search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புனித தோமையார் தேவாலயம்"

    • புனித தோமையார் கத்தோலிக்க தேவாலயத்தில் கொடியேற்றத்துடன் ஆண்டுத்திருவிழா துவங்கியது.
    • 9 வாரங்களாக பிரதி ஞாயிறு தோறும் சிறப்பு நவநாள் திருப்பலி நடத்தப்பட்டது.

     அவிநாசி :

    அவிநாசி சேவூர் சாலையில் உள்ள புனித தோமையார் கத்தோலிக்க தேவாலயத்தில் கடந்த, 3ந்தேதி கொடியேற்றத்துடன் ஆண்டுத்திருவிழா துவங்கியது.நேற்று முன்தினம் திருவிழா கொண்டாடப்பட்டது.

    காலை 8:30 மணிக்கு கோவை நல்லாயன் குருத்துவ கல்லூரி பேராசிரியர் லாரன்ஸ் தலைமையில் தேவாலய பங்கு குரு கென்னடி முன்னிலையில் ஆடம்பர கூட்டுப்பாடல் திருப்பலி நடத்தப்பட்டது. திருப்பலி முடிவில் திவ்ய நற்கருணை ஆசீர் வழங்கப்பட்டது. பின் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் பாண்டு வாத்தியம் முழங்க புனித தோமையார் சுரூபம், தேவாலய வளாகத்தை சுற்றி பவனியாக எடுத்து வரப்பட்டது. முன்னதாக கடந்த 9 வாரங்களாக பிரதி ஞாயிறு தோறும் சிறப்பு நவநாள் திருப்பலி நடத்தப்பட்டது.

    கிறிஸ்தவர்கள் வணங்கும் ஏசு கிறிஸ்துவின் 12 சீடர்களில் ஒருவராக இருந்த புனித தோமையாருக்கான தேவாலயம் கோவை கத்தோலிக்க மறை மாவட்ட அளவில் அவிநாசியில் மட்டுமே அமைந்திருப்பது கூடுதல் சிறப்பு. இக்கோவில் கோபுரம் புதுப்பிப்பு பணி தற்போது நடந்து வரும் நிலையில் ஆண்டு விழா எளிமையாக நடத்தப்பட்டது.விழா ஏற்பாடுகளை பங்கு குரு, பங்கு பேரவையினர் , அன்பிய பொறுப்பாளர்கள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

    ×