search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருப்பதி வெங்கடாஜலபதி"

    • சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. எம்.ஆர். காந்தி சான்றி தழ்கள் வழங்கி பாராட்டினார்
    • கண்காணிப்பாளர் லட்சுமிபதி உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர கடற்கரை வளாகத்தில் திரு மலை திருப்பதி தேவஸ்தா னத்தின் சார்பில் திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலில் புரட்டாசி கடைசி சனிக்கிழமையை யொட்டி நேற்று இரவு ஒரே நேரத்தில் 100 நாட்டிய நடன பெண் கலைஞர்கள் பங்கேற்ற பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. இதில் சென்னை, செங்கல்பட்டு, ஈரோடு, தூத்துக்குடி, விருதுநகர் உள்பட பல மாவட்டங்களை சேர்ந்த 100 நாட்டிய நடன பெண் கலைஞர்கள் கலந்து கொண்டு பரதநாட்டியம் ஆடினார்கள். இந்த பரத நாட்டியத்தில் கலந்து கொண்ட நடன பெண் கலை ஞர்களுக்கு நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. எம்.ஆர். காந்தி சான்றி தழ்கள் வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் கன்னியாகுமரி திருமலை திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் ஆய்வாளர் கேமதர் ரெட்டி, கோவில் சேவகர்கள் ஜெய ராம், கண்ணன், நிகழ்ச்சி ஒருங்கி ணைப்பாளர் சிவகு மார் மற்றும் திருமலை திருப்பதி தேவ ஸ்தான விஜி லென்ஸ் அதிகாரி விஷ்ணு ராம், கண்காணிப்பாளர் லட்சுமிபதி உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 27-ந்தேதி பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.
    • புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை அன்று ஒரு நாளில் மட்டும் 5 ஆயிரத்து 341 பக்தர்கள் தரிசனம்

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி விவேகா னந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர கடற்கரை வளாகத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவில் கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 27-ந்தேதி பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.

    இந்த கோவிலில் ஸ்ரீதேவி பூதேவியுடன் வெங்கடாஜலபதி சன்னதி, பத்மாவதி தாயார் சன்னதி, ஆண்டாள் சன்னதி, கருடாழ்வார் சன்னதி ஆகிய சன்னதிகள் அமைந்துள்ளன.

    இந்த கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கிறார்கள். இது வரை 27 லட்சத்து 30 ஆயிரத்து 302 பக்தர்கள் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனம் செய்துள்ளனர். இந்த திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் திறக்கப்பட்ட 2019-2020-ம் ஆண்டில் 9 லட்சத்து 78 ஆயிரத்து 465 பேரும், 2020-2021-ம் ஆண்டில் 2 லட்சத்து 29 ஆயிரத்து 805 பேரும், 2021-2022-ம் ஆண்டில் 2 லட்சத்து 61 ஆயிரத்து 352 பேரும், 2022-2023-ம் ஆண்டில் 7 லட்சத்து 53 ஆயிரத்து 548 பேரும் தரிசனம் செய்துள்ளனர்.

    இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 77 ஆயிரத்து 684 பேரும், மே மாதம் 1 லட்சத்து 9 ஆயிரத்து 865 பேரும், ஜூன் மாதம் 64 ஆயிரத்து 381 பேரும், ஜூலை மாதம் 62 ஆயிரத்து 240 பேரும், ஆகஸ்ட் மாதம் 61 ஆயிரத்து 666 பேரும், இந்த செப்டம்பர் மாதம் நேற்று வரை 45 ஆயிரத்து 15 பேரும் தரிசனம் செய்துள்ளனர்.

    புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை அன்று ஒரு நாளில் மட்டும் 5 ஆயிரத்து 341 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். இந்த தகவலை கன்னியாகுமரி திருமலை திருப்பதி தேவஸ் தான வெங்கடாஜலபதி கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    ×