search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயண நேரம்"

    • எர்ணாகுளம்-வேளாங்கண்ணி ரெயில் பிற்பகல் 1 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை சென்று அடையும்.
    • சென்னை எழும்பூர்- தஞ்சாவூர் ரெயில் இரவு 10.15 க்கு புறப்பட்டு காலை சென்றடையும்.

    தஞ்சாவூர்:

    ரெயில்வே வாரியம் ஆண்டுதோறும் அக்டோபர் 1-ந்தேதி ரெயில்களின் மாற்றப்பட்ட நேரத்தை கொண்ட புதிய கால அட்டவணை வெளியிடுவது வழக்கம். கொரோனா பேரிடர் காரணமாக கடந்த 2020 முதல் 2021 வரை மூன்று ஆண்டுகள் புதிய ரெயில்வே கால அட்டவணை வெளியிடப்படவில்லை.

    இந்நிலையில் தற்போது 3 ஆண்டுகளுக்கு பிறகு புதிய ரெயில்வே கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதன்படி திருச்சி கோட்டத்தின் கீழ் இயக்கப்படும் 40 ரெயில்களின் பயண நேரம் மாற்றப்பட்டு உள்ளது. அனைத்து ரெயில்களும் 5 முதல் 15 நிமிடங்களுக்கு நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    அதன் விவரம் வருமாறு:-

    தஞ்சாவூர்-காரைக்கால் (வண்டி எண்.06832) ரெயில் காலை 6.50 மணிக்கு புறப்பட்டு காலை 9.30 மணிக்கு சென்றடையும். தஞ்சாவூர்-திருச்சி (06683) ரெயில் மாலை 4.05 மணிக்கு புறப்பட்டு மாலை 5.30 மணிக்கு சென்றடையும். மயிலாடுதுறை-திருவாரூர் (06541) காலை 7.10-க்கு புறப்பட்டு காலை 8 மணிக்கு செனறு அடையும். திருவாரூர்-மயிலாடுதுறை (06688) காலை 8.15-க்கு புறப்பட்டு காலை 9.15-க்கு சென்றடையும்.

    திருவாரூர்- மயிலாடுதுறை (06542) இரவு 8.10 க்கு புறப்பட்டு இரவு 9.10 க்கு சென்று அடையும். மன்னார்குடி-திருப்பதி (17408) ரெயில் மாலை 5.10-க்கு புறப்பட்டு பிற்பகல 3.35-க்கு சென்றடையும். மன்னார்குடி- திருச்சி (06827) ரெயில் காலை 6.25-க்கு புறப்பட்டு காலை 9.10 மணிக்கு சென்று அடையும். எர்ணாகுளம்-வேளாங்கண்ணி (16361) ரெயில் பிற்பகல் 1 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 5.15 மணிக்கு சென்று அடையும்.

    விழுப்பும்-மயிலாடுதுறை (06691) ரெயில் மாலை 6.25 க்கு புறப்பட்டு இரவு 9.40 க்கு சென்றடையும். தஞ்சாவூர்-சென்னை எழும்பூர் (16866) இரவு 9.50 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 4.25 மணிக்கு சென்றடையும். சென்னை எழும்பூர்- தஞ்சாவூர் (16865) ரெயில் இரவு 10.15 க்கு புறப்பட்டு காலை 5.10 மணிக்கு சென்றடையும்.

    மேற்கூறியதையும் சேர்த்து திருச்சி கோட்டத்தில் மொத்தம் 40 ரெயில்களின் பயண நேரம் மாற்றப்பட்டு உள்ளதாக திருச்சி கோட்ட ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

    ×