search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரச்சனைகள்"

    • தமிழ்நாடு முதலமைச்சரால் நான் முதல்வன் நிரல் திருவிழா 7-ந் தேதி தொடங்கி வைக்கப்பட்டது.
    • பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது போன்ற பயிற்சிகள் வழங்கப்படும்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் சார்பில், நான் முதல்வன் திட்டத்தின்கீழ், தொழில்துறை நிறுவனங்கள், அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் தொழில்நுட்ப மாணவர்கள் கலந்துகொள்ளும் ஒருநாள் பயிற்சி வகுப்பிற்கான நிரல் திருவிழாவினை மாவட்ட கலெக்டர் பழனி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:- தமிழ்நாடு முதலமைச்சரால் நான் முதல்வன் நிரல் திருவிழா 7-ந் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம் தொழில்நுட்பம் சார்ந்த தீர்வுகளை கொண்டு தொடரும் சிக்கல்களை தீர்க்கவும் நமது மாணவர்களிடம் புத்தாக்கத்தை தூண்டுவதே நிரல் திருவிழா நோக்கமாகும். இது அனைத்து தொழில்நுட்ப மாணவர்கள் படிப்புகளில் இறுதியாண்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில்நான் முதல்வன் திட்டத்தின்கீழ், தொழில்துறை நிறுவனங்கள், அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் தொழில்நுட்ப மாணவர்கள் கலந்துகொள்ளும் ஒருநாள் பயிற்சி வகுப்பிற்கான நிரல் திருவிழா தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    இதன் முக்கிய நோக்கம் அரசுத்துறைகள் மற்றும் தொழில்நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் பிரச்சனைகள் அறிந்து கொள்வது மற்றும் மாணவர்களிடம் உள்ள தீர்வு காணும் திறன்களை பயன்படுத்தி பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது போன்ற பயிற்சிகள் வழங்கப்படும். இதன் வாயிலாக, சவால்கள் மற்றும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படுவதற்கு வாய்ப்பாக அமையும். நிரல் விழாவில், புத்தாக்கப்பயிற்சியாக, அக்ரிடெக் மற்றும் உணவு தொழில்நுட்பம், சுத்தமான மற்றும் பசுமை தொழில்நுட்பம், உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு, பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம், மெட்டெக்,பயோடெக், ஹெல்த், புதுப்பிக்கத்தக்க மற்றும் நிலையான ஆற்றல், ஸ்மார்ட் நகரம், கிராமப்புற வளர்ச்சி, ஸ்மார்ட் வாகனங்கள், கல்வி 4.0 போன்ற துறைகளின் சார்பில் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. இவ்வாறு கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார். இந்நிகழ்ச்சியில், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ருதன்ஜெய் நாராயணன், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர்பாலமுருகன், மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர்.அருள், உதவி இயக்குநர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலக சிவ நடராஜன், ஊரக புத்தாக்கத் திட்ட பயிற்சியாளர் அனிதா, மேலாளர்ஆதர்ஷ் மிட்டல் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • முகாமில் பள்ளி மாணவிகளுக்கு சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    • இளம்பெண்கள் மற்றும் மாணவிகள் எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தி தலைமை வகித்தார். பட்டுக்கோட்டை வட்ட சட்டப் பணிக்குழு தலைவர் பாலகிருஷ்ணன் வழிகாட்டுதலின்படி மாணவிகளுக்கு சட்ட விழிப்புணர்வு நடைபெற்றது.

    முகாமில் மாவட்ட உரிமையியல் நீதிபதி அழகேசன், பட்டுக்கோட்டை நீதித்துறை நடுவர் சத்யா, அரசு வழக்கறிஞர் பாண்டியராஜன் ஆகியோர் கலந்து கொண்டு பள்ளி மாணவிகளுக்கு சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    நிகழ்ச்சியில் இளம்பெண்களுக்கு இன்றைய சமுதாயத்தில் ஏற்படும் பிரச்சனைகளை எதிர்கொள்வது குறித்தும், இளம்பெண்கள் மற்றும் மாணவிகள் எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும், உரிமை, பாதுகாப்பு, ஒழுக்கம், இவற்றை நன்கு அறிந்து செயல்பட வேண்டுமெனவும் நீதிபதிகள் மாணவிகளுக்கு அறிவுறுத்தினர்.

    நிகழ்ச்சியில் பேராவூரணி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி, சேதுபாவாசத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்திவேல் கலந்து கொண்டனர். முன்னதாக பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கார்த்திகேயன் வரவேற்று பேசினார்.நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவிகள், வழக்கறிஞர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். வட்ட சட்ட பணிக்குழு சட்டப் பணியாளர்கள் மணிகண்டன், தமிழ்ச்செல்வன் நிகழ்ச்சி–க்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    ×