search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பக்தர்களுக்கு"

    • நடைபாதை கற்கள் சூடாகி பக்தர்களின் பாதங்களை பதம் பார்த்தது.
    • தார் ரோடு பகுதியில் அடர் வெள்ளை வர்ணம் அடித்துள்ளனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை முருகன் கோவிலில் தினமும் 6 கால பூஜைகள் நடக்கிறது. மேலும் தொடர்ந்து பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழா வருகிறது.

    இந்நிலையில் உள்ளூர், வெளியூர் பக்தர்கள் பள்ளி விடுமுறை தினத்தால் குழந்தைகளுடன் வந்து பூஜைகளில் பங்கேற்று சாமி தரிசனம் செய்கின்றனர்.

    இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வரும் பக்தர்கள் வாகனங்களை நிறுத்தி விட்டு வெகு தூரம் நடக்க வேண்டும்.

    இந்த இடத்தில் தார் ரோடு வெட்ட வெளியாக உள்ளதால் தற்போது வெயில் தாக்கத்தில் சூடாகி நடக்க மிகவும் சிரமப்பட்ட னர். மேலும் கோவில் பரிகாரத்திலும் நடைபாதை கற்கள் சூடாகி பக்தர்களின் பாதங்களை பதம் பார்த்தது.

    குறிப்பாக முதியவர்கள், குழந்தைகள் மிகவும் சிரமப்பட்டனர். இதையறிந்த கோவில் நிர்வாகம் வெயில் தாக்கத்தை கட்டுப்படுத்த கோவில் உள் பிரகாரம் பகுதியில் காயர் மேட் போட்டுள்ளனர்.

    கோவில் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் இருந்து செல்ல தார் ரோடு பகுதியில் அடர் வெள்ளை வர்ணம் அடித்துள்ளனர்.

    இது வெயிலுக்கு இதமாக இருப்பதாகவும், அதிக சூடு கால் பாதங்களில் தாக்குவது இல்லை எனவும் பக்தர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

    • 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • வேலூர் செல்லாண்டி யம்மன் மற்றும் வேலூர் மகா மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர்.

    பரமத்தி வேலூர்:

    ஆடிப்பெருக்கு பண்டிகையை முன்னிட்டு நாமக்கல்மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் , பரமத்தி வேலூர் செல்லாண்டியம்மன், வேலூர் மகாமாரியம்ம னுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம்,மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், விபூதி, தேன் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் அங்காள பரமேஸ்வரி அம்மன், வேலூர் செல்லாண்டி யம்மன் மற்றும் வேலூர் மகா மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர்.

    இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்த்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    அதேபோல் நன்செய் இடையாறு காவிரி ஆற்றங்கரை அருகில் உள்ள சங்கிலி கருப்பண்ணசாமி கோவில், மகா மாரியம்மன் கோவில், திருவேலீஸ்வரர் கோவில் ,ராஜா கோவில், பாண்டமங்கலம் மாரி யம்மன், பகவதி அம்மன் கோவில், கொந்த ளம் மாரியம்மன் கோவில், சேளூர் மாரியம்மன் கோவில், அய்யம்பாளையம் மாரியம்மன் கோவில், ஆனங்கூர் மாரியம்மன் கோவில், வடகரையாத்தூர் மாரியம்மன் கோவில், பச்சையம்மன் கோவில், பரமத்தி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் மற்றும் பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கோவில்களில் ஆடி 18 பண்டிகை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

    இதில் அந்தந்த பகுதி களை சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    ×