search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பி.எம். கிசான் திட்டம்"

    • விவசாயத்தை ஊக்குவிக்கும் விதமாகவும், பிரதமர் நரேந்திரமோடி கடந்த 2018-ம் ஆண்டு பிரதம மந்திரி கிசான் சம்மான் யோஜனா திட்டத்தை கொண்டு வந்தார்.
    • இந்த திட்டத்தின் கீழ் விவசாயி களுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை 2 ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கப்படுகிறது.

    சேலம்:

    ஏழை, எளிய விவசாயிகள் தங்களது விவசாயத்தை சிரமின்றி மேற்கொள்ளும் வகையிலும், விவசாயத்தை ஊக்குவிக்கும் விதமாகவும், பிரதமர் நரேந்திரமோடி கடந்த 2018-ம் ஆண்டு பிரதம மந்திரி கிசான் சம்மான் யோஜனா திட்டத்தை கொண்டு வந்தார்.

    வருடந்தோறும் ரூ.6 ஆயிரம்

    இந்த திட்டத்தின் கீழ் விவசாயி களுக்கு 4 மாதங்க ளுக்கு ஒரு முறை 2 ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கப்படுகிறது. அதாவது ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் மத்திய அரசு வழங்குகிறது. இந்த தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருவதால், பணம் முழுவதும் விவசாயி களுக்கு அப்படியே கிடைக்கிறது. வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுவதால் யாருக்கும் லஞ்சம் கொடுக்க வேண்டியதில்லை. இதனால் இந்த திட்டம் விவசாயிகள், பொதுமக்கள் மத்தியல் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    கடந்த பிப்ரவரி மாதம் 27-ந்தேதி 13-வது தொகை பிரதமர் நரேந்திரமோடி, விவசாயிகளுக்கு வழங்கினார். இந்த நிலையில் வருகிற ஜூலை மாதத்தில் 14-வது தவணை நிதியை விவசாயிகள் பெற உள்ளனர்.

    இது குறித்து சர்வதேச உணவு கொள்கை ஆராய்ச்சி கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:-

    இத்திட்டத்தின் கீழ் நிலம் வைத்திருக்கும் விவசாய குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் மூன்று தவணையாக வழங்கப் படுவது அவர்களுக்கு சமூகப் பொருளாதார பாதுகாப்பை அளிக்கிறது.

    இதுவரை 11 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு 2.42 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பெருந்தொற்றின் போது அமலில் இருந்த ஊரடங்கு காலத்தில் இருந்து ரூ.1.86 லட்சம் கோடி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏராளமான விவசாயிகள் மற்றும் வேளாண் துறையினர் பயனடைந்துள்ளனர். இதில் 3 கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் ரூ.57,628 கோடி பெற்றுள்ளனர்

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    சேலம் இத்திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் மட்டும் சுமார் 3 லட்சம் விவசாயிகள் பயன்பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • புதிதாக விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
    • பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கோவிந்தசாமி தெரிவித்துள்ளார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி வட்டாரத்தில் பாரத பிரதமரின் விவசாயிகளுக்கான கௌரவ நிதி உதவி திட்டத்தில் (பி.எம்.கிசான்) தொடர்ந்து பணம் பெற புதிதாக விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

    அதன்படி திட்டத்தில் உள்ள அனைத்து பயனாளிகளும் அவர்களுக்குரிய நிலத்தின் சிட்டா, ஆதார் கார்டு, ரேசன் கார்டு, வங்கி கணக்கு புத்தகம் , போட்டோ இவைகள் அடங்கிய விண்ணப்பத்தினை அந்தந்த பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்களிடம் கையொப்பம் பெற்று தங்களது பகுதி உதவி வேளாண்மை அலு வலர்களிடம் வழங்கும்படி பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கோவிந்தசாமி தெரிவித்துள்ளார். 

    ×