search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ப.சிதம்பரத்திடம்"

    ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை மீண்டும் விசாரணை நடத்தியது. #Chidambaram #INXMedia
    புதுடெல்லி:

    ப.சிதம்பரம் மத்திய மந்திரியாக இருந்த போது ரூ.305 கோடி வெளிநாட்டு முதலீட்டை பெற ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்துக்கு அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் சட்டவிரோதமாக அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக ப.சிதம்பரம், அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம், ஐ.என்.எக்ஸ். மீடியா இயக்குனர்கள் மற்றும் இந்திராணி முகர்ஜி உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை, சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.இந்த வழக்கில் தன்னை கைது செய்யக்கூடாது என டெல்லி ஐகோர்ட்டில் ப.சிதம்பரம் மனுதாக்கல் செய்திருந்தார். அதன்படி வருகிற 15-ந் தேதி வரை ப.சிதம்பரத்தை கைது செய்யக்கூடாது என அமலாக்கத்துறை, சி.பி.ஐ.க்கு டெல்லி ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்தது. அதே சமயம் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என ப.சிதம்பரத்துக்கு கோர்ட்டு அறிவுறுத்தியது.

    அதன்படி கடந்த மாதம் அமலாக்கத்துறை முன்பு விசாரணைக்கு ப.சிதம்பரம் ஆஜராகினார். இந்நிலையில் நேற்று மீண்டும் ஆஜராக அவருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அதன்படி அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பு ப.சிதம்பரம் ஆஜரானார். அப்போது அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி கேள்விகள் எழுப்பினர். அந்த கேள்விகளுக்கு ப.சிதம்பரம் பதில் அளித்தார். அவருடைய வாக்குமூலத்தை அதிகாரிகள் பதிவு செய்து கொண்டனர்.

    ஏற்கனவே ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு வழக்கிலும் அமலாக்கத்துறை முன்பு ப.சிதம்பரம் ஆஜரானார் என்பது குறிப்பிடத்தக்கது. #Chidambaram #INXMedia
    வெளிநாட்டு சொத்துகளை மறைத்த விவகாரத்தில், ப.சிதம்பரத்திடம் ராகுல் காந்தி விசாரணை நடத்துவாரா என பா.ஜனதா கேள்வி எழுப்பி உள்ளது. #NirmalaSitharaman #RahulGandhi #Chidambaram
    புதுடெல்லி:

    மத்திய ராணுவ மந்திரியும், பாரதீய ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவருமான நிர்மலா சீதாராமன் டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் ப.சிதம்பரம் குடும்பத்தினருக்கு எதிராக எழுந்து உள்ள புகார் தொடர்பாக விரிவாக எடுத்துக்கூறினார். அவர் கூறியதாவது:-

    கொஞ்ச காலமாக முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக வருமான வரித்துறை அதிகாரிகள் நிறைய நடவடிக்கைகள் எடுத்து வருவதாக நாம் கேள்விப்படுகிறோம். இந்தியாவில், காங்கிரஸ் கட்சிக்கு இது நவாஸ் ஷெரீப் தருணம்.

    வெளிநாடுகளில் சொத்துகள் வைத்து இருப்பதை மறைத்தது, வெளிநாடுகளில் சொத்துகள் அல்லது வருமானம் சம்பாதித்ததை பகுதியாகவோ, முழுமையாகவோ கூறாமல் மறைத்த குற்றச்சாட்டின் பேரில், பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு நவாஸ் ஷெரீப்பை தகுதி நீக்கம் செய்து உள்ளது என்பதை நாம் அறிந்து இருக்கிறோம். இதிலும் (ப.சிதம்பரம் விவகாரம்) அதையொத்த நிலைமையை தவற விட்டு விட முடியாது.

    நிதி விவகாரம் ஒன்றில் தற்போது ஜாமீனில் வெளியே உள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இந்த மூத்த தலைவர் (ப.சிதம்பரம்) வெளிநாட்டு வருமானத்தை மறைத்த விவகாரத்தில் நிச்சயமாக கருத்து சொல்ல வேண்டும். அவர் ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்துவாரா என்பது குறித்து நாட்டு மக்களிடம் கூற வேண்டும்.

    வெளிநாட்டில் குவிக்கப்பட்டு உள்ள கருப்பு பணத்தை இங்கே கொண்டு வந்து சேர்ப்போம் என்பது நாங்கள் அளித்த தேர்தல் வாக்குறுதி. எனவேதான் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, வெளிநாடுகளில் குவிக்கப்பட்ட கருப்பு பணத்தை இங்கே கொண்டு வந்து சேர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

    வெளிநாடுகளில் சொத்துகள், வருமானங்களை குவித்து விட்டு, அதை மறைத்து, அது நிரூபணமானால் 120 சதவீதம் வரியும், அபராதமும் விதிக்கப்படும். (10 ஆண்டுகள் வரை) சிறைவாசம் உள்ளிட்ட தண்டனையும் உண்டு.

    வருமான வரித்துறை மதிப்பீடுகளின்படி, ப.சிதம்பரம் குடும்பத்தினர் 14 நாடுகளில், 21 வெளிநாட்டு வங்கி கணக்குகளில் 3 பில்லியன் டாலர் (சுமார் ரூ.20 ஆயிரத்து 100 கோடி) அளவுக்கு சட்ட விரோத சொத்துகளை குவித்து இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.



    நிர்மலா சீதாராமன் வெளியிட்டு உள்ள கருத்து தொடர்பாக ப.சிதம்பரம் டுவிட்டரில் பதில் அளித்து உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    திருமதி நிர்மலா சீதாராமன் பாதுகாப்பு அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, வருமான வரித்துறையின் வழக்கறிஞராக நியமிக்கப்படுகிறார் என்று டெல்லியில் பேச்சு.

    இந்தியாவின் மிகப் பணக்கார கட்சியின் தலைவர் கோடிக்கணக்கான டாலர்களைப் பற்றி கனவு காண்கிறார். அந்த பணத்தை மீட்டு ஒவ்வொரு இந்தியனின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போட வேண்டியதுதானே?

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.   #NirmalaSitharaman #RahulGandhi #Chidambaram
    ×