பரமத்தி வேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆடி18 பண்டிகையை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடு

18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.வேலூர் செல்லாண்டி யம்மன் மற்றும் வேலூர் மகா மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர்.
வேலூர் மகா மாரியம்மன் அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்திலும்,  கோப்பணம் பாளையம் அங்காள பரமேஸ்வரி அம்மன் ,  பரமத்தி வேலூர் செல்லாண்டியம்மன் சிறப்பு அலங்காரத்திலும் அருள்பாலித்த காட்சி.
வேலூர் மகா மாரியம்மன் அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்திலும், கோப்பணம் பாளையம் அங்காள பரமேஸ்வரி அம்மன் , பரமத்தி வேலூர் செல்லாண்டியம்மன் சிறப்பு அலங்காரத்திலும் அருள்பாலித்த காட்சி.
Published on

பரமத்தி வேலூர்:

ஆடிப்பெருக்கு பண்டிகையை முன்னிட்டு நாமக்கல்மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் , பரமத்தி வேலூர் செல்லாண்டியம்மன், வேலூர் மகாமாரியம்ம னுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம்,மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், விபூதி, தேன் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் அங்காள பரமேஸ்வரி அம்மன், வேலூர் செல்லாண்டி யம்மன் மற்றும் வேலூர் மகா மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர்.

இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்த்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

அதேபோல் நன்செய் இடையாறு காவிரி ஆற்றங்கரை அருகில் உள்ள சங்கிலி கருப்பண்ணசாமி கோவில், மகா மாரியம்மன் கோவில், திருவேலீஸ்வரர் கோவில் ,ராஜா கோவில், பாண்டமங்கலம் மாரி யம்மன், பகவதி அம்மன் கோவில், கொந்த ளம் மாரியம்மன் கோவில், சேளூர் மாரியம்மன் கோவில், அய்யம்பாளையம் மாரியம்மன் கோவில், ஆனங்கூர் மாரியம்மன் கோவில், வடகரையாத்தூர் மாரியம்மன் கோவில், பச்சையம்மன் கோவில், பரமத்தி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் மற்றும் பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கோவில்களில் ஆடி 18 பண்டிகை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

இதில் அந்தந்த பகுதி களை சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com