search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பரத நாட்டியம்"

    • சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. எம்.ஆர். காந்தி சான்றி தழ்கள் வழங்கி பாராட்டினார்
    • கண்காணிப்பாளர் லட்சுமிபதி உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர கடற்கரை வளாகத்தில் திரு மலை திருப்பதி தேவஸ்தா னத்தின் சார்பில் திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலில் புரட்டாசி கடைசி சனிக்கிழமையை யொட்டி நேற்று இரவு ஒரே நேரத்தில் 100 நாட்டிய நடன பெண் கலைஞர்கள் பங்கேற்ற பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. இதில் சென்னை, செங்கல்பட்டு, ஈரோடு, தூத்துக்குடி, விருதுநகர் உள்பட பல மாவட்டங்களை சேர்ந்த 100 நாட்டிய நடன பெண் கலைஞர்கள் கலந்து கொண்டு பரதநாட்டியம் ஆடினார்கள். இந்த பரத நாட்டியத்தில் கலந்து கொண்ட நடன பெண் கலை ஞர்களுக்கு நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. எம்.ஆர். காந்தி சான்றி தழ்கள் வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் கன்னியாகுமரி திருமலை திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் ஆய்வாளர் கேமதர் ரெட்டி, கோவில் சேவகர்கள் ஜெய ராம், கண்ணன், நிகழ்ச்சி ஒருங்கி ணைப்பாளர் சிவகு மார் மற்றும் திருமலை திருப்பதி தேவ ஸ்தான விஜி லென்ஸ் அதிகாரி விஷ்ணு ராம், கண்காணிப்பாளர் லட்சுமிபதி உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • ஊட்டி தாவரவியல் பூங்காவில் கடந்த 19-ந்தேதி மலர் கண்காட்சி தொடங்கி நேற்றுடன் நிறைவு பெற்றது.
    • கடந்த சில நாள்களுக்கு முன்பு நடைபெற்ற முதலமைச்சா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியில் மாவட்ட வருவாய் அலுவலா் கீா்த்தி பிரியதா்ஷினி, சிலம்பம் சுற்றியது குறிப்பிடத்தக்கது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் தொடங்கி நடைபெறும். இந்த ஆண்டுக்கான கோடை விழா கடந்த 6-ந்தேதி தொடங்கியது.

    ஊட்டி தாவரவியல் பூங்காவில் கடந்த 19-ந்தேதி மலர் கண்காட்சி தொடங்கி நேற்றுடன் நிறைவு பெற்றது.

    இதன் ஒரு பகுதியாக ஊட்டி பழங்குடியினா் பண்பாட்டு மையத்தில் கலை நிகழ்ச்சி, இன்னிசை கச்சேரி, நாடகம், பட்டிமன்றம், ஆடல், பாடல் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    இந்நிலையில், குழந்தைகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பரதநாட்டிய குழுவினருடன் இணைந்து நீலகிரி மாவட்ட வருவாய் அலுவலா் கீா்த்தி பிரியதா்ஷினி, பரதநாட்டியம் ஆடி அசத்தினாா். பின்னா் மற்றொரு பாடலுக்கு தனது மகள் சம்ருதி வர்ணமாலிகாவுடன் பரத நாட்டியம் ஆடியது பாா்வையாளா்களை கவா்ந்தது.

    கடந்த சில நாள்களுக்கு முன்பு நடைபெற்ற முதலமைச்சா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியில் மாவட்ட வருவாய் அலுவலா் கீா்த்தி பிரியதா்ஷினி, சிலம்பம் சுற்றியது குறிப்பிடத்தக்கது.

    இது குறித்து மாவட்ட வருவாய் அலுவலா் கீா்த்தி பிரியதா்ஷின் கூறியதாவது:-

    திண்டுக்கல் மாவட்டம், அண்ணாமலையாா் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கல்வி பயின்றேன். அங்கு எனது தாய் தலைமை ஆசிரியராக பணியாற்றினாா். அப்போது மாணவிகளுக்கு நடனம் சொல்லிக் கொடுப்பாா். அதிலிருந்து நானும் பரதம் கற்றுக்கொண்டேன். அப்போது, கவிதை, பேச்சு, நடனப் போட்டிகளில் கலந்து கொள்வேன். பின்னா் சிலம்பம் கற்றுக் கொண்டேன். கோடை விழாவில் எனது மகளுடன் சோ்ந்து பரதநாட்டியம் ஆடியது பெருமையாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினர்.

    • தெலுங்கானாவை சேர்ந்த பாவனாலயா நாட்டிய பயிற்சி நிலையத்தை சேர்ந்த 18 பரத நாட்டிய கலைஞர்கள், பரத நாட்டியம் ஆடிய படி 14 கி.மீ. தூரம் கிரிவலம் சென்றனர்.
    • நாட்டிய கலைஞர்களுக்கு முன்பாக வாகனத்தில் ஒலிப்பெருக்கி மூலம் பாடல்கள் இசைக்கப்பட்டன.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபடுவார்கள்.

    சில பக்தர்கள், அங்க பிரதட்சணமாக கிரிவலம் செல்லும் நிகழ்வுகளும் அவ்வப்போது நடப்பதுண்டு.

    இந்நிலையில், நேற்று தெலுங்கானாவை சேர்ந்த பாவனாலயா நாட்டிய பயிற்சி நிலையத்தை சேர்ந்த 18 பரத நாட்டிய கலைஞர்கள், பரத நாட்டியம் ஆடிய படி 14 கி.மீ. தூரம் கிரிவலம் சென்றனர். இது அனைவரையும் பெரும் வியப்பில் ஆழ்த்தியது.

    அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் முன்பு நாட்டிய நிகழ்ச்சியை தொடங்கிய நடன கலைஞர்கள், கிரிவலப்பாதை முழுவதும் ஆன்மிக பாடல்களுக்கு தகுந்தபடி நடனமாடிக் கொண்டு கிரிவலம் சென்றனர்.

    நாட்டிய கலைஞர்களுக்கு முன்பாக வாகனத்தில் ஒலிப்பெருக்கி மூலம் பாடல்கள் இசைக்கப்பட்டன.

    நடந்து கிரிவலம் செல்வதே கடும் சவாலாக அமையும் நிலையில், நாட்டியமாடியபடி 18 நடன கலைஞர்கள் கிரிவலம் சென்றது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

    உலக சாதனை முயற்சியாக இதனை மேற்கொண்டதாக நடன கலைஞர்கள் தெரிவித்தனர்.

    ×