search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சட்ட விழிப்புணர்வு முகாம்
    X

    அரசு பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம்

    சட்ட விழிப்புணர்வு முகாம்

    • முகாமில் பள்ளி மாணவிகளுக்கு சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    • இளம்பெண்கள் மற்றும் மாணவிகள் எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தி தலைமை வகித்தார். பட்டுக்கோட்டை வட்ட சட்டப் பணிக்குழு தலைவர் பாலகிருஷ்ணன் வழிகாட்டுதலின்படி மாணவிகளுக்கு சட்ட விழிப்புணர்வு நடைபெற்றது.

    முகாமில் மாவட்ட உரிமையியல் நீதிபதி அழகேசன், பட்டுக்கோட்டை நீதித்துறை நடுவர் சத்யா, அரசு வழக்கறிஞர் பாண்டியராஜன் ஆகியோர் கலந்து கொண்டு பள்ளி மாணவிகளுக்கு சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    நிகழ்ச்சியில் இளம்பெண்களுக்கு இன்றைய சமுதாயத்தில் ஏற்படும் பிரச்சனைகளை எதிர்கொள்வது குறித்தும், இளம்பெண்கள் மற்றும் மாணவிகள் எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும், உரிமை, பாதுகாப்பு, ஒழுக்கம், இவற்றை நன்கு அறிந்து செயல்பட வேண்டுமெனவும் நீதிபதிகள் மாணவிகளுக்கு அறிவுறுத்தினர்.

    நிகழ்ச்சியில் பேராவூரணி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி, சேதுபாவாசத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்திவேல் கலந்து கொண்டனர். முன்னதாக பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கார்த்திகேயன் வரவேற்று பேசினார்.நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவிகள், வழக்கறிஞர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். வட்ட சட்ட பணிக்குழு சட்டப் பணியாளர்கள் மணிகண்டன், தமிழ்ச்செல்வன் நிகழ்ச்சி–க்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    Next Story
    ×