search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயணிகள் நலச்சங்கம்"

    • பயணிகள் நலச்சங்கம் வலியுறுத்தல்
    • திருநெல்வேலி-திருவனந்தபுரம், நாகர்கோவில்-கொச்சுவேலி ரெயில்களை இயக்க வேண்டும்

    நாகர்கோவில் :

    ரெயில்வே துறை பல்வேறு வழித்தட ரெயில்களை இணைத்து ஒரே ரெயிலாக இயக்கி வருகிறது. புனலூர்-குருவாயூர், கொல்லம்-செங்கோட்டை, செங்கோட்டை-மதுரை ஆகிய 3 ரெயில்களை இணைத்து ஒரே ரெயிலாக மதுரை-குருவாயூர் என்று இயக்கப்படுகிறது. கடந்த மாதம் மயிலாடுதுறை-திருச்சி, திருச்சி-கரூர், கரூர்-சேலம் ஆகிய 3ரெயில்களையும் இணைத்து ஒரே ரெயிலாக மயிலாடுதுறை-சேலம் என்று இயக்கப்பட்டது. இதற்கு முன்பும் செங்கோட்டை-மதுரை பயணிகள் ரெயில் மற்றும் திண்டுக்கல்-மயிலாடுதுறை ஆகிய 2ரெயில்களையும் இணைத்து நீட்டிப்பு செய்தும் ஒரே ரெயிலாக செங்கோட்டை-மயிலாடுதுறை என்று அறிவிக்கப்பட்டு பல மாதங்களாக இயங்கி வருகிறது.

    கேரளாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோட்டயம்-எர்ணாகுளம் மற்றும் எர்ணாகுளம்-நிலாம்பூர் பயணிகள் ரெயில்களை இணைத்து 173 கி.மீ. தூரத்துக்கு ஒரே ரெயிலாக கோட்டயம்-நீலாம்பூர் ரெயில் என இயக்கப்பட்டது. ஆனால் கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்ட பயணிகள் பயன்படும் வகையில் எந்த ஒரு ரெயிலும் இவ்வாறு இணைத்து இயக்கப்படவில்லை என குமரி மாவட்ட பயணிகள் நலச்சங்கம் குற்றம் சாட்டி உள்ளது.

    மேலும் இந்த சங்கம் சில கோரிக்கைகளையும் விடுத்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    நாகர்கோவில்-கோட்டயம் ரெயில் கோட்டயம் சென்று விட்டால், மறு மார்க்கம் கோட்டயம்-நாகர்கோவில் மார்க்கத்தில் இயக்கப்படுவது கிடையாது. ஆகையால் இந்த ரெயிலை மறுமார்க்கமாக இயக்க வேண்டும். அதற்கு தற்போது இயக்கப்பட்டு வரும் ஒரு சில பயணிகள் ரெயில்களை இணைத்து ஒரே எண் கொண்ட ரெயிலாக கோட்டயம்-நாகர்கோவில் மார்க்கத்தில் இயக்க வேண்டும். இவ்வாறு இயக்கி பின்னர் இந்த ரெயிலை திருநெல்வேலி, விருதுநகர், மானாமதுரை வழியாக ராமேசுவரம் வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும்.

    திருநெல்வேலி-திருவனந்தபுரம் பயணிகள் ரெயில் திருநெல்வேலியில் இருந்து காலை புறப்பட்டு நாகர்கோவிலுக்கு வரும் ரெயிலின் வேகத்தை அதிகப்படுத்தி விரைவாக நாகர்கோவில் வருமாறு கால அட்டவணையை சிறிய அளவில் மாற்றம் செய்து நாகர்கோவில்-கொச்சுவேலிரெயிலுடன் இணைத்து ஒரே ரெயிலாக திருநெல்வேலி-திருவனந்தபுரம் பயணிகள் ரெயிலாக இயக்க வேண்டும்.

    மறுமார்க்கமாக கொச்சு வேலியில் இருந்து மதியம் புறப்படும் ரெயிலின் கால அட்டவணையை மாற்றி மாலை 4.30 மணிக்கு திருவனந்தபுரத்திலிருந்து புறப்பட்டு சுமார் 6.15 மணிக்கு நாகர்கோவில் வந்து இங்கிருந்து நாகர்கோவில்-திருநெல்வேலி ரெயிலையும் இணைத்து திருவனந்தபுரம்-திருநெல்வேலி ஒரே ரெயிலாக இயக்க வேண்டும். கன்னியாகுமரி-திருப்பதி நேரடி ரெயில் தற்போது மதுரைக்கு தெற்கே உள்ள மாவட்ட பகுதிகளிலிருந்து திருப்பதிக்கு செல்ல நேரடி தினசரி ரெயில் சேவை இல்லை. மதுரையிலிருந்து வாரத்திற்கு 3 நாட்கள் மட்டுமே இயங்கி வருகிறது.

    ஆகவே தற்போது திருப்பதியிலிருந்து விழுப்புரத்திற்கு இயக்கப்படும் பயணிகள் ரெயில், மதுரை-விழுப்புரம் ரெயில் ஆகியவற்றை இணைத்து கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்து கன்னியாகுமரி - திருப்பதி என்று இயக்க வேண்டும்.

    திருநெல்வேலி மாவட்ட பயணிகள் வசதிக்காக திரு நெல்வேலி -செங்கோட்டை மற்றும் செங்கோட்டை-கொல்லம் பயணிகள் ரெயில் ஆகியவற்றை இணைத்து ஒரே ரெயிலாக திருநெல்வேலி - கொல்லம் என்று இயக்க வேண்டும். இதேபோல் செங்கோட்டை- –திருநெல்வேலி மற்றும் திருநெல்வேலி-திருச்செந்தூர் ஆகிய 2 ரெயில்களையும் இணைத்து ஒரே ரெயிலாக செங்கோட்டை –திருச்செந்தூர் என்று இயக்க வேண்டும்.

    ராஜஸ்தான் மாநிலத்தின் எந்த ஒரு பகுதிக்கும் மதுரைக்கு தெற்கு உள்ள பகுதிகளில் இருந்து நேரடி ரெயில் இல்லை. தற்போது நாகர்கோவில்-சென்னை எழும்பூர் வாராந்திர ரெயிலின் பெட்டிகளை வைத்து தான், சென்னை எழும்பூர்-ஜோத்பூர் வாராந்திர ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த 2ரெயில்களையும் இணைத்து ஒரே ரெயிலாக கன்னியாகுமரி-ஜோத்பூர் வழி மதுரை, சென்னை என்று இயக்க வேண்டும்.

    தற்போது தென் மாவட்டங்களில் இருந்து திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் போன்ற இடங்களுக்கு செல்ல நேரடி ரெயில் சேவை இல்லை. இதனால் பயணிகள், குறிப்பாக வேளாங்கண்ணி செல்லும் பயணிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். இதற்காக மதுரை-புனலூர் இரவு நேர ரெயிலையும், திருச்சி-காரைக்கால் மெமோ ரெயிலையும் இணைத்து ஒரே ரெயிலாக புனலூர்-காரைக்கால் என்று இயக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக வலியுறுத்தப்பட்டு வந்தாலும் இந்த கோரிக்கைக்கு ரெயில்வே துறை இதுவரை செவி சாய்க்கவில்லை.

    குமரி மாவட்ட பயணிகள் பயன்படும் விதமாக மற்ற பகுதிகளில் இயக்கப்படுவதை போன்று இங்கும் 2 ரெயில்களை இணைத்து இயக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை
    • நாகர்கோவில்-மங்களூர் ஏரநாடு எக்ஸ்பிரஸ் ரெயிலை திருவனந்த புரத்துடன் நிரந்தரமாக நிறுத்த முடிவு

    நாகர்கோவில் :

    ஒடிசா ரெயில் விபத்துக்கு பிறகு ரெயில்வே வாரியம், காரி டார் பிளாக் பணிக்கான கால அளவை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தெற்கு ரெயில்வே, பல்வேறு ரெயில்களின் கால அட்டவணையை மாற்றம் செய்துள்ளது. அதன்படி நாகர்கோவில்-மங்களூர் ஏரநாடு எக்ஸ்பிரஸ் ரெயிலை திருவனந்த புரத்துடன் நிரந்தரமாக நிறுத்த முடிவு செய்யப்பட்டு அதற்கானஉத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ரெயிலை திருவனந்தபுரத்துடன் நிறுத்தம் செய்யும் போது அதற்கு மாற்று ஏற்பாடாக திருவனந்த புரம் - மங்களூர் (16347/16348) ரெயிலை நாகர்கோ வில் வரை நீட்டிப்பு செய்ய வேண்டும் என்று பயணிகள் நலச்சங்கம் வலியுறுத்தி உள்ளது.

    இவ்வாறு நீட்டிப்பு செய்தால் மட்டுமே, ஏரநாடு ரெயிலை திருவனந்த புரத்துடன் நிறுத்தம் செய்ய வேண்டும். இது குறித்து குமரி மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் குரல் கொடுக்க வேண்டும்.

    இதே போல் குமரி மாவட்டத்திலிருந்து வருவாய் குறைவாக இயங்கும் ரெயில்களாக கன்னியா குமரி-திப்ருகார், நாகர்கோ வில்-ஷாலிமார், கன்னியாகுமரி-கத்ரா, திரு நெல்வேலி- பிலாஸ்பூர், கன்னியாகுமரி-புனே போன்ற ரெயில்கள் உள்ளன.

    திருநெல்வேலியிருந்து நாகர்கோவில் டவுண், திருவனந்தபுரம் வழியாக பிலாஸ்பூருக்கு செல்லும் ரெயில் நடு இரவு நேரத்தில் மிகவும் வருவாய் குறைந்து நஷ்டத்தில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் இயங்கும் ஞாயிற்றுக்கிழமை மற்றும் புதன் கிழமைகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும் காரிடார் பிளாக் பணியும் பாதிப்படைகிறது. ஆனால் இந்த ரெயில் நிறுத்தம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடாதது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

    நாகர்கோ வில்-மங்களூர் ஏரநாடு ரெயிலை திருவனந்த புரத்துடன் நிறுத்தியது போல, திருநெல்வேலி-பிலாஸ்பூர் ரெயிலை கொச்சு வேலியுடன் நிறுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதால் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும் 2 நாட்கள் காரிடார் பிளாக் பாதிப்படை யாது.

    இந்த ரெயிலை கொச்சுவே லியுடன் நிறுத்தம் செய்வதற்கு பதிலாக கொச்சுவேலியில் இருந்து கொல்லம், எர்ணாகுளம், மங்களூர், கோவா, மும்பை வழியாக கொங்கன் பாதையில் செல்லும் கொச்சுவேலி – போர்பந்தர் அல்லது கொச்சுவேலி-இந்தூர் ஆகியரெயில்களில் ஏதேனும் ஒரு வாராந்திர ரெயிலை திருநெல்வேலி வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும்.

    இந்த ரெயில்கள் திருநெ ல்வேலி-–ஜாம்நகர் செல்லும் கால அட்டவணை யில் தான் இயக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு இயக்கும் போது குமரி மற்றும் நெல்லை மாவட்ட பயணிகள் மும்பை செல்ல கூடுதல் ரெயில் சேவை கிடைக்கும். ெரயில்வே துறைக்கும் அதிக வருவாய் கிடைக்கும் என்று பயணிகள் நலச் சங்கம் தெரிவித்துள்ளது.

    • பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை
    • கேரளாவுக்கு இரவு நேர ரெயில்கள் என்று சொல்ல ஒரு ரெயில் கூட இதுவரை இயக்கப்படவில்லை.

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி மாவட் டத்திலிருந்து பல்வேறு பணிகளுக்காக தினமும் நூற்றுக்கணக்கான பயணிகள் கேரளாவிற்கு சென்று வருகின்றனர். கன்னியாகும ரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் வயநாடு, மங்களூர், கூர்க்கு போன்ற பகுதி களில் நேரடி இரவு நேர ரெயில் வசதி இல்லாமல் மிகவும் அவதிப்படுகின்றனர்.

    தற்போது குமரி மாவட்டத்திலிருந்து கேரளாவுக்கு செல்ல வேண்டுமானால் மொத்தம் 5 தினசரி ெரயில்கள் இயக்கப்படுகிறது. இதில் அதிகாலையில் செல்லும் 2ரெயில்களில் பயணம் செய்தால் மட்டுமே முழு கேரளாவுக்கும் பயணிக்க முடியும். இந்த ரெயில்களை விட்டால் அடுத்த ரெயிலாக காலையில் 9 மணிக்கு கன்னியாகுமரி- புனே ரெயில், அடுத்து காலை 10.30 மணிக்கு கன்னியாகுமரி - பெங்களுர் ரெயில் ஆகும். காலை 10.30 மணிக்கு புறப்படும் இந்த ரெயிலை விட்டால் 11 மணி நேரம் கழித்து தினசரி ரெயிலாக இரவு சென்னை-குருவாயூர் ரெயில் மட்டுமே உள்ளது.

    இந்த ௩ ரெயில்களும் திருச்சூர், பாலக்காடு வரை மட்டுமே செல்லும். காலை 10.30 மணி முதல் இரவு 9.40 மணி வரை சுமார் 11 மணி நேரம் கேரளாவுக்கு செல்ல எந்த ஒரு தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையும் குமரி மாவட்டத்திலிருந்து கிடை யாது.

    பொதுவாக இரவு நேர ரெயில்கள் என்று இயக்கப்ப டும் ரெயில்கள் எல்லாம் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை ஒரு நகரத்தி லிருந்து புறப்படு மாறு இயக்கப்படும்.

    நாகர்கோவிலில் இருந்து மாலை சென்னை, கோவை, பெங்களுர், மதுரை, ராமேஸ்வரம் போன்ற பகுதிகளுக்கு இரவு நேர ரெயில்கள் இயக்கப்படுகிறது. ஆனால் கேரளாவுக்கு இரவு நேர ரெயில்கள் என்று சொல்ல ஒரு ரெயில் கூட இதுவரை குமரி மாவட்டத்திலிருந்து இயக்கப்படவில்லை.

    குமரி மாவட்டத்தில் 1979-ம் ஆண்டு முதல் ரெயில்கள் இயங்கி வருகிறது. இத்தனை ஆண்டுகள் ஆகியும் திருவனந்தபுரம் கோட்டம் குமரி மாவட்ட பயணிகள் வசதிக்காக ஒரு இரவு நேர தினசரி ரெயிலை கூட இயக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    குமரி மாவட்ட பயணிகள் மங்களுர் மற்றும் வட கேரளா பகுதிகளுக்கு செல்ல ஆம்னி பேருந்துகள், அரசு பேருந்து வசதி, விமான வசதி கிடையாது. இங்கு உள்ள பயணிகளுக்கு ெரயில் வசதி மட்டுமே உள்ளது.

    திருவனந்தபுரத்திலிருந்து மங்களூருக்கு செல்ல 3 தினசரி இரவு நேர ெரயில்கள் தற்போது இயக்கப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் உள்ள பயணிகள் தற்போது பஸ்களில் திருவனந்தபுரம் சென்று விட்டு, அங்கிருந்து புறப்படும் இந்த 3 ரெயில்களிலும் வட கேரளா மற்றும் மங்களூருக்கு பயணிக்கின்றனர். இவ்வாறு குமரி மாவட்ட பயணிகள் நேரடி ரெயில் வசதி இல்லாத காரணத்தால் திருவனந்தபுரம் சென்று பயணிப்பதால் குமரி மாவட்டத்திலிருந்து பயணிக்கும் பயணிகளின் வருவாய் திருவனந்தபுரம் ெரயில் நிலையத்துக்கு சென்று அங்கு வளர்ச்சிக்கு மறைமுகமாக உதவுகிறது.

    குமரி மாவட்ட பயணிகள் வேறு மார்க்கங்களில் பயணி க்க முடியாத காரணத்தால் இந்த 3 மங்களூர் ரெயில்களின் வருவாய் குமரி மாவட்ட பயணிகளின் மூலம் கிடைக்கும் வருவாய் கணிச மான அளவில் உள்ளது. திருவனந்தபுரம்- மங்களூர் ரெயில்களில் ஒரு ரெயிலை நீட்டிப்பு செய்வதால் கேரளா பயணிகளுக்கு எந்த ஒரு பாதிப்பும் இருக்கப்போவது இல்லை.

    கன்னியாகுமரியிலிருந்து நேரடியாக மங்களூருக்கு தினசரி இரவு நேர ெரயில் வசதி செய்து தர வேண்டும் என்று முன்னாள் பாராளு மன்ற உறுப்பினர் டென்னிஸ், 1989-ம் ஆண்டு ெரயில் பட்ஜெட் விவாதத்தில் பங்கேற்று தனது கருத்தை பதிவு செய்துள்ளார். அப்போது முதல் இதுவரை சுமார் 30 ஆண்டுகளாக கன்னியாகுமரியி லிருந்து மங்களூருக்கு தினசரி இரவு நேர ரெயில் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேறாமல் உள்ளது.

    திருவனந்தபுரத்திலிருந்து இயக்கப்படும் ரெயில்களில் 47/48 என்ற எண் கொண்ட ரெயில் சுமார் 20 வருடங்களுக்கு முன்பு கன்னியாகுமரியிலிருந்து இயக்கப்பட்டதாக பல்வேறு தரப்பினர் தெரிவிக்கின்றனர். இந்த ரெயிலை திருவனந்தபுரம் கோட்ட அதிகாரிகள் திருவனந்தபுரத்து டன் நிறுத்தி விட்டனர்.

    இதற்கு மாற்று ஏற்பாடாக இதுவரை எந்த ரெயில் வசதியும் செய்யப்படவில்லை. இந்த கால கட்டத்தில் குமரி மாவட்ட ரெயில் பயணிகளுக்கு ெரயிலை பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் திருவனந்தபுரம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் குமரி மாவட்டத்துக்கு எதிராக செயல்பட்டனர்.

    இந்த கண்ணனூர் ரெயில் 2005-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் மங்களூர் வரை நீட்டிப்பு செய்து 16347/16348 எண் கொண்ட ரெயிலாக திருவனந்தபுரம்-மங்களுர் மார்க்கத்தில் தற்போது இயக்கப்பட்டு வருகிறது.

    திருவனந்தபுரத்தில் இருந்து மங்களூருக்கு இயக்கப்படும் 16347/16348ரெயிலை நாகர்கோவில் அல்லது திருநெல்வேலி வரை நீட்டித்து இயக்க வேண்டும் என்று குமரி மாவட்ட பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திருச்சியிலிருந்து திருநெல் வேலி வரை இயக்கப்பட்டு வந்த இன்டர்சிட்டி ரெயில் கேரளாவின் தலைநகரான திருவனந்தபுரத்துக்கு நீட்டிப்பு செய்யப்பட்டது. இதைப் போன்று திருவனந்த புரம்-சென்னை அனந்தபுரி ரெயில் கேரளா பயணி களுக்காக வேண்டி கொல்லம் வரை நீட்டிப்பு செய்யப்பட்டது.

    இவ்வாறு நீட்டிப்பு செய் யப்பட்டதை போன்று திருவனந்தபுரத்திலிருந்து இயக்கப்படும் மங்களுர் ரெயில்களில் ஒருரெயிலை, திருநெல்வேலி வரை நீட்டிப்பு செய்ய வேண்டும் என்று நெல்லை மாவட்ட பயணிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

    ×