search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரதமர் ரிஷி சுனக்"

    • மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் 3 நாட்கள் சுற்றுப்பயணமாக இங்கிலாந்து சென்றுள்ளார்.
    • லண்டனில் மகாத்மா காந்தி, அம்பேத்கர் நினைவிடங்களுக்குச் சென்று ராஜ்நாத் சிங் மரியாதை செலுத்தினார்.

    லண்டன்:

    மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் 3 நாட்கள் சுற்றுப்பயணமாக இங்கிலாந்து சென்றுள்ளார். கடந்த 8-ம் தேதி இங்கிலாந்து சென்றடைந்த ராஜ்நாத் சிங், லண்டனில் உள்ள மகாத்மா காந்தி, அம்பேத்கர் நினைவிடங்களுக்குச் சென்று மரியாதை செலுத்தினார்.

    இந்தப் பயணத்தின்போது இங்கிலாந்து ராணுவ மந்திரி கிராண்ட் ஷாப்ஸை சந்தித்து ராஜ்நாத் சிங் பேச்சுவார்த்தை நடத்தினார். இரு நாடுகளுக்கிடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு, ராணுவ தளவாடங்கள் உற்பத்தி, தொழில்துறை ஒத்துழைப்பு ஆகியவை குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்தியா-இங்கிலாந்து உறவுகளை மேம்படுத்துவது, இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை ஆழமாக்குவது குறித்து இங்கிலாந்து வெளியுறவுச் செயலர் டேவிட் கேமரூனுடன், ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார்.

    இந்நிலையில், மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை நேரில் சந்தித்து அவருடன் கலந்துரையாடினார்.

    கடந்த 22 ஆண்டுகளில் இந்திய பாதுகாப்புத்துறை மந்திரி ஒருவர் இங்கிலாந்து செல்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பிரதமர் இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
    • போராட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை பாதுகாப்பு படை போலீசார் கைது செய்தனர்.

    லண்டன்:

    இங்கிலாந்து பிரதமராக இந்திய வம்சாளியை சேர்ந்த ரிஷி சுனக் இருந்து வருகிறார். சமீபத்தில் இவர் இங்கிலாந்து கருங்கடல் பகுதியில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு திட்டத்தை மேலும் விரிவாக்கம் செய்வது தொடர்பான அறிவிப்புகளை வெளியிட் டார். இதற்கு அந்நாட்டு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் பசுமை பாதுகாப்பு அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    பிரதமர் இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்தநிலையில் புதிய திட்டத்தை எதிர்த்து வடக்கு யார்க் ஷையர் மாகாணத்தில் உள்ள பிரதமர் ரிஷி சுனக் வீட்டை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் முற்றுகையிட்டனர். பின்னர் அவரது வீட்டை பெரிய கறுப்பு துணியால் மூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த சமயம் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் குடும்பத்தினர் வீட்டில் இல்லை. அவர் தற்போது குடும்பத்தினருடன் கலிபோர்னியா சென்றுள்ளார்.

    இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை பாதுகாப்பு படை போலீசார் கைது செய்தனர்.அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. பிரதமர் வீட்டில் பலத்த பாதுகாப்பை மீறி அவர்கள் எப்படி சென்றனர் என்பது தெரியவில்லை. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பிரதமர் ரிஷி சுனக் சட்ட விரோத குடியேற்றத்தை ஒழிப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தார்.
    • அமலாக்கத்துறை அதிகாரிகளுடன் சட்டவிரோதமாக குடியேறியவர்களை தேடிப்பிடித்து கைதுசெய்தார்.

    லண்டன்:

    இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் இங்கிலாந்து பிரதமரானது முதல் சட்டவிரோத குடியேற்றத்தை ஒழிப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தார். சட்ட விரோதமாக வரும் அகதிகளுடனான விசாரணையும், அவர்களுக்கான சட்ட திட்டங்களையும் கடுமையாக்கினார்.

    இந்நிலையில், தற்போது புல்லட் புரூப் ஆடையுடன் களத்தில் இறங்கிய பிரதமர் ரிஷி சுனக் அமலாக்கத்துறை அதிகாரிகளுடன் சட்ட விரோதமாக குடியேறியவர்களை தேடிப்பிடித்து கைதுசெய்தார்.

    அதிகாலையில் அதிகாரிகளுடன் புறப்பட்ட ரிஷி சுனக் ஹோட்டல்கள், மதுபான விடுதிகள், சலூன்கள், வணிக வளாகங்கள் என அனைத்து இடங்களிலும் அலசி ஆராய்ந்தார்.

    இந்த தேடுதல் வேட்டையில் சட்ட விரோதமாக குடியேறிய சுமார் 20 நாடுகளை சேர்ந்த 105 பேர் கைது செய்யப்பட்டனர். இதனை டுவிட்டரில் பகிர்ந்த ரிஷி சுனக், இந்த நடவடிக்கைக்கு பலர் ஆதரவு தெரிவித்திருந்தாலும், அப்பாவி அகதிகளை சிரமத்திற்கு ஆளாக்குவதாக எதிர்மறையான கருத்துக்களும் பலதரப்பில் எழுகின்றன.

    • ஒரு மனைவியால் கணவரை எப்படி மாற்ற முடியும் என்று பாருங்கள்.
    • அந்த நாட்டின் மிக இளம் வயது பிரதமர் ரிஷி சுனக்தான்.

    லண்டன் :

    ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னும் ஒரு பெண்தான் இருக்கிறாள் என்று சொல்வது உண்டு.

    அந்த பெண்- தாயாக, மனைவியாக, சகோதரியாக, தோழியாக, ஆசிரியையாக இருக்கலாம்.

    இது உண்மைதான்.

    பிரபல தொழில் அதிபரும், 'இன்போசிஸ்' தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் நிறுவனருமான என்.ஆர்.நாராயண மூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி 'இன்ஸ்டாகிராம்' சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட வீடியோ பதிவு தீயாகப் பரவுகிறது. அதில் சுதா மூர்த்தி கூறி இருப்பதாவது:-

    இது மனைவியின் மகிமை. ஒரு மனைவியால் கணவரை எப்படி மாற்ற முடியும் என்று பாருங்கள்.

    என் கணவரை (நாராயணமூர்த்தி) நான் தொழில் அதிபர் ஆக்கினேன். என் மகள், அவளது கணவரை (ரிஷி சுனக்) இங்கிலாந்து நாட்டுக்கு பிரதமர் ஆக்கி இருக்கிறாள்.

    இவ்வாறு அவர் கூறி இருக்கிறார்.

    இந்திய வம்சாவளியான ரிஷி சுனக், 2009-ம் ஆண்டு, என்.ஆர்.நாராயணமூர்த்தி-சுதா தம்பதியரின் மகள் அக்ஷதா மூர்த்தியை காதலித்து மணந்தார்.

    கடந்த ஆண்டு இங்கிலாந்து நாட்டின் பிரதமராக ரிஷி சுனக் (வயது 42) உயர்ந்தார். அந்த நாட்டின் மிக இளம் வயது பிரதமர் ரிஷி சுனக் தான்.

    • இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் நாட்டு மக்களுக்கு உரை ஆற்றினார்.
    • எல்லா இடங்களிலும் வேலைகளுக்கு தரவுகளும், புள்ளி விவரங்களும் முக்கியமாகி விட்டது.

    லண்டன் :

    இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், புத்தாண்டில் முதல் முறையாக நாட்டு மக்களுக்கு உரை ஆற்றினார்.

    அப்போது அவர் இங்கிலாந்து மாணவர்கள் அனைவரும் 18 வயது வரையில் கணிதத்தை படிப்பதை உறுதி செய்வதற்கான திட்டம் கொண்டு வர விருப்பம் தெரிவித்தார்.

    இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், "எல்லா இடங்களிலும் வேலைகளுக்கு தரவுகளும், புள்ளி விவரங்களும் முக்கியமாகி விட்ட இன்றைய உலகில், நமது குழந்தைகளின் வேலைகளுக்கு முன் எப்போதும் இல்லாத அளவில், கூடுதல் அளவிலான பகுப்பாய்வு திறன் தேவைப்படும். இந்த திறன்கள் இன்றி நமது குழந்தைகள் வெளி உலகுக்கு சென்றால், அவர்களை நாம் கீழே விழச் செய்வதாகத்தான் கருத வேண்டும்" என தெரிவித்தார்.

    ஆனால் இங்கிலாந்தில் 16 முதல் 19 வயது வரையிலானோரில் பாதிப்பேர்தான் கணிதத்தை படிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

    • சீனா - இங்கிலாந்து இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு நீடித்து வருகிறது.
    • எங்கள் மதிப்புகள், நலன்களுக்கு சீனா ஒரு சவாலை முன்வைத்திருக்கிறது.

    லண்டன் :

    ஹாங்காங், உய்குர் இன முஸ்லிம்கள் மீதான அடுக்குமுறை உள்ளிட்ட விவகாரங்களில் சீனா மற்றும் இங்கிலாந்து இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு நீடித்து வருகிறது.

    இந்த சூழலில் சீனாவின் ஷாங்காய் நகரில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டம் குறித்து செய்தி சேகரிக்க சென்ற இங்கிலாந்தை சேர்ந்த பிரபல செய்தி நிறுவனத்தின் பத்திரிகையாளரை போலீசார் அடித்து, உதைத்து கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் இங்கிலாந்தின் பிரதமராக சமீபத்தில் பதவியேற்ற இந்திய வம்சாவளி ரிஷி சுனக் முதல் முறையாக தனது வெளியுறவு கொள்கை குறித்து நேற்று உரையாற்றினார். அப்போது சீனாவுடான இங்கிலாந்தின் உறவு குறித்து அவர் கூறும்போது, "முன்னாள் பிரதம மந்திரி டேவிட் கேமரூனால் ஏற்படுத்தப்பட்ட இங்கிலாந்து-சீனா உறவுகளின் பொற்காலம் முடிந்துவிட்டது. வணிகம் தானாகவே இரு நாடுகளுக்கிடையே சமூக, அரசியல் சீர்திருத்தத்துக்கு வழிவகுக்கும். எங்கள் மதிப்புகள், நலன்களுக்கு சீனா ஒரு சவாலை முன்வைத்திருக்கிறது.

    உலகளாவிய பொருளாதார உறுதித்தன்மை, பருவநிலை மாற்றம் போன்ற விவகாரங்களில் சீனாவின் முக்கியத்துவத்தை நாம் வெறுமனே புறக்கணிக்க முடியாது. ஆனால், இது இன்னும் பெரிய சர்வாதிகாரத்தை நோக்கி நகரும்போது இன்னும் தீவிரமாக வளரும். அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் பல நாடுகள் இதை புரிந்துகொண்டிருக்கின்றன. சீனா உள்நாட்டு மற்றும் உலகளாவிய பாதுகாப்புக்கு முதல் அச்சுறுத்தல்" என கூறினார்.

    ×