என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே மாட்டுவண்டி தொழிலாளர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூரில் பெண்கள் போராட்டம்
- மணல் குவாரி அமைக்க வலியுறுத்தல்
- மாட்டு வண்டியில் மணல் எடுக்க அனுமதி கேட்டனர்
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே மாட்டுவண்டி தொழிலாளர்கள் குடும்பங்களை சேர்ந்த பெண்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதற்கு மாட்டுவண்டி தொழிலாளர் நல சங்க மாவட்ட தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். ரேகா, சாம்பலா, சீதா, தமிழ்ச்செல்வி மற்றும் மாவட்ட செயலாளர் ஜெயக்குமார், வீரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் அனைத்து மாவட்டத்திலும் மணல் குவாரி அமைக்க வேண்டும். காட்பாடி அரும்பருத்தி அரசு மணல் குவாரியில் மாட்டுவண்டியில் மணல் எடுக்க அனுமதி அட்டையை வழங்க வேண்டும்.
ஏழை மாட்டுவண்டி தொழிலாளர்கள் வாழ்வாதாரத்துக்கு மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
Next Story






