பி.எம். கிசான் திட்டத்தில் பணம் பெற புதிதாக விண்ணப்பிக்க அழைப்பு

புதிதாக விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கோவிந்தசாமி தெரிவித்துள்ளார்.
பி.எம். கிசான் திட்டத்தில் பணம் பெற புதிதாக விண்ணப்பிக்க அழைப்பு
Published on

பரமத்தி வேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி வட்டாரத்தில் பாரத பிரதமரின் விவசாயிகளுக்கான கௌரவ நிதி உதவி திட்டத்தில் (பி.எம்.கிசான்) தொடர்ந்து பணம் பெற புதிதாக விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

அதன்படி திட்டத்தில் உள்ள அனைத்து பயனாளிகளும் அவர்களுக்குரிய நிலத்தின் சிட்டா, ஆதார் கார்டு, ரேசன் கார்டு, வங்கி கணக்கு புத்தகம் , போட்டோ இவைகள் அடங்கிய விண்ணப்பத்தினை அந்தந்த பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்களிடம் கையொப்பம் பெற்று தங்களது பகுதி உதவி வேளாண்மை அலு வலர்களிடம் வழங்கும்படி பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கோவிந்தசாமி தெரிவித்துள்ளார். 

X

Maalai Malar
www.maalaimalar.com