search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பழ கருப்பையா"

    • தமன்குமார் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'ஒரு நொடி' எனும் திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது.
    • படம் வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    தமன்குமார் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'ஒரு நொடி' எனும் திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகரும், சமூக செயற்பாட்டாளருமான ஆரி அர்ஜுனன் படத்தின் இசையை வெளியிட, தயாரிப்பாளர் சி. வி. குமார், நடிகரும், அரசியல்வாதியும், இலக்கியவாதியுமான பழ. கருப்பையா, எழுத்தாளரும், நடிகருமான வேல. ராமமூர்த்தி உள்ளிட்ட பட குழுவினர் பெற்றுக் கொண்டனர்.

    "எல்லோருடைய வாழ்க்கையிலும் நடைபெறும் ஒரு நொடி. அந்த ஒரு நொடி எதைப் பற்றியதாக வேண்டுமானாலும் இருக்கலாம். எப்படி வேண்டுமானாலும் மாறலாம். அப்படி ஒரு நொடியில் நடைபெற்ற சம்பவம் தான் இந்த படத்தின் கதை. இந்த திரைப்படம் ரசிகர்களுக்கும் பிடிக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்," என்று தெரிவித்தார் இயக்குனர் .

    'ஒரு நொடி' படத்தில் தமன்குமார், எம்.எஸ். பாஸ்கர், வேல. ராமமூர்த்தி, பழ. கருப்பையா, ஸ்ரீ ரஞ்சனி, கஜராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கே.ஜி. ரத்தீஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சஞ்சய் மாணிக்கம் இசையமைத்துள்ளார்.

    இந்நிலையில் படத்தின் டிரெயிலர் வெளியாகியுள்ளது. காணாப்போன கணவனான எம்.எஸ் பாஸ்கர் தேடி போலிசிடம் புகார் கொடுக்கிறார் மனைவி. போலிஸ் கதாப்பாத்திரத்தில் தமன்குமார் நடித்துள்ளார். அதற்கடுத்து என்ன நடந்தது என்பதே கதை. டிரெயிலர் மிக விறுவிறுப்பாக அமைந்துள்ளது. படம் வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • விழாவில் நடிகர் சிவக்குமார் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.
    • என்னை விட பழ.கருப்பையா 2 வயது சிறியவர். என்றாலும் அவரது காலில் விழுந்து வணங்குகிறேன்.

    பிரபல நடிகரான சிவக்குமார் சிறந்த ஓவியராகவும், எழுத்தாளராகவும் மட்டுமின்றி யோகாசனம் மற்றும் உடற்பயிற்சிகள் செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்துள்ளார். பல்வேறு புத்தக வெளியீடு மற்றும் இலக்கிய விழாக்களில் சிறப்புரையாற்றி வருகிறார்.

    அந்த வகையில் காரைக்குடி கண்ணதாசன் மணி மண்டபத்தில் பழ.கருப்பையா எழுதிய இப்படித்தான் உருவானேன் என்ற புத்தக வெளியீட்டு விழா நேற்று நடந்தது. விழாவில் நடிகர் சிவக்குமார் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

    என்னை விட பழ.கருப்பையா 2 வயது சிறியவர். என்றாலும் அவரது காலில் விழுந்து வணங்குகிறேன் என்று பழ.கருப்பையா காலில் விழுந்து வணங்கினார். விழா முடிந்து சிவக்குமார் கீழே இறங்கியபோது முதியவர் ஒருவர் ஆர்வத்துடன் அவருக்கு சால்வை அணிவிக்க முயன்றார். அவரிடம் இருந்த சால்வையை சிவக்குமார் பறித்து எறிந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது. இதுபோன்று சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விழாவில் தன்னோடு செல்பி எடுக்க முயன்ற வாலிபரின் செல்போனை சிவக்குமார் பறித்து எறிந்த சம்பவம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் தற்போது சிவக்குமார் சால்வையை பறித்து எறிந்தது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    ×