search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடுகள்"

    • பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் இரவு கல் தூண்களில் மகா தீபம் ஏற்றப்பட்டது
    • ராஜகோபுரத்தில் 5 நிலைகளில் மகாதீபம் ஏற்றிய பிறகு ராஜகோபுரத்தின் முன் பகுதியில் சொக்கப்பனை எரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது

    பவானி,

    பவானியில் உள்ள சங்கமேஸ்வரர் கோவில் மற்றும் காசி விஸ்வநாதர் கோவில் போன்றவற்றில் கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

    இதையொட்டி பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் இரவு சங்கமேஸ்வரர், வேதநாயகி அம்மன், மற்றும் ஆதிகேசவ பெருமாள் சன்னதி ஆகியவை முன்னுள்ள கல் தூண்களில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.

    பின்னர் ராஜகோபுரத்தில் 5 நிலைகளில் மகாதீபம் ஏற்றிய பிறகு ராஜகோபுரத்தின் முன் பகுதியில் சொக்கப்பனை எரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் ஈரோடு ஆதீனம் பாலாஜி சிவம் மற்றும் தி.மு.க. நகர செயலாளர் நாகராஜன் உள்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். சிவனடியார்கள் சிவபெருமானை பாடல் பாடி வழிபாடு மேற்கொண்டனர்.

    அதே போல் பவானி காவேரி வீதியில் அமைந்துள்ள சின்ன கோவில் என அழைக்கப்படும் விசாலாட்சி உடனமர் காசி விஸ்வநாதர் கோவிலில் கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு

    108 வலம்புரி சங்கு பூஜைகள், ருத்ரஜெபம், ருத்ர பாராயணம் உட்பட பல்வேறு பூஜைகளை சின்ன கோவில் சிவா சிவாச்சாரியார் தலைமையில் பூஜைகள் நடைபெற்றது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு மேற்கொண்டனர்.

    ×