search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு ஊழியர் சங்கம்"

    • வருவாய்த்துறை அலுவலர் சங்கக் கொடியினை தலைமையிடத்து துணை தாசில்தார் சரவணன் ஏற்றினார்.
    • சங்கத்தின் கோரிக்கைகளை தமிழக முதல்-அமைச்சர் விரைவில் நிறைவேற்றிட வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

    சிவகிரி:

    தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 40-வது அமைப்பு தினம் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பாக சிவகிரி தாலுகா அலுவலகம், வாசுதேவநல்லூர் யூனியன் அலுவலகம் ஆகிய இடங்களில் கொண்டாடப்பட்டது.

    நிகழ்ச்சியில் வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவரும், அரசு ஊழியர் சங்க மாவட்ட இணைச்செயலாளருமான மாடசாமி தலைமையில் நடைபெற்றது. சிவகிரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வருவாய்த்துறை அலுவலர் சங்கக் கொடியினை தலைமையிடத்து துணை தாசில்தார் சரவணன் ஏற்றினார். வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட துணை தலைவர் மற்றும் அரசு ஊழியர் சங்க வட்டக்கிளை தலைவரான கணேசன் சங்கக் கொடியினை ஏற்றி சிறப்புரையாற்றினார். மாவட்ட இணைச்செயலாளர் மாடசாமி வாழ்த்துரை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் தலைமை நில அளவர், மண்டல துணை தாசில்தார், தேர்தல் துணை தாசில்தார், சிவகிரி வருவாய் ஆய்வாளர், கிராம உதவியாளரும் சிவகிரி வட்ட செயலாளருமான அழகுராஜா, வேல்முருகன் மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர். வாசுதேவநல்லூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன் சங்கக் கொடியினை ஏற்றி சிறப்புரையாற்றினார். மாவட்ட இணைச் செயலாளர் மாடசாமி வட்டக்கிளை தலைவர் கணேசன், வட்டக்கிளை செயலாளர் முனியசாமி, மகளிர் அணி பஞ்சவர்ணம் உள்ளிட்டோர் பேசினர்.

    நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய அலுவலக பணியாளர்கள், தோட்டக்கலைத்துறை, வேளாண்மைத்துறை அலுவலகப் பணியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் தமிழக அரசு ஊழியர் சங்கத்தின் கோரிக்கைகளை தமிழக முதல்-அமைச்சர் விரைவில் நிறைவேற்றிட வேண்டுகோள் விடுக்கப்பட்டது. மேலும், சங்கத்தை உருவாக்கி கட்டமைக்கப் பாடுபட்ட நிர்வாகிகளின் தியாகங்களைப் போற்றி, அவர்கள் வழியில் சங்கத்தினை திறம்பட வழிநடத்தி, அரசு ஊழியர்களின் நலன்களைப் பாதுகாத்திட உறுதி மேற்கொள்ளப்பட்டது.

    • சாலைப் பணியாளர்களுக்கு 44 நாள் ஊதியத்தை வழங்க வேண்டும்.
    • அரசு ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

    உடுமலை :

    உடுமலை திருமூர்த்திமலையில் இருந்து பாலாறு வழியாக அணைக்கு தண்ணீர் செல்கிறது. இந்த பாலாறு ஆனைமலை அருகே நா.மு சங்கம் பகுதியில் ஆழியாற்றில் கலக்கிறது. வழியில் பல இடங்களில் ஆறு ஆக்கிரமிக்கப் பட்டிருந்தது. ஆற்றுப்பாதையில் தென்னைகள் உள்ளிட்ட மரங்கள் வளர்க்கப்பட்டன.

    இந்நிலையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினர். இதன் காரணமாக தற்போது பாலாற்றில் அதிக தண்ணீர் தேங்கியுள்ளது. இதன் மூலம் ராவணபுரம் ,தேவனூர் புதூர் ஊராட்சி பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து உள்ளது.

    இந்த பகுதியில் விவசாயிகள் அதிக அளவில் வேளாண் பயிர்களை சாகுபடி செய்துள்ளனர். விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் கிடைப்பதாலும் குடிநீருக்கு தேவையான தண்ணீர் கிடைப்பதாலும் கிராம மக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ×