search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பண்டிகை கால மேக்கம்"

    • அழகாக ஜொலிக்க வேண்டும் என்பதுதான் அனைத்து பெண்களின் விருப்பம்.
    • சருமத்திற்கு மாய்ஸ்சுரைசரை பயன்படுத்துவதற்கு மறக்கக்கூடாது.

    பண்டிகை நாட்களில் பளிச்சென்ற முகத்தோற்றத்துடன் அழகாக ஜொலிக்க வேண்டும் என்பதுதான் பெண்களின் விருப்பமாக இருக்கும். பண்டிகை நாள் நெருங்கத் தொடங்கியதும்... பலரும் பலவிதமான அழகு சாதன பொருட்களை பயன்படுத்துவதில் ஆர்வமாக இருப்பர். அவை பக்க விளைவுகள், ஒவ்வாமை ஏற்படுத்தாதவைகளாக அமைந்திருக்க வேண்டும். குறிப்பாக சருமத்தில் ஈரப்பதத்தை தக்கவைப்பதாகவும், இறந்த செல்களை நீக்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும்.

    அதேபோல் பண்டிகை நாள் நெருங்கும் வேளையில் தினமும் சருமத்திற்கு மாய்ஸ்சுரைசரை பயன்படுத்துவதற்கு மறக்கக்கூடாது.

    பண்டிகை காலங்களில் பெண்களை அச்சுறுத்தும் மற்றொரு பிரச்சினையாக முகப்பரு அமையும். அதனை தவிர்க்க வைட்டமின்கள் ஏ மற்றும் ஈ சத்துக்கள் உள்ளடங்கியிருக்கும் மாய்ஸ்சுரைசரை தேர்வு செய்ய வேண்டும். கண்களை சுற்றி கருவளையம் ஏற்படுவதும் சரும அழகை கெடுத்துவிடும். மன அழுத்தம், தூக்க குறைபாடு, ஒவ்வாமை, ஊட்டச்சத்து குறைபாடு போன்றவை கருவளையம் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கின்றன. வைட்டமின் சி, கே மற்றும் ஆல்பா ஹைட்ராக்சி அமிலம் உள்ளடங்கி இருக்கும் கிரீம்கள் கருவளையங்களை கட்டுப்படுத்தும்.

    கருவளையம் போல், கண்கள் வீங்கும் பிரச்சினையையும் சிலர் எதிர்கொள்ள நேரிடும். ஏனெனில் பண்டிகை கால ஷாப்பிங், உறவினர்களை கவனிக்கும் முன்னேற்பாடுகள்... என போதிய தூக்கம் இல்லாமல் போகலாம். வைட்டமின் சி அல்லது ஆன்டிஆக்சிடென்ட் கொண்ட கிரீம்கள் வீங்கிய கண்களின் பிரச்சினையை தீர்க்க துணைபுரியும்.

    சருமத்திற்கு நிரந்தர அழகை கொடுக்கும் தன்மை இயற்கை மூலிகை பொருட்கள், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றுக்கு உண்டு. அவற்றை பயன்படுத்தி ஃபேஸ்பேக் தயாரித்து சரும அழகை பிரகாசிக்க செய்யலாம்.

    ×