search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பா சிதம்பரம்"

    நாட்டில் சர்வாதிகார ஆட்சியை திணிக்க பாரதிய ஜனதா முயற்சித்து வருவதாக முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறியுள்ளார். #KarnatakaElection2018 #PChidambaram
    மங்களூர்:

    முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கர்நாடக மாநிலம் மங்களூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாட்டில் சர்வாதிகார ஆட்சியை திணிக்க பா.ஜனதாவும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் முயற்சித்து வருகிறது. நமது நாட்டில் ஒரே வரலாறு, ஒரே மொழி, ஒரே வாழ்க்கை முறை என்ற சித்தாந்தத்தை திணிக்க பா.ஜனதா அரசு முயற்சிக்கிறது. இது இந்திய கலாசாரத்துக்கும், நாட்டின் பன்முகத் தன்மைக்கும் ஆபத்தானது.

    கர்நாடக வரலாற்றிலேயே மோசமான ஆட்சி பா.ஜனதா ஆட்சிதான். அவர்கள் ஆட்சியில் 3 முறை முதல்வர்கள் மாற்றப்பட்டனர். மாநிலத்தின் வளர்ச்சிக்காக எதையும் செய்யவில்லை.

    இப்போது சித்தராமையாவை விமர்சித்துதான் அவர்கள் பிரசாரம் செய்கிறார்கள். தங்களது சாதனைகளை சொல்லி ஏன் ஓட்டு கேட்கவில்லை.

    கர்நாடகாவின் வழியாக தென்னிந்தியாவுக்குள் நுழைய பா.ஜனதா முயற்சிக்கிறது. அதை தடுத்து நிறுத்த வேண்டும். இல்லை என்றால் தென்னிந்தியாவின் பன்முகத்தன்மைக்கு ஆபத்தாகி விடும்.


    பிரதமர் மோடி தனது பதவிக்குரிய கண்ணியத்துடன் பேச வேண்டும். பா.ஜனதா செய்தித் தொடர்பாளர் போல அவர் பேசக்கூடாது. இந்திய ராணுவத்தின் பெருமைமிகு தளபதிகளான கரியப்பா, திம்மய்யா தொடர்பாக பிரதமர் மோடி தனது பிரசாரத்தின்போது தெரிவித்த கருத்துக்கள் தவறானவை.

    பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரி விதிப்பின் கீழ் கொண்டு வர வேண்டும். மக்களிடம் கொள்ளையடிக்க விரும்புவதால் மத்திய அரசு அதை செய்யாது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்கள் மத்தியில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே அவற்றின் விலையை குறைக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஒட்டுமொத்த நாடும் கர்நாடக தேர்தலையே ஆர்வமுடன் கவனித்துக் கொண்டிருக்கிறது. கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு தொடங்கிய வளர்ச்சிப் பணிகள் நீடிக்க வேண்டுமென்றால் காங்கிரசுக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். #KarnatakaElection2018 #PChidambaram
    ×