ற சென்றதால் ஆத்திரம்
    • 2 நாட் கள் கால அவகாசம் கொடுத்து அதிகாரிகள் திரும்பி சென்றனர்

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளியை அடுத்த பந்தராபள்ளி பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். 1976-ம் ஆண்டு ஆதிதி ளது. ராவிடர் நலத்துறை சார்பில் சுமார் 48 பேருக்கு வீட்டு மனை பட்டா வழங்கி உள்ள னர். அதில் அவர்கள் வீடு கட்டி. உள்ளனர்.

    பின்னர் 2018-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 48 பேருக்கு கொடுத்த பட்டாக்களின் சர்வே எண்களிலேயே இரண்டாவது முறையாக சிலருக்கு பட்டா இடம் கொடுத்துள்ளனர்.

    இந்த நிலையில் அங்கு கட்டப்பட்டுள்ள சில வீடுகளை இடிக்க நிர்வாகம் சார்பில் நேற்று பொக்லைன் எந்திரத்துடன் சென்றுள்ளனர்.

    இதனால் திருப்பத்தூர் சப்- கலெக்டர், ஆதிதிராவிடர் மற் றும் பழங்குடியினர் நல அலுவ லர் ஜெயக்குமார் மற்றும் நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார் உள்ளிட்ட வருவாய்த் துறை அதிகாரிகளை முற்றுகை யிட்டு வாக்குவாதத்தில் ஈடு பட்டனர்.

    மேலும் ஒரே இடத் திற்கு இரண்டு முறை பட்டா வழங்கியது உங்களுடைய தவறு. இதுகுறித்த வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

    கோர்ட்டு உத்தரவு வந்த பிறகு இடித்துக் கொள்ளுங்கள் என வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர். ஆனால் அதிகாரிகள் வீடு களை இடிக்க முற்பட்டதால் பொதுமக்கள் பொக்லைன் எந்திரத்தின் மீது ஏறி அமர்ந்தும், எந்திரத்தின் முன்பும் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் பொதுமக்களுக் கும், நாட்டறம்பள்ளி போலீ சாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

    இதன் காரணமாக அசம்பாவிதத்தை தடுக்கும் வண்ணம் மாவட்ட குற்றப்பிரிவுதுணை போலீஸ் சூப்பிரண்டு நிலவழகன் தலைமையில் 100- க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்ப ட்டனர். பொது மக்களுக்கு ஆதரவாக அதிகா ரிகளிடம், வழக்கறிஞர் கேட் டுக்கொண்டதன் காரண மாக மேலும் 2 நாட் கள் கால அவகாசம் கொடுத்து அங்கிருந்து திரும்பி சென்றனர்.

    இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • வாடகை வீட்டில் வசிக்கும் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு முற்றுகையிட்டனர்.
    • கலெக்டர் அலுவலகத்தை 100-க்கும் மேற்பட்ட பெண்கள் திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் வாடகை வீட்டில் வசிக்கும் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது .

    இந்த நிலையில் இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தை 100-க்கும் மேற்பட்ட பெண்கள் திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். வாடகை வீட்டில் குடியிருப்பதால் வாடகை கொடுக்க முடியவில்லை. அதனால் வீதியில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுவரை 4 மனு கொடுத்தும்எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை. எங்களின் நிலையை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த முற்றுகை போராட்டத்தில் பெண்கள் ஈடுபட்டனர். போலீசாரும் அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

    • தார்ச்சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதி
    • பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை

    வந்தவாசி:

    வந்தவாசி- விளாங்காடு சாலையில் உள்ள ஆரியாத்தூரிலிருந்து கோயில்குப்பம் கிராமத்துக்குச் செல்லும் சுமார் ஒன்றரை கி.மீ. தூர தார்ச்சாலை குண்டும் குழியுமாக உள்ளது.

    மழையின் காரணமாக சாலை பள்ளங்களில் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இந்த தார்ச் சாலை போடப்பட்டது. போட்ட சில மாதங்களிலேயே இந்த சாலை சேதமடைய தொடங்கியது. காலப்போக்கில் குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கே பயனற்ற நிலையில் சேதமடைந்து விட்டது.

    மழைக் காலங்களில் சேறும் சகதியுமாக ஆகிவிடுவதால், பள்ளிக்கு சைக்கிளில் செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் பைக்குகளில் செல்வோர் சேற்றில் சிக்கி விழுந்து காயமடையும் நிலை ஏற்படுகிறது.

    இதுகுறித்து ஒன்றிய மற்றும் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    எனவே புதிய சாலை அமைக்கக் கோரி சேற்றில் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    • மணல் குவாரி அமைக்க வலியுறுத்தல்
    • மாட்டு வண்டியில் மணல் எடுக்க அனுமதி கேட்டனர்

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே மாட்டுவண்டி தொழிலாளர்கள் குடும்பங்களை சேர்ந்த பெண்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    இதற்கு மாட்டுவண்டி தொழிலாளர் நல சங்க மாவட்ட தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். ரேகா, சாம்பலா, சீதா, தமிழ்ச்செல்வி மற்றும் மாவட்ட செயலாளர் ஜெயக்குமார், வீரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தமிழகத்தில் அனைத்து மாவட்டத்திலும் மணல் குவாரி அமைக்க வேண்டும். காட்பாடி அரும்பருத்தி அரசு மணல் குவாரியில் மாட்டுவண்டியில் மணல் எடுக்க அனுமதி அட்டையை வழங்க வேண்டும்.

    ஏழை மாட்டுவண்டி தொழிலாளர்கள் வாழ்வாதாரத்துக்கு மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

    • குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் சூழ்ந்ததால் ஆத்திரம்
    • அதிகாரிகள் பேச்சுவார்த்தையால் சமரசம்

    ஆரணி :

    திருவண்ணா மலை மாவட்டம் ஆரணி அருகே ராட்டினமங்கலம் ஊராட்சி க்குட்பட்ட பழையகாலனி பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    தற்போது குடியிருப்பு பகுதியில் கழிவு நீர் மற்றும்கால்வாய் சூழ்ந்து கொண்டதால் குடியிருப்பு வாசிகளுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இதனால் ஊராட்சி மன்றத்திலும் மற்றும் ஆரணி ஓன்றிய அலுவலகத்திலும் பலமுறை மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ராட்டின மங்கலம் பெண்கள் ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முற்றுகை யிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நுழைந்த பெண்கள் சேர்மன் அறையின் முன்பு தரையில் அமர்ந்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

    பின்னர் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் சமரசம் செய்து 2 தினங்களில் கழிவு நீர் கால்வாய் சரி செய்து நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்ததன் பேரில் கலைந்து சென்றனர்.

    இச்சம்பவம் அப்ப குதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×