search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பழங்கள் காய்கறிகள்"

    • கொலஸ்ட்ராலைக் குறைத்து மாரடைப்பு வராமல் தடுக்கும்.
    • வெண்டைக்காய் சாப்பிட்டால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.

    வெண்டைக்காய் வழவழப்புத்தன்மை கொண்ட ஒரு காய்கறியாகும். அது வழவழப்பான தன்மை கொண்டதால் பலருக்கும் பிடிக்காத ஒரு காயாக இருக்கிறது. அதிலுள்ள பெக்டின் மற்றும் கோந்துத்தன்மையே இந்த வழவழப்புக்குக் காரணம். பெக்டின் மற்றும் கோந்துப்பொருள் கரையும் நார்ச்சத்து நிறைந்தது என்பதால், ரத்தத்தில் கொழுப்பு மற்றும் பித்த நீர் அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளும். கொலஸ்ட்ராலைக் குறைத்து மாரடைப்பு வராமல் தடுக்கும்.

    வெண்டைக்காயில் கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரதம், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் இ, வைட்டமின் கே, கால்சியம், இரும்புசத்துகள் உள்ளன.

    வெண்டைக்காய் சாப்பிட்டால் அறிவு வளர்ச்சி உண்டாகும், மேலும் ஞாபக சக்தி அதிகரிக்கும். இரத்த சோகை, மூச்சிரைப்பு, கொலஸ்ட்ரால், மலச்சிக்கல், புற்றுநோய், நீரிழவு வயிற்றுப்புண், பார்வைக் குறைபாடு என அனைத்து நோய்களையும் தீர்க்கும் சிறந்த மருந்தாக வெண்டைக்காய் உள்ளது.

    1. வெண்டைக்காயில் உள்ள அடங்கியுள்ள நீர்ச்சத்து, திரவ இழப்பை தடுத்து உடலை குளிர்ச்சியாக வைக்கிறது. இதிலுள்ள கரையும் நார்ச்சத்து கொல்ஸ்ட்ராலின் அளவைக் கட்டுப்படுவதால் இதய நோய்கள் ஏற்படுவதற்கான ஆபத்துக்கள் மிகவும் குறைவு.

    2. கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசியமானது போலிக் அமிலம், இது வெண்டைக்காயில் அதிகமாக உள்ளது.

    3. வெண்டைக்காயின் வழவழப்புத் தன்மையில் அதிக மருத்துவப் பலன்கள் மறைந்துள்ளது. இந்த வழவழப்பில் உள்ள நார்ச்சத்து அல்சர் பாதித்தவர்களுக்கு நல்ல மருந்தாக விளங்குகிறது. மேலும் மலச்சிக்கல், வயிற்றுப் போக்கு உள்ளிட்ட வயிற்று உபாதைகள் அனைத்தையும் குணப்படுத்த கூடியது.

    4. பிஞ்சு வெண்டைக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு தடுக்கப்படுகிறது. பாக்டீரியாக்களை கட்டுப்படுத்தும் தன்மை, பிஞ்சு வெண்டைக்கு உண்டு.

    5. நீரிழிவு நோயாளிகள் அவ்வப்போது வெண்டைக்காய் சாப்பிட்டு வந்தால் அவர்களின் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு கணிசமாக குறையும்.

    6. வெண்டைக்காய் உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கல்லீரல் நன்கு செயல்பட தொடங்கும்.

    7. வெண்டைக்காய் சாப்பிட்டு வந்தால், அடிக்கடி ஏற்படும் பசி உணர்வை கட்டுபடுத்தும். வெண்டைகாய் சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்கள் கிடைக்கும், மேலும் உடலின் எடையும் சீக்கிரமாக குறையும்.

    8. வெண்டைக்காயில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், வெண்டைக்காய் ஊறவைத்த நீரைக் குடிப்பதன் மூலம் குடலியக்கம் சீராக நடைபெற்று, மலச்சிக்கல் ஏற்படுவது தடுக்கப்படும்.

    9. சுவாச பிரச்சனைகள் இருப்பவர்கள் வெண்டைக்காய் ஊறவைத்த நீரைப் குடித்தால், ஆஸ்துமா போன்ற சுவாச கோளாறுகளால் ஏற்படும் அபாயம் குறைவதாக பல ஆய்வுகள் கூறுகிறது.

    • வெறும் வயிற்றில் வாழைப்பழம் மட்டுமின்றி எந்த பழத்தையும் சாப்பிடுவது சிறந்ததல்ல.
    • காலை வேளையில் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லதல்ல.

    வாழைப்பழம் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் உட்கொள்வது நல்லதல்ல. வாழைப்பழத்தில் இருக்கும் சர்க்கரை உடலுக்கு உடனடி ஆற்றல் கொடுக்கக்கூடியது.

    அதில் அமிலத்தன்மையும் இருப்பதால் குடல் இயக்கமும் பாதிக்கப்படும். சர்க்கரையும், அமிலத்தன்மையும் இணைந்து குடலுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்திவிடும். அதனால் காலை வேளையில் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லதல்ல.

    ஏதேனும் ஒரு உணவை சாப்பிட்ட பிறகு வேண்டுமானால் வாழைப்பழம் சாப்பிடலாம். வெறுமன வாழைப்பழம் சாப்பிடாமல் ஆப்பிள் போன்ற மற்ற பழங்களுடன் கலந்து சாப்பிடுவது சிறப்பானது. வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிக அளவு உள்ளது. இயற்கையாகவே அமிலங்களும் உள்ளடங்கி இருக்கிறது. பிற பழங்களுடன் வாழைப்பழத்தை சேர்த்து சாப்பிடும்போது அதில் இருக்கும் அமிலங்களின் வீரியம் குறையும்.

    வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடும்போது, அதில் இருக்கும் மக்னீசியம், ரத்தத்தில் கலந்துவிடும். இதனால் ரத்தத்தில் மக்னீசியத்தின் அளவு அதிகரித்துவிடும். அதன் காரணமாக கால்சியம் மற்றும் மக்னீசியத்தின் அளவு ரத்தத்தில் சமநிலையில் இருக்காது. அதன் தாக்கம் இதயத்தில் எதிரொலிக்கும். இதய ஆரோக்கியம் பாதிப்புக்குள்ளாகும். இதய நோய்கள் ஏற்படும் அபாயத்தை அதிகரித்துவிடும்.

    ஆயுர்வேதத்தின்படியும் வெறும் வயிற்றில் வாழைப்பழம் மட்டுமின்றி எந்த பழத்தையும் சாப்பிடுவது சிறந்ததல்ல. மேலும் பழங்கள் விளைவிப்பதற்கு ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவை பழங்களில் படிந்திருக்கும். அப்படி இருக்கும்போது வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிடுவது உடலுக்கு உகந்ததல்ல.

    அதில் கலந்திருக்கும் ரசாயனங்கள் உடலில் படிந்து நோய்த்தொற்றுகளை ஏற்படுத்திவிடும். ஒவ்வொரு பழமும் ஒவ்வொரு விதமான குணாதிசயங்களை கொண்டுள்ளன. அவை உடலுக்கு நன்மை தந்தாலும், எந்த நேரத்தில் எப்பொழுது எவற்றுடன் சாப்பிடுகிறோம் என்பது முக்கியமானது. பழங்களை சரியான நேரத்தில், சரியான அளவில் சாப்பிடுவதன் மூலம் அவற்றில் இருக்கும் ஊட்டச்சத்துக்களை முழுமையாக பெறலாம். ஆரோக்கியத்திற்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது.

    • கபத்தையும் பித்தத்தையும் போக்கும்.
    • தோல் நோய்களைக் குணப்படுத்தும்.

    நாவல் மரத்தின் மருத்துவப் பயன்கள் போற்றத்தக்கவை. இதன் மருத்துவப் பெயர்கள் ஆருசுதம், நேரேடம் (நேரேடு). மரத்தின் அனைத்து உறுப்புகளும் மருத்துவப் பயன் கொண்டவை. விதை பொடி செய்து சாப்பிட நீரிழிவு நோயைப் போக்கும், வயிற்றுப் போக்கை நீக்கும், கருப்பை ரத்தப்போக்கைத் தடுக்கும். ஆஸ்துமாவைக் குணப்படுத்தும், கபத்தைப் போக்கும், குடல் புழுக்களைக் கொல்லும், ரத்தத்தைச் சுத்தப்படுத்தும், தோல் நோய்களைக் குணப்படுத்தும். மரத்தின் வேறு பகுதிகளும் நீரிழிவு நோய்க்கு நல்ல மருந்தாக அமையும்; உயிரி எதிர்ப்பொருளாகச் செயல்படும்: பூச்சிக்கொல்லியாகப் பயன்படும்; கபத்தையும் பித்தத்தையும் போக்கும்.

    நாவல் விதைப் பொடியோடு மாமரத்தின் தளிர் இலைகளையும் தயிரையும் கலந்து அரைத்து உட்கொண்டால் சீதபேதி நீங்கும். பழம், உணவு செரிமானத்துக்கு உதவும். மூக்கிலிருந்து ரத்தம் ஒழுகுவதைத் தடுக்கும். கல்லீரல் செயல்பாட்டை ஊக்குவிக்கும். நல்ல டானிக்காகச் செயல்படும். மரப்பட்டையும் மேலே குறிப்பிடப்பட்ட பல மருத்துவப் பயன்களைக் கொண்டிருக்கும்.

    சங்க இலக்கியத்திலும் வடமொழி இலக்கியத்திலும் பரவலாகச் சுட்டப்பட்டுள்ள நாவல் மரம், நல்ல நிழல் தரும் மரம். வழிப்போக்கர்களுக்கு நல்ல நிழல் கொடுப்பது மட்டுமின்றி, கோடையில் பழங்களையும் அதிகம் நல்கும். இதன் காரணமாகவே பன்னெடுங்காலமாக இது ஒரு சாலையோரத் தாவரமாக இந்தியா முழுவதும் வளர்க்கப்பட்டு வந்துள்ளது. பேரரசர் அசோகர் நட்ட சாலையோர மரங்களில் இது முக்கியமான ஒன்று என்பதற்குச் சான்றுகள் உள்ளன. தற்கால ஆய்வுகளின்படி இந்த மரம் வாகனப் புகையால் ஏற்படும் காற்று மாசுறுதலை நன்று தாங்கவல்லவை என்று அறியப்பட்டுள்ளது.

    மேலும், இந்த மரம் அதிக அளவு ஆக்ஸிஜனைக் காற்றில் வெளியிடுகிறது. எனவே, நாவல் மரங்களின் எண்ணிக்கையைச் சாலை ஓரங்களில் அதிகரிப்பதற்கான முயற்சிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டும்.

    • தர்பூசணி விதைகளை குப்பையில் போடும் வழக்கம்தான் இருக்கிறது.
    • தர்ப்பூசணி பழ விதைகளை வறுத்தோ, மாவாக்கியோ பயன்படுத்தலாம்.

    தர்பூசணி பழங்களில் 90 சதவீதத்துக்கும் அதிகமாக நீர் நிரம்பி இருப்பதால் கோடை காலத்தில் அனைவராலும் விரும்பி சாப்பிடப்படும் பழமாக இருக்கிறது. பெரும்பாலும் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் சதைப்பகுதியைத்தான் ருசித்து சாப்பிடுவார்கள். அதன் விதைகளை குப்பையில் போடும் வழக்கம்தான் இருக்கிறது. தர்ப்பூசணி பழ விதைகளை வறுத்தோ, மாவாக்கியோ பயன்படுத்தலாம். அவை ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை கொண்டிருக்கின்றன.

    ரத்த அழுத்தம்: உயர் ரத்த அழுத்த பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள் தர்பூசணி விதைகளை உட்கொள்ளலாம். அதில் உள்ளடங்கி இருக்கும் மெக்னீசியம், உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும். மேலும் உயர் ரத்த அழுத்த எதிர்ப்பு மருந்துகளின் செயல்பாடுகளை துரிதப்படுத்தவும் உதவும்.

    இதயத்தை பாதுகாக்கும்: எல்.டி.எல் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும்போது தமனிகளில் கொழுப்பு படிவுகள் அதிகமாக சேரும். தமனியில் அடைப்பு, மாரடைப்பு போன்ற அபாயத்தையும் அதிகரிக்க செய்யும். தர்பூசணி விதைகளில் மோனோ அன்சாச்சுரேட்டட் மற்றும் பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இது எல்.டி.எல்-கொலஸ்ட்ரால் அல்லது ரத்த ஓட்டத்தில் மோசமான கொழுப்பு அளவைக் குறைக்க உதவுகிறது.

    அத்தியாவசிய ஊட்டச்சத்துகள்: தர்பூசணி விதைகள் குளோபுலின் மற்றும் அல்புமின் புரதங்களை கொண்டுள்ளன. இவை நோய் எதிர்ப்பு அமைப்புக்கு உதவும். நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடவும் துணைபுரியும். மேலும் ரத்த ஓட்டத்தில் திரவ அளவுகளையும் சீராக பராமரிக்க உறுதுணையாக இருக்கும். தர்பூசணி விதைகளில் மெக்னீசியம், இரும்பு, துத்தநாகம் போன்ற தாதுக்களும் உள்ளன. அவை வளர்சிதை மாற்ற செயல்பாடுகளுக்கும், வைட்டமின் சி, பி காம்ப்ளக்ஸ் மற்றும் அமினோ அமிலங்களின் செயல்பாட்டுக்கும் அவசியமானவை.

    காயங்கள் குணமாகும்: தர்பூசணி விதையில் அமினோ அமிலமான எல்-அர்ஜினைன் அதிக அளவில் இருக்கிறது. இது நைட்ரிக் ஆக்ஸைடு அளவுகளை அதிகரிக்கும் தன்மை கொண்டது. அதனால் காயங்களை விரைவாக குணப்படுத்த உதவும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

    நீரிழிவு நோய்: உயர் ரத்த சர்க்கரை அளவுகளால் பாதிக்கப்படும் நோயாளிகள் தர்பூசணி விதைகள் சாப்பிடுவது நல்லது என்ற கருத்து நிலவுகிறது. அதில் மெக்னீசியம் உள்ளடங்கி இருப்பது, இன்சுலின் உணர் திறனை நிர்வகிக்கவும், ரத்த சர்க்கரை அளவை குறைக்கவும் உதவும்.

    • சில காய்கறிகள், பழங்கள் எப்போதும் சந்தையில் கிடைக்கும்.
    • உள்ளூர் பழங்களில் ஊட்டச்சத்தின் அளவும் அதிகம் இருக்கும்.

    பருவகால உணவு என்பது அந்தந்த பகுதிகளில், அந்தந்த காலகட்டத்தில் விளையும் உணவு வகைகளாகும். அப்படி உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் பழங்கள் மற்றும் காய்கறிகள் சுவையானதாகவும், புத்துணர்ச்சியுடனும், அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகவும் இருக்கும். அந்தந்த சீதோஷ்ணநிலைக்கு ஏற்றதாகவும் அவை இருக்கும். சில காய்கறிகள், பழங்கள் எப்போதும் சந்தையில் கிடைக்கும். ஆனால் அவை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுபவைகளாக இருக்கலாம்.

    உள்ளூர் பழங்களால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?

    அந்தந்த பருவ காலத்தில் உள்ளூரில் விளையும் பழங்கள் நன்கு பழுத்து, அதிக சுவை தரும். இயற்கையான சூழலில் சரியான விளைச்சலில் அறுவடை செய்யப்படுவதால் ஊட்டச்சத்தும் மிகுந்திருக்கும். குறிப்பிட்டு சொல்லவேண்டுமானால், ஆரஞ்சு பழத்தின் சுவை கோடையிலும், குளிர்காலத்திலும் மாறுபட்டு தெரியும். அதற்கு பருவகாலநிலைதான் காரணம்.

    உள்ளூர் பழங்களில் ஊட்டச்சத்தின் அளவும் அதிகம் இருக்கும். அவைகளை சரியான நேரத்தில் உட்கொள்ளும்போது சுவையையும், புத்துணர்ச்சியையும் கொடுக்கும். அவற்றை அறுவடை செய்த உடனே உட்கொள்ளும்போது வைட்டமின் சி, போலேட், கரோட்டின் போன்ற ஆன்டி ஆக்சிடென்டுகள் அதிகம் நிரம்பி இருக்கும். அதிக நாட்கள் சேகரித்துவைத்து சாப்பிட்டால், ஊட்டச்சத்தின் அளவும், தரமும் குறைந்துபோய்விடும். மேலும் உள்ளூரில் உற்பத்தியாகும் பருவகால பழங்கள் பிரஷ்ஷாகவும், தரமானதாகவும் இருக்கும். வெளியூர்-வெளிநாடுகளில் இருந்து வரவைக்கப்படும் பழங்கள் தரம் மற்றும் சுவை குறைந்தே காணப்படும்.

    உள்நாட்டு பருவகால பழங்கள், காய்கறிகள் அந்த சீதோஷ்ணநிலைக்கு ஈடுகொடுத்து நன்றாக வளரக்கூடியவை. அதனால் ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளை அதிகம் பயன்படுத்த வேண்டியதிருக்காது. பெரும்பாலான உணவு பொருட்களில் பூச்சிக்கொல்லிகள், களைக்கொல்லிகள், பூஞ்சை கொல்லி களின் தாக்கம் நிறையவே இருக்கிறது. அவற்றை அகற்றுவது கடினம். பருவகால உணவுகளை சாப்பிடும் வழக்கத்தை கடைப்பிடிப்பதன் மூலம் உடலில் ரசாயனங்கள், அசுத்தமான பொருட்கள் சேருவதை கட்டுப்படுத்த முடியும்.

    விவசாயிகள் பருவ காலத்தில் குறிப்பிட்ட பயிர்களை அதிகமாக விளைவிக்கும்போது விவசாயத்திற்கான செலவு குறைகிறது. அறுவடைக்கு பிறகு உள்ளூரிலேயே விற்பனை செய்யப்படும்போது போக்குவரத்து செலவு குறைகிறது. அதனால் விலைமலிவாக கிடைக்கும். உள்ளூரில் விளையும் உணவுப்பொருட்கள் அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களின் உடலுக்கு உகந்ததாக இருக்கும். சுற்றுச்சூழலுக்கும் ஏற்றதாக அமையும். அனைத்து வயதினரும் சாப்பிடு வதற்கு உகந்ததாகவும் இருக்கும். சிட்ரஸ், வைட்டமின் சி அதிகம் கொண்ட உள்ளூர் பழங்கள் மற்றும் காய்கறிகளை கோடை காலத்தில் போதுமான அளவு உட்கொண்டு ஆரோக்கியத்தை பாதுகாக்கவேண்டும்.

    • முட்டைகோஸில், நிறைய நன்மைகள் இருக்கிறது.
    • சருமத்தை பொலிவோடு வைத்துக் கொள்ள முட்டைகோஸ் உதவியாக இருக்கும்.

    நம் உணவோடு சேர்த்து சாப்பிடும் முட்டைகோஸில், நிறைய நன்மைகள் இருக்கிறது. அதை தெரிந்து கொள்வோமா..!

    முட்டைகோஸில் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பொருட்கள் நிறைய உள்ளன. எனவே இதனை தொடர்ந்து சாப்பிட்டால், புற்றுநோயை உண்டாக்கும் செல்கள் வளர்வதை முற்றிலும் தடுக்கும். மேலும் இதில் உள்ள அதிகப்படியான வைட்டமின்-சி, நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி, உடலை நோய்கள் தாக்காதவாறு பாதுகாக்கும். முட்டைகோஸில் பீட்டா-கரோட்டீன் சத்துக்கள் அதிக அளவில் இருப்பதால், அது கண்புரை நோய் ஏற்படாமல் தடுக்கிறது.

    உடல் எடையை குறைக்க நினைப்போர், தினமும் ஒரு கப் வேக வைத்த முட்டைகோஸ் அல்லது முட்டைகோஸ் சூப் சாப்பிட்டால், உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்கலாம்.

    இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், சருமத்தை பொலிவோடு வைத்துக் கொள்ள உதவியாக இருக்கும். முட்டைகோஸில் உள்ள லாக்டிக் அமிலம், தசைகளில் ஏற்படும் பிரச்சினைகளில் இருந்து சிறந்த நிவாரணம் தரும்.

    • மகப்பேறு காலத்தில் பெண்கள் புரதசத்தினை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
    • கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு இரும்புச்சத்து மிகவும் அவசியம்.

    சினைப்பை நீர்க்கட்டி, தைராய்டு சுரப்பி கோளாறுகள், கருப்பை கட்டிகள், ஹார்மோன் மாறுபாடுகள் இவற்றால் ஏற்படும் மாதவிடாய் கோளாறுகளை மருத்துவ முறைகளால் சீர்செய்து, தாமதமாகும் கருத்தரிப்பை துரிதமாக்கி, கருச்சிதைவு இன்றி பாதுகாத்து பிரசவம் வரை கொண்டு செல்வது என்பது மகளிர்க்கு மற்றொரு சவால்.

    மாதவிடாய் துவங்கியது முதல் மகப்பேறு, இறுதிபூப்பு வரை உள்ள நோய்க்குறிகள் பெண்களின் ஆரோக்கியத்துக்கு அடுத்தடுத்த சவால் மிகுந்த காலம் ஆகும். இதனால் அவர்களுக்கு பல்வேறு உடலியல் மற்றும் மனவியல் மாறுபாடுகள் ஏற்படுகின்றது. அவை அனைத்தையும் கையாண்டு ஆரோக்கியத்தை நிலைநாட்ட சத்தான உணவு அவசியமாகின்றது. முக்கியமாக கர்ப்பகாலத்தில் வலிமையான, ஆரோக்கியமான அடுத்த சந்ததியை உருவாக்குவதற்கு சத்துக்கள் மிகமிக அவசியம்.

    "வாயும் வயிறுமா இருக்கியே, வயித்துல இருக்கிற புள்ளைக்கும் சேர்த்து சாப்பிடணும்" என்று நம் பாட்டி காலம் முதல் பழகி வந்தவை நம் பாரம்பர்ய உணவுகள். இன்றைய அறிவியல் கூறும் சுண்ணாம்பு சத்தும் (கால்சியமும்), இரும்புச்சத்தும் கர்ப்ப காலத்தில் மிகவும் அவசியம் என்பதை பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே கணித்து அத்தகைய சத்துக்கள் இருக்கும் உணவு முறைகளை வழங்கி இயற்கையான முறையில் ஆரோக்கியத்திற்கு வித்திட்டனர்.

    புரதச்சத்துக்கள் உடலின் வளர்ச்சிக்கு அத்தியாவசியமான ஒன்று. மகப்பேறு காலத்தில் பெண்கள் புரதசத்தினை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். அதுவே உடல் உறுப்புகள் வளர்ச்சியை அதிகரிக்கும். கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு கிட்டத்தட்ட 10 கிலோ வரை எடை கூடும். அதற்கு புரதம் சிறந்த உணவு. சைவபிரியர்களுக்கு பட்டாணி வகைகள், முளைகட்டிய தானியங்கள், பயறு வகைகள் இவற்றிலும், அசைவப்பிரியர்களுக்கு மீன், முட்டை, கறி வகைகள் இவற்றிலும் அதிக அளவு புரதம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    நமது பாரம்பரிய பருப்பு வகையான உளுந்து மற்றும் பாசிப்பயறில் அதிகம் புரதம் உள்ளது. ஆதலால் மாதவிடாய் துவங்கியது முதல் பெண்கள் தோலுடன் உள்ள கருப்பு உளுந்தை வடையாகவோ அல்லது பனைவெல்லம் சேர்த்த கஞ்சியாகவோ எடுத்துக்கொள்ளலாம். உளுந்து பெண்களுக்கு இடுப்புக்கு அதிக வலிமையை தரும் என்கிறது சித்த மருத்துவம்.

    பாசிப்பயிறு எனும் சிறந்த போஷாக்கு அளிக்கும் பருப்பு வகையை பொங்கலில் சேர்த்து எடுத்துக்கொள்வது நம் மரபு. பொங்கல் என்பது கார்போஹைட்ரேட் நிறைந்த அரிசி, புரதம் நிறைந்த பாசிப்பயிறு, கொழுப்புச்சத்து நிறைந்த நெய் இவை மூன்றும் கலந்த சரிவிகித உணவாக உள்ளது. சரிவிகித உணவு பற்றி இன்றைய அறிவியல் பேசும் முன்னரே, பொங்கலை உணவாக படைத்தது நமது பாரம்பரிய உணவுமுறையின் சிறப்பு.

    சர்க்கரைச்சத்து எனப்படும் கார்போஹைட்ரேட்கள் உடலுக்கு முதன்மை ஆற்றலை அளிக்கும் தன்மையுடையன. மாவுப்பொருட்கள் எல்லாவற்றிலும் இருப்பது இந்த சர்க்கரை சத்துக்கள் தான். சர்க்கரை சத்துக்கள் அரிசி வகைகளிலும், பழங்களிலும் அதிகம். ஆனால், பழங்களில் சர்க்கரை சத்துக்களுடன் எண்ணற்ற தாது உப்புக்களும், வைட்டமின்களும், ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைந்த இயற்கை நிறமிகளும் அதிகம் உள்ளது.

    இயற்கை நிறமிகள் பழங்களில் அதிகம் கிடைக்கின்றது. ஆக, 'மாசமா இருக்கும் போது மாதுளை சாப்பிட்டால் பிறக்கிற குழந்தை நல்ல கலர்ல இருக்குமாம்' என்பதை வேடிக்கை மொழியாக பார்க்காமல், ஆன்டி ஆக்ஸிடன்ட் அதிகம் நிறைந்த மாதுளையை பெண்கள் எடுத்துக்கொண்டால், பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக பிறக்கும். ஆரோக்கியம் தானே அழகு. அதற்குத்தான் இந்த மறைமொழி.

    கர்ப்பம் தரித்த பெண்கள், சர்க்கரைச்சத்து நிறைந்த தீட்டப்பட்ட அரிசியை எடுத்துக்கொள்வதை விட பாரம்பரிய அரிசி வகைகளை எடுத்துக்கொள்வது நல்லது. பூங்கார் அரிசி சர்க்கரை சத்தினை மட்டும் கொண்டிராமல் அதிக அளவு இரும்புச்சத்தினையும் கொண்டுள்ளது.

    மாதம்தோறும் ரத்தஇழப்பினை சந்திக்கும் பெண்களுக்கு இரும்புசத்து தேவையான ஒன்று. அதனை பூங்கார் அரிசி பூர்த்தி செய்யும். கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான சுண்ணாம்பு சத்து எனும் கால்சியம் அதிகம் உள்ள பாரம்பரிய அரிசி வகை குழியடிச்சான் அரிசி, அதிகம் கால்சியத்தை கொண்ட மற்றொரு அரிசி வகை நீலம் சம்பா அரிசி. பெரும்பாலான பாரம்பரிய அரிசி வகைகள் பெண்களுக்கு மட்டுமல்ல அனைவரின் உடலுக்கும் தேவையான அத்தியாவசிய சத்துக்களை இயல்பாகவே கொண்டுள்ளன. இதைப் பயன்படுத்திய நமது மூதாதையர்கள் சத்துக்கு தனி மாத்திரை மருந்துகளை உண்ணாமல் வாழ்ந்தது உலகறியும் வரலாறு. சத்தான உணவைப் பயன்படுத்த மறந்த நாம், சக்கையை உணவாக அருந்தி மாத்திரைகளை நம்பி வாழ்நாளை கடத்துகிறோம் என்பது தான் உண்மை.

    கொழுப்பு பொருட்கள் அதிக அளவு சக்தியை தரக்கூடியது. நரம்பு மண்டலத்தின் செயர் பாட்டுக்கும், உடலை காக்கவும், உடல் அழகுக்கும் அவசியமானது. நாம் உண்ணும் உணவில் உள்ள கொழுப்பில் கரையும் வேதிமூலக்கூறுகள் கொழுப்புச்சத்துள்ள உணவுப்பொருட்களை எடுத்துக்கொண்டால் மட்டுமே உடல் பெறமுடியும். பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் கர்ப்பிணி பெண்களுக்கு நல்ல பலத்தை தரும். பாலில் புரதச்சத்தும், கொழுப்பு சத்தும் உள்ளது குறிப்பி டத்தக்கது. பொதுவாக எண்ணெய் வகைகளில் கொழுப்பு சத்துக்கள் அதிகம்.

    சித்த மருத்துவம் எண்ணெய் என்று குறிப்பிடுவது எள்ளின் நெய்யை தான். நல்ல எண்ணெய் என்ற பெயரைக்கொண்ட எள்எண்ணெய் பெண்களுக்கு மிகசிறந்த பலனைத் தரக்கூடியது. சமையலில் நல்லெண்ணையை பயன்படுத்தினால் புற்றுநோயை தடுக்க முடியும் என்கிறது சில ஆய்வு முடிவுகள். எள்ளு உருண்டையை எடுத்துக்கொள்வதன் மூலமும் பெண்களுக்கு அத்தகைய சத்துக்கள் கிடைக்கும். எள் எலும்புகளுக்கு மிகசிறந்த உணவு. எள்ளு ருண்டைகளை பாரம்பரிய கால்சியம் சத்து உருண்டைகள் என்றே சொல்லலாம்.

    எலும்புகளை, மூட்டுகளை வன்மையாக்கும் கால்சியம் சத்துக்கள் நிறைந்த எளிய உணவு கேழ்வரகு. இதனை மகப்பேறு காலத்தில் பெண்கள் அவ்வப்போது பனைவெல்லம் சேர்த்து உருண்டையாக்கி எடுத்துக்கொள்வது நல்லது. பயன்படுத்த மறந்த மற்றொரு பாரம்பரிய சிறுதானிய உணவு தினை. இதனுடன் அவ்வப்போது நெய், பனைவெல்லம் சேர்த்து தினைமாவு உருண்டையாக எடுத்துக்கொண்டால் எலும்புகள் வலுப்படும்.

    இரும்பு சத்து உடலின் ரத்தத்துக்கு அவசியமான ஒன்று. மகப்பேறு காலத்தில் பெண்கள் இரும்பு சத்து மாத்திரைகளை எடுப்பதுடன் அதிக இரும்பு சத்து மிக்க முருங்கைக்கீரையை, ஈர்க்குடன் சேர்த்து அவ்வப்போது சூப் செய்து எடுத்துக்கொள்ளலாம். கறிவேப்பிலை மற்றும் ஈர்க்கும் அதிக இரும்புச்சத்தினை கொண்டது. பப்பாளி, அத்திபழம் ஆகிய நம் நாட்டு நார்ச்சத்துள்ள பழங்களை எடுத்துக்கொள்வதும் சத்துகுறைப்பாட்டை பூர்த்தி செய்யும்.

    வைட்டமின் சி அதிகமுள்ள நெல்லி,கொய்யா ஆகிய பழங்களையும், கண் பார்வைக்கு வித்திடும் வைட்டமின் ஏ அதிகமுள்ள மாம்பழம் மற்றும் முருங்கை கீரை, கறிவேப்பிலை ஆகிய எளிமையாக கிடைக்கும் சித்த மருத்துவ மூலிகை உணவுப்பொருட்களையும் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் உடல் ஆரோக்கியத்திற்கு பாதை அமைக்கும்.

    வைட்டமின் சி உள்ள பழங்கள் நமது உடலில் இரும்புசத்து உட்கிரகித்தலை அதிகமாக்கும் தன்மை உடையது என்கிறது நவீன அறிவியல். இதனை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அறிந்திருந்த நம் முன்னோர்கள் இரும்புசத்து மிக்க அய செந்தூரம், அன்னபேதி செந்தூரம் ஆகிய மருந்துகளை நெல்லிக்காய் சேர்ந்த திரிபலை சூரணத்துடன் உட்கொள்ள அறிவுறுத்தி உள்ளனர் என்பது அறிவியலே வியக்கும் வண்ணம் உள்ளது.

    வைட்டமின் டி-3 எனும் சத்து, தாய்க்கும், கருவில் வளரும் சேய்க்கும் எலும்புகளை வலுப்படுத்த உதவும். இயல்பாகவே குறைந்தது 15 நிமிடங்கள் வரை தோலினை வெயில் படும்படியாக செய்வது தேவையான வைட்டமின் டி சத்தினை தோலில் உற்பத்தி செய்யும். உணவுமுறைகளில் அவ்வப்போது சுண்டைக்காயை வற்றலாக்கி பயன்படுத்தினாலும் வைட்டமின்-டி உடலுக்கு கிடைக்கும். மாமிச வகைகளில் ஒமேகா-3 சத்துக்கள் நிறைந்த மீன் வகைகள் மகவின் நரம்பு மண்டல வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்.

    இன்றைய நவீன அறிவியல் கூறும் ஜிங்க், மெக்னீசியம், செலினியம் ஆகிய பல சத்துக்களும், போலிக் அமிலம் போன்ற எண்ணற்ற வைட்டமின்களும் நாம் பாரம்பரியமாக பழகி வந்த உணவு முறைகளில் கணக்கில்லாமல் கிடக்கின்றது என்பது தான் உண்மை. அதை விடுத்து கர்ப்ப காலத்தில் பெண்கள் சத்துக்கள் இல்லாத, உடலுக்கு கேடு விளைவிக்கும் தன்மையுடைய துரித உணவுகளை விரும்பி எடுத்துக்கொள்வது கருவில் உள்ள மகவின் ஆரோக்கியத்தை கெடுப்பது போன்றது. அவ்வகை உணவுகளை நாகரிக வாழ்வியலில் வாழும் பெண்கள் அறவே தவிர்க்க வேண்டும்.

    வழிவழியாய் மகப்பேற்றின் சீமந்த விழாவில் பெண்களுக்கு சத்தான சிகப்பரிசியும், கம்பு உருண்டையும் கொடுத்து தாய்க்கும், சேய்க்கும் போஷாக்களித்து பலம் சேர்ப்பது நமது பாரம்பரிய உணவுமுறைக்கு உதாரணம். மொத்தத்தில் இரும்பு சத்து, கால்சியம்,மெக்னீசியம்,பொட்டாசியம், பாஸ்பரஸ், ஜின்க் சத்துக்கள் என சத்துக்களின் கூடாரமாக உள்ளது சிகப்பரிசி வகை.

    சித்த மருத்துவ கூற்றுப்படி சப்த தாதுக்களை வன்மைப்படுத்த அனைவருக்கும் சத்தான உணவு அவசியம். சத்தான உணவு உண்பது தாய்க்கு மட்டுமல்ல கருவுக்கும் வளர்ச்சியை கொடுத்து வருங்கால சந்ததியினை ஆரோக்கியமாக உருவாக்க வழிவகை செய்யும். உண்மையில் நம் பாரம்பரிய உணவு முறைகள் நம் நாட்டு மருத்துவத்தின் ஒரு அத்தியாயம்.

    தொடர்புக்கு:drthillai.mdsiddha@gmail.com

    • தினமும் கீரை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
    • எந்த கீரையை சாப்பிட்டால் என்ன பிரச்சனை தீரும் என்று பார்க்கலாம்.

    * அகத்திக்கீரை - ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளியவைக்கும்.

    * காசினிக்கீரை - சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும்; உடல் வெப்பத்தை தணிக்கும்.

    * மஞ்சள் கரிசாலை - கல்லீரலை பலமாக்கும்; காமாலையை விலக்கும்.

    * புளியங்கீரை - சோகையை விலக்கும்; கண் நோய் சரியாகும்.

    * பசலைக்கீரை - தசைகளை பலமடையச் செய்யும்.

    * புதினாக்கீரை - ரத்தத்தை சுத்தமாக்கும்; அஜீரணத்தைப் போக்கும்.

    * வல்லாரைக் கீரை - மூளைக்கு பலம் தரும்.

    * நஞ்சுமுண்டான் கீரை - விஷம் முறிக்கும்.

    * முளைக்கீரை - பசியை ஏற்படுத்தும்; நரம்பு பலமடையும்.

    * கல்யாண முருங்கை கீரை - சளி, இருமலை அகற்றும்.

    * துத்திக்கீரை - வாய்ப் புண், வயிற்றுப்புண் நீக்கும். வெள்ளை மூலம் சரியாகும்.

    * முள்ளங்கி கீரை - நீரடைப்பு நீங்கும்.

    • காலை வேளையில் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லதல்ல.
    • பழங்கள் விளைவிப்பதற்கு ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

    வாழைப்பழம் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் உட்கொள்வது நல்லதல்ல. வாழைப்பழத்தில் இருக்கும் சர்க்கரை உடலுக்கு உடனடி ஆற்றல் கொடுக்கக்கூடியது.

    அதில் அமிலத்தன்மையும் இருப்பதால் குடல் இயக்கமும் பாதிக்கப்படும். சர்க்கரையும், அமிலத்தன்மையும் இணைந்து குடலுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்திவிடும். அதனால் காலைவேளையில் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லதல்ல. ஏதேனும் ஒரு உணவை சாப்பிட்ட பிறகு வேண்டுமானால் வாழைப்பழம் சாப்பிடலாம். வெறுமனே வாழைப்பழம் சாப்பிடாமல் ஆப்பிள் போன்ற மற்ற பழங்களுடன் கலந்து சாப்பிடுவது சிறப்பானது.

    வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிக அளவு உள்ளது. இயற்கையாகவே அமிலங்களும் உள்ளடங்கி இருக்கிறது. பிற பழங்களுடன் வாழைப்பழத்தை சேர்த்து சாப்பிடும்போது அதில் இருக்கும் அமிலங்களின் வீரியம் குறையும்.

    வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடும்போது, அதில் இருக்கும் மக்னீசியம், ரத்தத்தில் கலந்துவிடும். இதனால் ரத்தத்தில் மக்னீசியத்தின் அளவு அதிகரித்துவிடும். அதன் காரணமாக கால்சியம் மற்றும் மக்னீசியத்தின் அளவு ரத்தத்தில் சமநிலையில் இருக்காது. அதன் தாக்கம் இதயத்தில் எதிரொலிக்கும். இதய ஆரோக்கியம் பாதிப்புக்குள்ளாகும். இதய நோய்கள் ஏற்படும் அபாயத்தை அதிகரித்துவிடும்.

    ஆயுர்வேதத்தின்படியும் வெறும் வயிற்றில் வாழைப்பழம் மட்டுமின்றி எந்த பழத்தையும் சாப்பிடுவது சிறந்ததல்ல. மேலும் பழங்கள் விளைவிப்பதற்கு ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவை பழங்களில் படிந்திருக்கும். அப்படி இருக்கும்போது வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிடுவது உடலுக்கு உகந்ததல்ல. அதில் கலந்திருக்கும் ரசாயனங்கள் உடலில் படிந்து நோய்த்தொற்றுகளை ஏற்படுத்திவிடும்.

    ஒவ்வொரு பழமும் ஒவ்வொரு விதமான குணாதிசயங்களை கொண்டுள்ளன. அவை உடலுக்கு நன்மை தந்தாலும், எந்த நேரத்தில் எப்பொழுது எவற்றுடன் சாப்பிடுகிறோம் என்பது முக்கியமானது. பழங்களை சரியான நேரத்தில், சரியான அளவில் சாப்பிடுவதன் மூலம் அவற்றில் இருக்கும் ஊட்டச்சத்துக்களை முழுமையாக பெறலாம். ஆரோக்கியத்திற்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது.

    • கடினமான தோல் பகுதியுடன் பந்து போல விளாம் பழம் காட்சியளிக்கும்.
    • விளாம் பழத்தில் ஏராளமான சத்துகள் அடங்கி இருக்கிறது.

    விளாம்பழங்கள் ஆகஸ்டு மாதம் முதல் நவம்பர் மாதம் வரை கிடைக்கும். இதன் காய், பழம், மரப்பட்டை, இலை ஆகியவற்றை பயன்படுத்தி தேநீர் தயாரிக்கலாம். விளாம் காயை தயிருடன் சேர்த்து பச்சடிபோல் சாப்பிடலாம். வெல்லத்துடன் பிசைந்து உண்ணலாம். பனங்கற்கண்டுடன் சேர்த்தும் சுவைக்கலாம்.

    கடினமான தோல் பகுதியுடன் பந்து போல விளாம் பழம் காட்சியளிக்கும். ஓடு போல இருக்கும் இதன் மேல் பகுதியை உடைத்துதான், உள்ளிருக்கும் சதைப் பகுதியை சாப்பிட முடியும். மற்ற பழங்களைவிட கொஞ்சம் வித்தியாசமாக காட்சிதரும் இந்த விளாம் பழத்தில் ஏராளமான சத்துகள் அடங்கி இருக்கிறது. அதை தெரிந்து கொள்வோமா..?

    விளாம் பழம் ஆயுளை நீட்டிக்கும் தன்மையுடையது. சிறுவர்களுக்கு தினமும் சாப்பிட கொடுப்பதால் ஞாபக சக்தி அதிகரிப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தியும் மேம்படுத்துகிறது. பசியை தூண்ட செய்து ஜீரண கோளாறுகளை சீர்செய்கிறது. ரத்தத்தை விருத்தி ஆக்குவதுடன், இதயத்தை பலம் பெறவும் செய்கிறது.

    விளாம் பழத்தை அரைத்து முகத்தில் பூசி வர, வெயில் காலத்தில் இழந்த பொலிவு மீண்டும் வரும். புரதம் மற்றும் வைட்டமின் சி சத்தும், இரும்பு, சுண்ணாம்பு, வைட்டமின்-ஏ உள்ளிட்ட சத்துக்களும், இதில் நிறைந்துள்ளன. பழம் மட்டுமின்றி, அதன் மேல்புற ஓடு, மரத்தின் வேர், பட்டை, இலை ஆகியவற்றிலும் மருத்துவ குணம் உள்ளது. குறிப்பாக விளாம் பழ விதையில் ஒலியிக், பால்மிடிக், சிட்ரிக் உள்ளிட்ட அமிலங்களும், இலையில் சபோரின், வைடெக்சின் உள்ளிட்ட வேதி பொருட்களும், பட்டையில் பெரோநோலைடு உள்ளிட்ட மருத்துவ குணங்களும் உள்ளது. விளாங்காயில் பி-2 உயிர்சத்தும் உள்ளது.

    • தைராய்டு நோய்க்கு ப்ராக்கோலி மிகச்சிறந்த மருந்தாகும்.
    • ப்ராக்கோலியில் இரும்புச் சத்து அதிகம் உள்ளது.

    ப்ராக்கோலி குளிர்காலப்பயிர். முட்டைக்கோஸ் குடும்பத்தை சேர்ந்தது. குளிர்ச்சியான தட்பவெப்பநிலையில் பயிரிடப்படும் இந்த ப்ராக்கோலியில் எண்ணற்ற சத்துப்பொருட்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக புற்றுநோய்க்கு சிறந்த எதிர்ப்பு மருந்து.

    இரண்டு முதல் மூன்று கப் ப்ராக்கோலி வீதம் வாரத்திற்கு மூன்று முறை உணவில் சேர்த்து உடலின் நோய் எதிர்ப்புச்சக்தியை அதிகரிப்பதன் மூலம் புற்றுநோய்க் கிருமிகளை வளரவிடாமல் தடுக்கலாம் என்கிறது தற்போதைய ஆய்வு முடிவுகள். அதேபோல ப்ராக்கோலியில் உள்ள பி காம்ப்ளக்சும், வைட்டமின் ஏ, சி, ஈ ஆகிய உயிர்ச்சத்துக்களும் இதய நோயில் இருந்தும் இதயத்தை காக்கிறது. உடனடி மாரடைப்பு வராமலும் தடுக்கிறது.

    தைராய்டு நோய்க்கும், ப்ராக்கோலி மிகச்சிறந்த மருந்தாகும். இதனை பச்சையாக உண்பதினால் தைராய்டு சுரப்பியின் செயல்பாடு கட்டுக்குள் இருக்கும். கண் விழிகளின் பாதுகாப்புக்கு தேவையான வைட்டமின்கள் அனைத்தும் இதில் உள்ளதால் விழியை பாதுகாப்பதிலும் சிறந்த சேவையை ஆற்றுகிறது. முக்கியமாக காட்ராக்ட் வராமல் தடுக்கிறது. இரும்புச் சத்து அதிகம் உள்ள இந்த ப்ராக்கோலிக்கு அல்சர் நோய் வராமல் தடுக்கும் வல்லமையும் உண்டு. ஜீரண சக்தியையும் அதிகரிக்க செய்யும்.

    • உடலில் இரும்புச் சத்து குறைபாட்டால் பலவித பிரச்சினைகள் ஏற்படும்.
    • எந்தெந்த உணவுகளில், இரும்புச் சத்து இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வோமா..?

    உடல் மற்றும் ரத்தத்தின் சீரான செயலிற்கு இரும்புச் சத்து மிக மிக முக்கியம். உடலில் இரும்புச் சத்து குறைபாட்டால் பலவித பிரச்சினைகள் ஏற்படும். முக்கியமாக உடல் அசதி, முடி கொட்டுதல் போன்ற குறைபாடுகள் வரலாம். இவைகளில் இருந்து தப்பிக்க, இரும்புச் சத்துள்ள உணவுகளை உட்கொள்வது அவசியம். அந்தவகையில், எந்தெந்த உணவுகளில், இரும்புச் சத்து இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வோமா..?

    1. பேரீச்சம்பழம்

    பேரீச்சம்பழத்தில் அதிக அளவில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. 100 கிராம் பேரீச்சம்பழத்தில் ஒரு நாளுக்கு தேவையான இரும்புச்சத்தில் 50 சதவீதம் நிறைந்துள்ளது. மேலும் இதில் கால்சியம், புரோட்டீன், நார்ச்சத்து, வைட்டமின் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளது.

    2. மாதுளை

    மாதுளை இரும்புச் சத்து நிறைந்த, சிறந்த பழமாகும். 100 கிராம் மாதுளையில் 0.3 மில்லிகிராம் இரும்புச் சத்து நிறைந்துள்ளது. மேலும் இதில் புரதச்சத்து, மெக்னீசியம், வைட்டமின், பொட்டாசியம், வைட்டமின் பி-6, வைட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் போன்ற பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளது.

    3. அத்திப்பழம்

    உடலுக்கு உறுதி அளிக்கும் பழங்களில் அத்திப்பழம் மிக மிக சிறந்த பழம் ஆகும். தினமும் ஒரு அத்திப்பழம் சாப்பிட்டு வருபவர்களுக்கு ரத்தசோகை, மலச்சிக்கல் மற்றும் அசதி போன்ற பிரச்சினை இருக்கவே இருக்காது. அத்திப்பழத்தில் பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் நார்சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது.

    4. கொய்யாப்பழம்

    பழங்களில் சிறந்த பழம் கொய்யாப்பழம். நமது ஊர் பகுதிகளில் மிகவும் எளிதாக கிடைக்கக்கூடியது கொய்யாப்பழம். இதில் இரும்புச் சத்து, நார்ச்சத்து, வைட்டமின் சி, புரோட்டீன், மெக்னீசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் காயாக இருக்கும் கொய்யாவிற்கு, ரத்த சர்க்கரை அளவினை கட்டுக்குள் வைக்கும் சக்தியும் உண்டு.

    5. உலர்திராட்சை

    உலர்திராட்சை மற்றும் இதர பழ வகைகளில் அதிக அளவில் இரும்புச் சத்து நிறைந்துள்ளது. தினமும் ஒரு கைப்பிடி அளவு உலர்திராட்சை உண்டு வந்தால் தேவையான அளவு இரும்புச் சத்து கிடைப்பதோடு உங்கள் ஆரோக்கியமும் மேம்படும். உடல் எடை குறைவாக உள்ளவர்களுக்கு ஆரோக்கியமாக உடல் எடை அதிகரிக்க உதவும். எனவே தினமும் ஒரு கைப்பிடி அளவு உலர்திராட்சையினை உட்கொண்டு வாருங்கள்.

    6. ஆப்ரிகாட்

    ஆப்ரிகாட் பழவகைகளில் அதிக அளவில் இரும்புச் சத்து நிறைந்துள்ளது. 100 கிராம் அப்ரிகாட் பழத்தில் கிட்டத்தட்ட 2.5 மில்லிகிராம் அளவுக்கு இரும்புச் சத்து நிறைந்துள்ளது. மேலும் இதில் வைட்டமின் சி, பொட்டாசியம், மெக்னீசியம், வைட்டமின் பி-16, கால்சியம் போன்ற பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளது.

    7. மாம்பழம்

    முக்கனிகளில் முதன்மை வாய்ந்தது மாம்பழம். இதில் இரும்புச் சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி, பொட்டாசியம், மெக்னீசியம், நார்ச்சத்து போன்ற பலவித சத்துக்கள் நிறைந்துள்ளது. இதை உண்டு வந்தால் ரத்தசோகை, கண் பார்வை கோளாறு போன்ற பிரச்சினை ஏற்படாமல் தடுக்க உதவும். மேலும் சரும அழகினை மேம்படுத்த உதவும்.

    8. தர்பூசணி பழம்

    தர்பூசணி பழத்தில் இரும்புச் சத்து நிறைந்துள்ளது. ஒரு தர்பூசணி பழத்தில் 12 மில்லிகிராம் அளவிற்கு இரும்புச் சத்து இருக் கின்றது. மேலும் இதில் ஏராளமான வைட்டமின் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இதனை உண்டு வந்தால் இளமையுடன் காட்சி அளிக்கலாம்.

    இரும்புச் சத்தின் அவசியம்

    எலும்புகள் வலுவாக இருக்க, இரும்புச் சத்து அவசியம். உடலின் மற்ற பகுதிகளுக்கு ரத்த சிவப்பணுக்களை கொண்டு செல்வதற்கும் உதவுகிறது. மேலும் ஆற்றலை உற்பத்தி செய்யவும், செல்களின் சுவாசத்தை எளிதாக்கவும் துணைபுரிகிறது. ஆண்களை விட பெண்களுக்குத்தான் இரும்புச் சத்து அதிகம் தேவைப்படுகிறது.

    ×