search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரச்சாரம்"

    • ஓய்வு பெற்றவர்களுக்கு சட்டப்படியான ஓய்வூதியம் வழங்கவேண்டும்.
    • அரசுத்துறைகளில் உள்ள காலிபணியிடங்ளை நிரப்ப வேண்டும்.

    தருமபுரி,

    பழைய பென்சன்‌திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலகங்கள் முன் ஊழியர்‌ சந்திப்பு பிரச்சாரம் நடைபெற்றது.

    புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து வரையறுக்கப்பட்ட பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.சத்துணவு, அங்கன்வாடி, கணிணி இயக்குபவர்கள், ஊர்புறநூலகர்கள், எம்ஆர்பி செவிலியர்கள், கிராம உதவியாளர்கள், குழந்தைகள் பாதுகாப்பு திட்ட ஊழியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வரையறுக்கப்ப ஊதியம் மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கு சட்டப்படியான ஓய்வூதியம் வழங்கவேண்டும். அரசுத்துறைகளில் உள்ள காலிபணியிடங்ளை நிரப்ப வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிரச்சாரம் நடந்தது.

    இந்த பிரச்சாரத்திற்கு மாவட்ட தலைவர் சுருளிநாதன் தலைமை வகித்தார். ‌தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில பொதுச்செயலாளர் செல்வம் மாவட்ட செயலாளர் சேகர்,மாவட்ட பொருளாளர் புகழேந்தி மாவட்ட துணைத்தலைவர் ஜெயவேல், வட்ட பொருளாளர் குமரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சாலைப் பணியாளர்களுக்கு 44 நாள் ஊதியத்தை வழங்க வேண்டும்.
    • அரசு ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

    உடுமலை :

    உடுமலை திருமூர்த்திமலையில் இருந்து பாலாறு வழியாக அணைக்கு தண்ணீர் செல்கிறது. இந்த பாலாறு ஆனைமலை அருகே நா.மு சங்கம் பகுதியில் ஆழியாற்றில் கலக்கிறது. வழியில் பல இடங்களில் ஆறு ஆக்கிரமிக்கப் பட்டிருந்தது. ஆற்றுப்பாதையில் தென்னைகள் உள்ளிட்ட மரங்கள் வளர்க்கப்பட்டன.

    இந்நிலையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினர். இதன் காரணமாக தற்போது பாலாற்றில் அதிக தண்ணீர் தேங்கியுள்ளது. இதன் மூலம் ராவணபுரம் ,தேவனூர் புதூர் ஊராட்சி பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து உள்ளது.

    இந்த பகுதியில் விவசாயிகள் அதிக அளவில் வேளாண் பயிர்களை சாகுபடி செய்துள்ளனர். விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் கிடைப்பதாலும் குடிநீருக்கு தேவையான தண்ணீர் கிடைப்பதாலும் கிராம மக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பல்வேறு கிராமங்களுக்கு சென்று பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.
    • உடுமலை வட்டார ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    உடுமலை,

    தமிழக அரசு பள்ளிக்கல்வித் துறையின் அறிவுறுத்தலின்படி திருப்பூர் மாவட்ட கலெக்டர் மற்றும் முதன்மை கல்வி அலுவலர் வழிகாட்டுதலின்படி உடுமலை கல்வி மாவட்டத்தில் ஊராட்சி ,நகராட்சி அரசு பள்ளிகளில் தீவிர மாணவர் சேர்க்கை பற்றிய விழிப்புணர்வு வாகனப் பிரச்சாரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி வைக்கப்பட்டது. 2022 -23 ம் கல்வி ஆண்டில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் இன்று திறக்கப்பட்டது.

    அதனடிப்படையில் மாணவர்களை அரசு பள்ளியில் சேர்ப்பதற்காக தீவிர மாணவர் சேர்க்கை வாகனப்பிரச்சாரம் உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் துவங்கி உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பல்வேறு கிராமங்களுக்கு சென்று பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்போம் மற்றும் அரசின் பல்வேறு நலத் திட்டங்களை விளக்கி கூறி இந்த வாகன பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. இந்த தீவிர மாணவர் சேர்க்கை வாகன பிரச்சாரத்தை உடுமலைப்பேட்டை வட்டார கல்வி அலுவலர்கள் ஆறுமுகம், மனோகரன் மற்றும் வட்டார வள மைய மேற்பார்வையாளர் சண்முகசுந்தரம் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். இதில் உடுமலை வட்டார ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    ×