search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பின்பற்ற வேண்டிய"

    • தேர்தல் விதிமுறைகள் குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமார் அறிவுரை வழங்கியுள்ளார்.
    • கிரிமினல் வழக்குகளில் தொடர்பு உள்ள வர்கள் வாக்குச்சாவடி முகவர்களாக செல்ல அனுமதிக்க கூடாது.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் போட்டியிடும் அனைத்து அரசியல் கட்சி கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களுக்கு தேர்தல் விதிமுறைகள் குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமார் அறிவுரை வழங்கியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறி யிருப்பதாவது:

    ஈரோடு இடைத்தேர்தலை யொட்டி நாளை (திங்க ட்கிழமை) வாக்குப் பதிவு முடியும் வரை தேர்தல் தொடர்பான எந்த ஒரு பொது கூட்டத்தையோ, ஊர்வலத்தையோ, யாரும் ஒருங்கிணைக்கவோ? நடத்தவோ? அல்லது அவற்றில் பங்கேற்கவோ? கூடாது.

    பொதுமக்களை ஈர்க்கும் வகையில், இசை நிகழ்ச்சி, திரையரங்க செயல்பாடு, பொழுது போக்கு நிகழ்ச்சிகள் வாயிலாக தேர்தல் சம்பந்தமான பரப்புரை செய்யக்கூடாது.

    வாக்கு ப்பதிவு நாளன்று, வேட்பாளர் சொந்த பயன்பாட்டுக்காக ஒரு வாகனமும், தேர்தல் முகவரின் பயன்பா ட்டுக்காக ஒரு வாகனமும் மட்டுமே அனுமதிக்கப்படும்.

    வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வருவது, அழைத்து செல்வது போன்ற செயல்பாடுகளுக்காக வாடகை வாகனம் உள்ளிட்ட எந்தவொரு வாகனத்தையும் கையாள வேட்பாளர்கள் அனுமதிக்க கூடாது.

    2 நபர்களை மட்டும் கொண்ட வேட்பாளர்களின் அரசியல் கட்சிக ளின் தற்காலிக பிரசார அலுவலகம் வாக்குச்சாவடிகளில் இருந்து 200 மீட்டர் தொலைவில் அமைக்கப்படலாம்.

    தேவையில்லாத கூட்டத்தை கூட்டக்கூடாது. வாக்காளர்களுக்கு உணவு பொருட்கள் வழங்க கூடாது.

    வாக்குச்சாவடிக்கு வரும் முகவர்கள், அதே வாக்கு ச்சாவடியை சேர்ந்த வாக்கா ளர்களாக இருக்க வேண்டும். அவர்கள் அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும்.

    மேலும் கிரிமினல் வழக்குகளில் தொடர்பு உள்ள வர்கள் வாக்குச்சாவடி முகவர்களாக செல்ல அனுமதிக்க கூடாது.

    இவ்வாறு அவர் கூறி னார். 

    ×