சாலை அமைக்கக்கோரி நாற்று நட்டு பெண்கள் போராட்டம்

தார்ச்சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதி பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை
சாலையில் நாற்று நட்டு பெண்கள் போராட்டம் நடத்திய காட்சி.
சாலையில் நாற்று நட்டு பெண்கள் போராட்டம் நடத்திய காட்சி.
Published on

வந்தவாசி:

வந்தவாசி- விளாங்காடு சாலையில் உள்ள ஆரியாத்தூரிலிருந்து கோயில்குப்பம் கிராமத்துக்குச் செல்லும் சுமார் ஒன்றரை கி.மீ. தூர தார்ச்சாலை குண்டும் குழியுமாக உள்ளது.

மழையின் காரணமாக சாலை பள்ளங்களில் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இந்த தார்ச் சாலை போடப்பட்டது. போட்ட சில மாதங்களிலேயே இந்த சாலை சேதமடைய தொடங்கியது. காலப்போக்கில் குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கே பயனற்ற நிலையில் சேதமடைந்து விட்டது.

மழைக் காலங்களில் சேறும் சகதியுமாக ஆகிவிடுவதால், பள்ளிக்கு சைக்கிளில் செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் பைக்குகளில் செல்வோர் சேற்றில் சிக்கி விழுந்து காயமடையும் நிலை ஏற்படுகிறது.

இதுகுறித்து ஒன்றிய மற்றும் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே புதிய சாலை அமைக்கக் கோரி சேற்றில் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com