search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரதமர் உதவித்தொகை"

    • 4,389 விவசாயிகள், ஆதார் எண்ணுடன் இணைந்த மொபைல் எண் புதுப்பிக்காமல் உள்ளனர்.
    • பி.எம்., கிஷான் திட்டத்தின் கீழ், தொடர்ந்து நிதி உதவி பெற, ஆதார் எண்ணுடன் இணைந்த செல்போன் எண் இணைக்க வேண்டும்.

    உடுமலை :

    பிரதமரின் விவசாய கவுரவ உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் தகுதியான விவசாய குடும்பங்களுக்கு ஆண்டுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் வீதம் 3 தவணைகளாக வழங்கப்படுகிறது.நடப்பாண்டு செப்டம்பர் 12வது தவணையாக,ரூ.2 ஆயிரம் விவசாயிகள் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.குடிமங்கலம் வட்டாரத்தில் ஆமந்தக்கடவு கிராமத்தைச்சேர்ந்த 216 விவசாயிகளும், அணிக்கடவு 265, ஆத்துக்கிணத்துப்பட்டி 387, தொட்டம்பட்டி 129, குடிமங்கலம் 230, இலுப்ப நகரம் 165, கொண்டம்பட்டி 238, கொங்கல்நகரம் 227, கொசவம்பாளையம் 99, கோட்டமங்கலம் 294.கும்பம்பாளையம் 77, மூங்கில் தொழுவு 183, முக்கூடுஜல்லிபட்டி 115, பொன்னேரி 192,பெரியபட்டி 167, பண்ணைக்கிணறு 90, பூளவாடி 121, புதுப்பாளையம் 78, புக்குளம் 277, சோமவாரபட்டி 221, வடுகபாளையம் 211, வாகத்தொழுவு 147, வீதம்பட்டி 100, விருகல்பட்டி 125 என, மொத்தம், 4,389 விவசாயிகள், ஆதார் எண்ணுடன் இணைந்த மொபைல் எண் புதுப்பிக்காமல் உள்ளனர்.

    அதே போல் ஏறத்தாழ, 1,300 விவசாயிகள், தங்களது நில ஆவணங்களான, சிட்டா, ஆதார்எண் நகல், ரேஷன் கார்டு நகல் ஆகியவற்றை, தங்களது கிராமத்திற்குட்பட்ட, உதவி வேளாண் அலுலர்களிடம் சரிபார்க்கும் பணிக்காக வழங்கவில்லை.

    இது குறித்து குடிமங்கலம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் வசந்தா கூறியதாவது:- பி.எம்., கிஷான் திட்டத்தின் கீழ், தொடர்ந்து நிதி உதவி பெற, ஆதார் எண்ணுடன் இணைந்த செல்போன் எண் இணைக்க வேண்டும்.நில ஆவணங்களின்நகல்களை வேளாண் உதவி அலுவலர்களிடம் கொடுத்து, சரிபார்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆதார் எண்ணுடன் இணைந்த செல்போன் எண் பதிவேற்றம் செய்யாமல், 4,389 விவசாயிகள் உள்ளனர்.எனவே குடிமங்கலம் வட்டாரத்திலுள்ள விவசாயிகள், தங்கள் ஆதார் எண்ணுடன்இணைந்த செல்போன் போன் எண் மற்றும் வங்கி பாஸ் புக் ஆகியவற்றை, அருகிலுள்ள, அரசு பொது சேவை மையம், தபால் நிலையம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்திற்கு சென்று, கண்டிப்பாக பதிவை புதுப்பிக்க வேண்டும்.புதுப்பிக்கவில்லை என்றால், ஊக்கத்தொகை கிடைக்காது. எனவே புதுப்பிக்க தவறிய விவசாயிகள் உடனடியாக புதுப்பிக்க வேண்டும்.அதே போல் ஆவணங்கள் சரிபார்ப்புக்கு 1,300 விவசாயிகள் நகல்கள் வழங்காமல் உள்ளதால் அப்பணிகளும் தாமதமாகி வருகிறது.

    பி.எம்., கிஷான் திட்டத்தின் கீழ் விவசாயிகள் நிதி உதவி பெற ஆவணங்கள் புதுப்பித்தல் அவசியமாகும். வருமான வரி செலுத்தாத அரசுப்பணியாளர் அல்லாத விவசாய குடும்பத்தில் ஒருவர் மட்டுமே பி.எம்., கிஷான் திட்டத்தில் பயன் பெற முடியும்.எனவே, தகுதியான அனைத்து விவசாயிகளும் இ.கே.ஒய்.சி., வழியாக ஆதார்எண்ணுடன் இணைந்த செல்போன் எண்ணை உடனடியாக புதுப்பித்து ஊக்கத்தொகையை தொடர்ந்துபெற்று பயனடையலாம்.இவ்வாறு உதவி இயக்குனர் தெரிவித்தார்.

    ×