search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நோயாளி தற்கொலை"

    • கடந்த 13 ஆண்டாக நீரழிவு நோயால் அவதிப்பட்டு வந்த செல்வம், கடந்த 27-ந்தேதி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் உள்நோயாளியாக சிகிச்சைக்கு சேர்ந்தார்.
    • தற்கொலை குறித்து கோரிமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    விழுப்புரம் மாவட்டம் ஜானகிபுரம் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வம்(வயது 43), கூலி தொழிலாளி. இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

    கடந்த 13 ஆண்டாக நீரழிவு நோயால் அவதிப்பட்டு வந்த செல்வம், கடந்த 27-ந்தேதி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் உள்நோயாளியாக சிகிச்சைக்கு சேர்ந்தார். நேற்று முன்தினம் இரவு 1.30 மணிக்கு ஜெயலட்சுமி எழுந்து பார்த்தபோது, செல்வம் தனக்குதானே முகத்தில் பிளாஸ்டிக் பையால் மூடி, மருந்து ஏற்றும் பிளாஸ்டிக் டியூப்பால் கழுத்தை இறுக்கி கட்டிய நிலையில் கிடந்தார்.

    அதிர்ச்சியடைந்த ஜெயலட்சுமி நர்சை அழைத்து முதலுதவி செய்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி செல்வம் இறந்தார். இதுகுறித்து கோரிமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நோயாளி ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு ஆஸ்பத்திரிக்கு வந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
    • அண்ணாமலை நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியை சேர்ந்தவர் தவிட்டுமணி (வயது 67). இவருக்கு வாய் புற்றுநோய் ஏற்பட்டது. இதனால் கடந்த 10-ந் தேதி சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு புற்றுநோய்க்கான தனி வார்டில் சிகிச்சை பெற்று வந்தார்.

    அப்போது நோயின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வந்தது. இதனால் வேதனையால் அவர் அவதிப்பட்டார். எனவே உயிர்வாழ்வதைவிட தற்கொலை செய்வது மேல் என தவிட்டுமணி தீர்மானித்தார். அதன்படி இன்று காலை வார்டு வளாகத்தில் உள்ள மாடிப்படிக்கு சென்றார். பின்பு அங்குள்ள கம்பியில் நைலான் கயிற்றால் தூக்குப்போட்டு தவிட்டுமணி தற்கொலை செய்தார்.

    இன்று காலை நோயாளி ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு ஆஸ்பத்திரிக்கு வந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அண்ணாமலை நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    ×