search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பீளமேடு அருகே"

    • அபிராமி கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
    • கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கும் வாலிபர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

    கோவை,

    கோவை பீளமேடு அருகே உள்ள குரும்பபாளையம் கென்னடி வீதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மகள் அபிராமி (வயது 19). இவர் தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கும் வாலிபர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும் செல்போனில் பேசியும் தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

    இந்த காதல் விவகாரம் குறித்து அபிராமி தனது பெற்றோரிடம் கூறினார். மேலும் அவர் உனடியாக தனக்கும் அந்த வாலிபருக்கு திருமணம் செய்து வைக்கும்படி கூறினார்.

    அதற்கு மாணவியின் பெற்றோர் தற்போது படித்து வருவதால், படிப்பு முடிந்ததும் முடிவு செய்து திருமணம் செய்து வைப்பதாக அறிவுரை கூறினார். உடனடியாக பெற்றோர் திருமணம் செய்து வைக்காததால் அபிராமி கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் திடீரென வாழ்க்கையில் விரக்தி அடைந்து விஷத்தை குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கினார். இதனை பார்த்த அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர் அபிராமியை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அபிராமி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சுரேஷ் கல்லூரி பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார்.
    • 30 பவுன் தங்க நகைகள், ரூ.15 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவை கொள்ளை போனது.

    கோவை

    கோவை பீளமேடு அருகே உள்ள ஜீவா நகரை சேர்ந்தவர் சுரேஷ் (வயது37). கல்லூரி பேராசிரியர். சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு வெளியூருக்கு சென்று இருந்தார். அப்போது பேராசிரியர் சுரேஷ் வீட்டின் முன் பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர். அவர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த 30 பவுன் தங்க நகைகள் ரூ.15 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

    வீட்டிற்கு திரும்பி சுரேஷ் கதவு உடைக்கப்பட்டு திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

    இது குறித்து சுரேஷ் பீளமேடு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் சம்பவஇடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த மர்ம நபர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். இதனை வைத்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி பேராசிரியர் வீட்டில் 30 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.10 ஆயிரம பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள். 

    ×