search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நெற்பயிரில் நோய் தாக்குதல்"

    • மழை, வெயில், பனி பொழிவு என மாறி வருவதால் நெற்பயிரில் நோய் தாக்குதல் காணப்படுகிறது.
    • இதனால் வேளாண் துறை சார்பில் விதை பண்ணைகள், வயல்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கீழ்பவானி, தடப்பள்ளி- – அரக்கன்கோட்டை பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் நெல் பயிர் சாகுபடி செய்துள்ளனர். சில மாதமாக மழை, வெயில், பனி பொழிவு என மாறி வருவதால் நெற்பயிரில் நோய் தாக்குதல் காணப்படுகிறது.

    இதனால் வேளாண் துறை சார்பில் விதை பண்ணைகள், வயல்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

    இது குறித்து ஈரோடு விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் மோகனசுந்தரம் கூறியதாவது:

    ஈரோடு மாவட்ட பாசன பகுதிகளில் ஏ.எஸ்.டி.16, டி.பி.எஸ்.5, மேம்படு த்தப்பட்ட வெள்ளை பொன்னி, ஐ.ஆர்.20, ஏ.டி.டி.38, கோ– 51, பி.பி.டி.5204, ஆர்.என்.ஆர்.15048 ஆகிய நெல் ரகங்களில் விதை பண்ணைகள் அமைத்துள்ள னர்.

    விதை பண்ணையில் அதிக நீர் தேங்காமல் வடிகால் வசதி ஏற்படுத்த வும், அதிக தழைச்சத்து அளிக்கக்கூடி உரங்களை குறைந்த அளவில் பயன்படுத்தவும் விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தற்போது நிலவும் பருவ நிலை மாற்றத்தால் மஞ்சள் கரிப்பூட்டை நோய் பரவ சாதகமாக உள்ளது. இந்நோயால் ஒவ்வொரு தானியமும் மஞ்சள் நிறமாக மாற்றம் அடைந்து நெற்பழம் உருண்டைகளாக மாறிவிடும். இதனால் விதை உற்பத்தி பாதிக்கும். தானிய விற்பனையின்போது விலை இழப்பு ஏற்படும்.

    எனவே இந்நோயை கட்டுப்படுத்த நெல் பஞ்சுபுடை பருவத்தில் காப்பர் ைஹட்ராக்ைஸடு மருந்து ஒரு லிட்டருக்கு 2.5 கிராம் என்ற அளவில் தெளிப்பதுடன் மகரந்த சேர்க்கை முடிந்ததும் மீண்டும் ஒரு முறை தெளித்து தரமான விதை உற்பத்தி செய்யலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின் போது ஈரோடு விதைச்சான்று அலுவலர் ஹேமாவதி, உதவி விதைச்சான்று அலுவலர் வெங்கடேசன் ஆகியோர் உடனிருந்தனர்.

    ×