search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவனந்தபுரம்-மங்களூர் இரவு நேர ரெயிலை நாகர்கோவில் வரை நீட்டிக்க வேண்டும்
    X

    திருவனந்தபுரம்-மங்களூர் இரவு நேர ரெயிலை நாகர்கோவில் வரை நீட்டிக்க வேண்டும்

    • பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை
    • நாகர்கோவில்-மங்களூர் ஏரநாடு எக்ஸ்பிரஸ் ரெயிலை திருவனந்த புரத்துடன் நிரந்தரமாக நிறுத்த முடிவு

    நாகர்கோவில் :

    ஒடிசா ரெயில் விபத்துக்கு பிறகு ரெயில்வே வாரியம், காரி டார் பிளாக் பணிக்கான கால அளவை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தெற்கு ரெயில்வே, பல்வேறு ரெயில்களின் கால அட்டவணையை மாற்றம் செய்துள்ளது. அதன்படி நாகர்கோவில்-மங்களூர் ஏரநாடு எக்ஸ்பிரஸ் ரெயிலை திருவனந்த புரத்துடன் நிரந்தரமாக நிறுத்த முடிவு செய்யப்பட்டு அதற்கானஉத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ரெயிலை திருவனந்தபுரத்துடன் நிறுத்தம் செய்யும் போது அதற்கு மாற்று ஏற்பாடாக திருவனந்த புரம் - மங்களூர் (16347/16348) ரெயிலை நாகர்கோ வில் வரை நீட்டிப்பு செய்ய வேண்டும் என்று பயணிகள் நலச்சங்கம் வலியுறுத்தி உள்ளது.

    இவ்வாறு நீட்டிப்பு செய்தால் மட்டுமே, ஏரநாடு ரெயிலை திருவனந்த புரத்துடன் நிறுத்தம் செய்ய வேண்டும். இது குறித்து குமரி மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் குரல் கொடுக்க வேண்டும்.

    இதே போல் குமரி மாவட்டத்திலிருந்து வருவாய் குறைவாக இயங்கும் ரெயில்களாக கன்னியா குமரி-திப்ருகார், நாகர்கோ வில்-ஷாலிமார், கன்னியாகுமரி-கத்ரா, திரு நெல்வேலி- பிலாஸ்பூர், கன்னியாகுமரி-புனே போன்ற ரெயில்கள் உள்ளன.

    திருநெல்வேலியிருந்து நாகர்கோவில் டவுண், திருவனந்தபுரம் வழியாக பிலாஸ்பூருக்கு செல்லும் ரெயில் நடு இரவு நேரத்தில் மிகவும் வருவாய் குறைந்து நஷ்டத்தில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் இயங்கும் ஞாயிற்றுக்கிழமை மற்றும் புதன் கிழமைகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும் காரிடார் பிளாக் பணியும் பாதிப்படைகிறது. ஆனால் இந்த ரெயில் நிறுத்தம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடாதது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

    நாகர்கோ வில்-மங்களூர் ஏரநாடு ரெயிலை திருவனந்த புரத்துடன் நிறுத்தியது போல, திருநெல்வேலி-பிலாஸ்பூர் ரெயிலை கொச்சு வேலியுடன் நிறுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதால் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும் 2 நாட்கள் காரிடார் பிளாக் பாதிப்படை யாது.

    இந்த ரெயிலை கொச்சுவே லியுடன் நிறுத்தம் செய்வதற்கு பதிலாக கொச்சுவேலியில் இருந்து கொல்லம், எர்ணாகுளம், மங்களூர், கோவா, மும்பை வழியாக கொங்கன் பாதையில் செல்லும் கொச்சுவேலி – போர்பந்தர் அல்லது கொச்சுவேலி-இந்தூர் ஆகியரெயில்களில் ஏதேனும் ஒரு வாராந்திர ரெயிலை திருநெல்வேலி வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும்.

    இந்த ரெயில்கள் திருநெ ல்வேலி-–ஜாம்நகர் செல்லும் கால அட்டவணை யில் தான் இயக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு இயக்கும் போது குமரி மற்றும் நெல்லை மாவட்ட பயணிகள் மும்பை செல்ல கூடுதல் ரெயில் சேவை கிடைக்கும். ெரயில்வே துறைக்கும் அதிக வருவாய் கிடைக்கும் என்று பயணிகள் நலச் சங்கம் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×