search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புயல் தாக்குதல்"

    இந்தோனேசியா நாட்டை சமீபத்தில் உலுக்கிய நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் ஏற்பட்ட பேரழிவு தொடர்பான மறுகட்டமைப்புக்கு 100 கோடி டாலர் கடனுதவி வழங்குவதாக உலக வங்கி அறிவித்துள்ளது. #IndonesiaReconstruction
    ஜகர்தா:

    இந்தோனேசியாவில் கடந்த மாதம் 29-ம் தேதி சுலாவேசி தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அங்குள்ள பலு நகரை சுனாமி தாக்கியது. இதனால் அந்நகரம் அழிவு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அங்கிருந்த வீடுகள், கட்டிடங்கள், ஓட்டல்கள், வணிக வளாகங்கள் அனைத்தும் இடிந்து தரைமட்டமானது.

    இந்த இயற்கை சீற்றத்துக்கு சுமார் 2 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகாயமடைந்தனர். சுமார் 5 ஆயிரம் பேர் காணாமல் போனதாக தெரிகிறது. இதுதவிர, பல லட்சக்கணக்கான மக்கள் தங்களது வாழ்வாதாரங்களை இழந்து உள்நாட்டிலேயே அகதிகள்போல் வாழ்ந்து வருகின்றனர்.

    இந்தோனேசியாவில் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பாக சர்வதேச நிதியமான ஐ.எம்.எப். மற்றும் உலக வங்கி உயரதிகாரிகள் இங்கு வந்து  சுலாவேசி, லோம்போக் மற்றும் பலு உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டனர். அங்கு ஏற்பட்ட இழப்புகளை மதிப்பீடு செய்து ஆய்வு மேற்கொண்டனர். 

    இதேபோல், ஐ.நா. சபை பொதுச்செயலாளர் அன்ட்டோனியோ குட்டரெஸ் உள்ளிட்ட அதிகாரிகளும் ஆய்வு செய்தனர்.  

    இந்நிலையில், நிலநடுக்கம், சுனாமியால் ஏற்பட்ட பேரழிவு தொடர்பான புணர்வாழ்வு மற்றும் மறுகட்டமைப்பு பணிகளுக்காக  100 கோடி டாலர் கடனுதவி வழங்குவதாக உலக வங்கி இன்று அறிவித்துள்ளது.

    இந்த தொகையை கொண்டு பேரழிவால் மிகவும் பாதிக்கப்பட்டு, வாழாதரங்களை இழந்து வாடும் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள சுமார் ஒன்றரை லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் பண இழப்பீடு அளிக்கப்படும் என தெரிகிறது. #$1BillionLoan #$1BillionLoantoIndonesia  #IndonesiaReconstruction 
    ஓமன், ஏமனில் சொகோட்ரா தீவை மெகுனு என்ற புயல் தாக்கியது. இதில் இந்தியர் உள்பட 11 பேர் பலியாகினர். #Cyclone #Omen #Yemen
    துபாய்:

    அரபிக்கடலில் உருவான மெகுனு புயல் தெற்கு ஓமன் மற்றும் ஏமன் நாடுகளை பயங்கரமாக தாக்கியது. ஏமனில் உள்ள சொகோட்ரா தீவில் மணிக்கு 170 கி.மீ. வேகத்தில் கடுமையான சூறாவளி காற்று வீசியதுடன் கனமழை கொட்டி தீர்த்தது. மேலும் நிலச்சரிவும் ஏற்பட்டது.

    மெகுனு புயலில் சிக்கி இதுவரை 11 பேர் உயிரிழந்து உள்ளனர். இவர்களில் 3 பேர் இந்தியர்கள் என்று மஸ்கட்டில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். அதில் ஒருவரது பெயர் ஷாம்சர் அலி. மாயமான மற்றவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    புயல், மழையால் பாதிக்கப்பட்ட 145 இந்தியர்களும், 315 வங்காளதேசத்தை சேர்ந்தவர்களும் சலாலாவில் உள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.  #Yeman #Omen #Cyclone 
    ×