search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நோயாளி"

    • நாகர்கோவில் பார்வதிபுரத்தில் பொன்ஜெஸ்லி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
    • ஆஞ்சியோகிராம் செய்யப்பட்டு உடனடியாக ரத்தக்குழாயில் ஸ்டென்டிங் போடப்பட்டு ரத்தக்குழாய் அடைப்பு நீக்கப்பட்டது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் பார்வதிபுரத்தில் பொன்ஜெஸ்லி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் கடந்த 9-ந்தேதி 62 வயது முதியவர் ஒருவர் நெஞ்சுவலி மற்றும் மூச்சுதிணறல் காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

    அதன்பின்னர் அவருக்கு டாக்டர்கள் இ.சி.ஜி. மற்றும் எக்கோ பரிசோதனை செய்தனர். இதில் அவருக்கு மேஜர் மாரடைப்பு வந்தது தெரியவந்தது. பின்னர் அவருக்கு ஆஞ்சியோகிராம் செய்யப்பட்டது. இதில், இதயத்தில் உள்ள ரத்தக்குழாய் முழுவதும் கொழுப்பு மற்றும் த்ரோம்பஸால் அடைக்கப்பட்டிருந்தது. உடனடியாக ரத்தக்குழாயில் ஸ்டென்டிங் போடப்பட்டு ரத்தக்குழாய் அடைப்பு நீக்கப்பட்டது. அதன்பிறகு அவருக்கு நெஞ்சுவலி முழுமையாக குறைந்து விட்டது. மறுநாள் அவர் டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்டார். இப்போது அவர் நலமாக உள்ளார். 62 வயது முதியவரின் ரத்தக்குழாய் அடைப்பை நீக்கி பொன் ஜெஸ்லி மருத்துவமனை டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.

    • 109 வெளிநோயாளிகளுக்கு கண்சிகிச்சை அளிக்கப்பட்டது.
    • 109 வெளிநோயாளிகளுக்கு கண்சிகிச்சை அளிக்கப்பட்டது.

    திருவையாறு:

    திருவையாறு சீனிவாசராவ் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இலவச கண்சிகிச்சை முகாம் நடந்தது.

    திருவையாறு ரோட்டரி சங்கமும் கோவை சங்கரா கண் மருத்துவ மனையும் இணைந்து நடத்திய இலவச கண்சிகிச்சை முகாமில் 109 வெளி நோயாளர்களுக்கு கண்சிகிச்சை அளிக்கப்பட்டது.

    33 கண் நோயாளர்களுக்கு கண்புரை கண்டுபிடிக்கப்பட்டு, இலவச. கண் அறுவை சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டு கோவை சங்கராண் மருத்துவ மனைக்கு சிறப்பு பேருந்து மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இம்முகாமில் திருவையாறு ரோட்டரி சங்கத் தலைவர் கணேசன், செயலாளர் செந்தில்குமார் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சேவையாற்றினர்.

    • கொரோனா பேரிடர் காலத்தில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்களுக்கு வாழ்த்துக்கள்.
    • தக்க சிகிச்சை அளித்து எப்படியாவது நோயாளிகளை காப்பாற்ற வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு -2 சார்பாகதேசிய மருத்துவர் தின நிகழ்ச்சி அவினாசி ரோட்டில் உள்ள டி. எஸ். கே. மகப்பேறு மருத்துவமனையில் அனுசரிக்கப்பட்டது. அலகு -2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக மாநகர் நல அலுவலர் மருத்துவர் பிரதீப் வாசுதேவன் கிருஷ்ணகுமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், கொரோனா பேரிடர் காலத்தில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்களுக்கு வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்தார்.

    மருத்துவர் ராய் நினைவாக இந்த தினம் மருத்துவர்களுக்காக கொண்டாடப்படுகிறது. மருத்துவர்கள் தங்கள் கடமையை சரிவர செய்யவேண்டும் . நோயாளிகளிடம் கனிவாக பேசவேண்டும். தக்க சிகிச்சை அளித்து எப்படியாவது அவர்களை காப்பாற்ற வேண்டும் என்றார். மேலும் கடந்த வருடம் தொடங்கி இன்று வரை தமிழக அரசு வழிகாட்டுதலின் படி 30 மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. அனைத்து முகாம்களிலும் அலகு-2 மாணவர்கள் தன்னார்வலராக கலந்து கொண்டு சிறப்பாக சேவை செய்துள்ளனர். இது போல அனைத்து மாணவர்களும் பேரிடர் காலங்களில் சுகாதார துறையுடன் கைகோர்க்கும் போது எங்களுக்கும் உற்சாகம் எழும் என்றார். பிறகு மாணவர்கள் ஒவ்வொரு மருத்துவர்களுக்கும் அவர்கள் தயார்படுத்தி வைத்திருந்த மருத்துவர் தின வாழ்த்து மடலையும், துணிப்பைகளையும், இனிப்புகளையும் வழங்கி மகிழ்ந்தனர்.

    பிறகு அலகு-2 மாணவர்கள் தாராபுரம் ரோட்டில் உள்ள திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரிக்கு சென்று மருத்துவர்களுக்கு வாழ்த்துமடலை அளித்தனர். இறுதியில் மருத்துவர் கலைச்செல்வம் நன்றி கூறினார். மாணவ செயலர்கள் அருள்குமார் மற்றும் பாலசுப்பிரமணியன் தலைமையில் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாட்டினை முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.

    ×