search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பரிதாப சாவு"

    • நடந்து சென்று கொண்டிருந்தவர் மீது மோதாமல் இருப்பதற்காக மோட்டார் சைக்கிளை நிறுத்த முயன்றபோது தூக்கி வீசப்பட்டார்.
    • மணவாளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    மணவாளக்குறிச்சி அருகே உள்ள சேரமங்கலத்தைச் சேர்ந்தவர் ஜோசு (வயது 32), தொழிலாளி.

    இவர் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் பிள்ளையார் கோவிலில் இருந்து சேரமங்கலம் நோக்கி சென்றார். பெரிய குளத்தங்கரை பகுதியில் சென்ற போது, அங்கு ஓருவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அவர் மீது மோதாமல் இருப்பதற்காக மோட்டார் சைக்கிளை ஜோசு நிறுத்த முயன்றார். ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை. மோட்டார் சைக்கிளில் இருந்து ஜோசுவும் தூக்கி வீசப்பட்டார்.

    விபத்தை கண்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் பலத்த காயம் அடைந்த ஜோசு சம்பவ இடத்திலேயே பலியானார்.

    மோட்டார் சைக்கிள் மோதியதில் காயம் அடைந்தவர் பறையங்கோட்டையைச் சேர்ந்த பாலையன் (51) என தெரியவந்தது. அவர் சிகிச்சைக்காக திங்கள் நகரில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்ப ட்டு உள்ளார். விபத்து குறித்து மணவாளக்குறிச்சி போலீ சார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தனது பேரனுடன் மோட்டார் சைக்கிளில் வைத்தியநாதபுரம் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது மற்றொரு மோட்டார் சைக்கிள் இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • நாகர்கோவில் போக்குவரத்து பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் வல்லன்கு ரன்விளை பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (வயது 70) . இவர் தனது பேரனுடன் மோட்டார் சைக்கிளில் வைத்தியநாதபுரம் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது மற்றொரு மோட்டார் சைக்கிள் இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த முருகன் ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து நாகர்கோவில் போக்குவரத்து பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

    • எதிர்பாராத விதமாக அங்குள்ள மின் கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதியது
    • திருவட்டார் போலீஸ் இன்ஸ் பெக்டர் ஷேக்அப்துல் காதர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    கன்னியாகுமரி :

    திருவட்டார் அருகே உள்ள பாலத்தோப்பு விளை தோட்டவரம் பகுதியை சேர்ந்தவர் செர்லின் (வயது 28), தொழிலாளி.

    இவரது நண்பர் விஜயன் (31). இருவருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை. நேற்று நண்பர்கள் 2 பேரும் வேர்கிளம்பில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர்.

    ஆற்றூர் நோக்கி சென்ற அவர்கள், வியனூர் மின்விநி யோகம் அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அங்குள்ள மின் கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். பலத்த காயம் அடைந்த அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், செர்லின் இறந்து விட்டதாக தெரிவித்தனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக விஜயன் ஆசாரிப் பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலன் இன்றி விஜயன் இறந்துவிட்டார்.

    விபத்து குறித்து திருவட்டார் போலீஸ் இன்ஸ் பெக்டர் ஷேக்அப்துல் காதர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    ×